Home பாலியல் ஆண்கள் மருத்துவரிடம் கேட்க தயங்கும் கேள்விகள்

ஆண்கள் மருத்துவரிடம் கேட்க தயங்கும் கேள்விகள்

32

12-1452583101-whylovemakinggetsmorepassionatepostchildbirthஆண்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து மருத்துவர்களிடம் வெளிப்படையாக கேட்க தயங்குகின்றனர். மேலும் உடல்நலம், இனப்பெருக்க உறுப்புக்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதை மருத்துவரிடம் வெளிப்படையாக கூறி வேண்டும். அதை விட்டு, அமைதியாக இருந்தால், பிரச்சனை முற்றி பின் கடும் விளைவை சந்திக்க நேரிடும்.

இப்போது ஆண்கள் மருத்துவரிடம் கேட்க தயங்கும் கேள்விகள் என்ன என்பதை பார்க்கலாம்.

* சில ஆண்களுக்கு மலம் கழிப்பதில் கஷ்டமாக இருக்கும். அதிலும் சிலர் 4-5 நாட்கள் வரை மலம் கழிக்காமல் இருப்பார்கள். பலர் இப்பிரச்சனையைக் குறித்து மருத்துவர்களிடம் கேட்கமாட்டார்கள். இப்படியே பல நாட்களாக இப்பிரச்சனையால் கஷ்டப்பட்டால், மருத்துவரை அணுகி காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் நீண்ட நாட்கள் மலச்சிக்கலால் கஷ்டப்பட்டு வந்தால், அது பெருங்குடல் புற்றுநோய்க்கு அறிகுறியாக இருக்கும். எனவே இப்பிரச்சனையை சாதாரணமாக விடாதீர்கள்.

* சிறுநீரில் இரத்தம் வந்தால், ஒருமுறை தானே என்று நினைத்து விட வேண்டாம். இது உங்கள் சிறுநீரக மண்டலத்தில் தொற்றுக்கள் உள்ளது என்பதைக் குறிக்கிறது. குறிப்பாக ஆண்களுக்கு இந்நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு அவர்கள் அதிக சுகாதாரத்தைப் பின்பற்றாமல் இருப்பது என்று சொல்லலாம். இப்பிரச்சனையை ஆண்கள் மருத்துவர்களிடம் கூறாமல் சாதாரணமாக விட்டால், சிறுநீரக பாதை மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்றுக்கள் அதிகரித்து, அதனால் விரை வீக்கம், சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

* விறைப்புத்தன்மை குறைபாடு யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதிலும் ஏற்படலாம். இதற்கு முக்கிய காரணம், வாஸ்குலர் பிரச்சனைகள் நரம்புகள் அல்லது இரத்த நாளங்களை பாதிப்பது தான். குறிப்பாக மன அழுத்தம், டென்சன் போன்றவற்றால் தான் இந்நிலை ஏற்படும். எனவே உங்கள் பாலியல் வாழ்க்கை சுமுகமாக இருப்பதற்கு, மன அழுத்தம் மற்றும் டென்சனைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

* ஆண்களுக்கு அந்த இடத்தின் மேல் பருக்கள், புண் அல்லது தோல் உரிந்து காயங்கள் இருந்தால், அதனை சாதாரணமாக விட வேண்டாம். இல்லாவிட்டால், அது தீவிரமான பிரச்சனைக்கு வழிவகுக்கும். எனவே இம்மாதிரியான நிலையில் மருத்துவரை தவறாமல் அணுகுங்கள்.

* விந்து சாதாரணமாக அடர்த்தியாகவும், வெள்ளையாகவும் மற்றும் வெவ்வேறு நிலைத்தன்மையையும் கொண்டிருக்கும். இருப்பினும், உங்கள் விந்துவில் இரத்தத்தைக் கண்டால், அதனை சாதாரணமாக நினைத்துவிடாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் விந்துவில் இரத்தம் கலந்திருந்தால், அந்நிலையை ஹெமடோஸ்பெர்மியா என்று அழைப்பார்கள். இது புரோஸ்டேட் சுரப்பியில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.