Home சூடான செய்திகள் ஆண்கள் பெண்களைவிட முட்டாள்கள் !!!

ஆண்கள் பெண்களைவிட முட்டாள்கள் !!!

19

ஆண்கள் பெண்களின் மீது பைத்தியமாக இருப்பதுண்டு, அதனால் அவர்கள் முட்டாள்கள் இல்லை என்று பல ஆண்கள் வாதிடுவதுண்டு. ஆனால் உண்மையில் ஆண்கள் பெண்களைவிட முட்டாள்கள் என்று தற்போதைய ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. எந்த விஷயத்தில் என்று நீங்கள் கேட்பது எனக்கு நன்றாகப் புரிகிறது… ஆண்கள் பெண்களை விட முட்டாள்களாய் இருக்கும் விஷயம் ‘இறப்பது’. அதாவது வித்தியாசமாகவும் முட்டாள்தனமாகவும் உயிரிழப்பதில் பெண்களைவிட ஆண்கள்தான் முன்னிலையில் உள்ளனர். அதனால்தான் ஆண்கள் பெண்களைவிட முட்டாள்கள்.

கடந்த 20 ஆண்டுகளில் முட்டாள்தனமாக இறந்தவர்களுக்கான பட்டியல் டார்வின் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதில் சுமார் 90 சதவீதம் பேர் ஆண்கள். முட்டாள்தனமாக இறந்தவர்களுக்காக, பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் புகழ்பெற்ற அறிவியலாளரான டார்வினின் பெயரில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பட்டியலில் வித்தியாசமான பல இறப்புகள் இருந்தன. உதாரணமாக வெடிகுண்டால் தானாக இறப்பினைத் தேடிக்கொண்ட தீவிரவாதி, கடையில் பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்தும் தள்ளுவண்டியினை இரயிலின் பின்புறம் இணைத்து இரண்டு மைல் தூரம் பயணம் செய்து உயிரிழந்த ஒருவர் என பல வித்தியாசமான இறப்புகள் இதில் இடம்பெற்றன. இன்னொருவரின் இறப்பு மிகவும் முட்டாள்தனமானது, மாடிகளில் எளிதாக ஏறுவதற்கு செயல்படுத்தப்படும் லிஃப்ட் எனப்படும் உயர்தூக்கியில் பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பியினை திருடுவதற்காக அந்த லிஃப்டின் மீது ஏறி நின்று திருடிக்கொண்டிருந்தார். லிஃப்ட் இயங்க ஆரம்பித்து தரைத்தளத்திற்கு செல்லும்போது தரைக்கும் லிஃப்ட்டுக்கும் இடையில் சிக்கி அவர் உயிரிழந்தார். இன்னொரு உதாரணம், ஒருவர் தான் வைத்திருக்கும் ஆயுதம் உண்மை என தன் நண்பர்களிடம் நிரூபிக்க அதை தன் தலையிலேயே வைத்து ஆயுதத்தினை செயல்படுத்தி இறந்தார்.

இது போன்ற பல முட்டாள்தனமான உண்மைச் சம்பவங்கள் இந்த விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டன. 322 சம்பவங்கள் மொத்தமாக பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஆராய்ந்து பார்த்து வீரத்திற்காக அல்லது மற்ற காரணத்திற்காக நிகழ்ந்தவை என 14 சம்பவங்களை பரிந்துரையில் இருந்து நீக்கினர். மீதமிருந்த 318 சம்பவங்களில் சுமார் 282 சம்பவங்கள் ஆண்களைக் குறிப்பதாகவும், வெறும் 36 சம்பவங்கள் பெண்களைக் குறிப்பதாகவும் இருந்தது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால், 318 முட்டாள்தனமான இறப்புகளில் 88.7 சதவீதம் ஆண்களுடையதாகவும், மீதமுள்ள 11.3 சதவீதம் பெண்களுடையதாகவும் உள்ளது. இது ஆண்கள் கிறுக்கத்தனமாக இருப்பதிலும், அதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுவதிலும் பெண்களைவிட அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என்று வெளிப்படுத்துகிறது. இதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் ஆல்கஹால் அதாவது மதுபானத்தின் அளவும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனை மேலும் உறுதி செய்ய மதுபானங்கள் ஆண்களை எவ்வளவு தூரம் முட்டாள்தனமாக மாற்றுகிறது என்ற மற்றொரு ஆய்வினை மேற்கொள்ளப்போவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.