அப்படி தன்னுடைய வாழ்க்கைத் துணையிடம் ஏன் ஆண்கள் பொய் சொல்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?
ஆண்களே சில காரணங்களைக் குறிப்பிடுகிறார்கள்.
தனது மனைவி தன்னை விட மிக அழகாகவும், கவர்ச்சியாக இருப்பதால், அவள் மீது சில சந்தேகம் ஏற்படும். இதனால் உறவில் ஏமாற்றும் உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு சிறு பகுதி தான்.
தன்னுடைய மனைவியை விட வேறு ஒரு பெண் தன்னை அதிகமாக விரும்பி, தன்மீது அதிக அன்பாகவும் புரிதலுடனும் அரவணைத்துச் செல்லும் சமயங்களில், மனைவியிடம் பொய் சொல்லி ஏமாற்ற நேரிடுகிறது.
தாம்பத்திய உறவில் தனது மனைவி, தன்னுடைய விருப்பங்களை நிவர்த்தி செய்யாத போது, அதிகமாக ஈடுபட மறுப்பு தெரிவிக்கும் போது, தன்னை நுசிப்பவரை தேடிச் செல்லும் போது பொய் சொல்லி, ஏமாற்ற வேண்டிய கட்டாயம் வருகிறது.
தனது மனைவியுடன் சேர்ந்த வாழ்க்கையில் எவ்வித சுவாரஸ்யங்களும் இல்லை. அதனால் தனது வாழ்க்கையின் மீது வெறுப்பாக உணரும் பட்சத்தில், ஏமாற்றும் உணர்வுகள் உருவாகிறது.
தங்களுடைய மனைவி எந்த சமயங்களிலும் தங்களின் மீது நம்பிக்கை வைக்காமலே பேசிக்கொண்டிருக்கும்போது, தன்னுடைய உணர்வை மதிக்கும் வேறு நபர் தேவைப்படுகிறார்.
ஒரு இனிமையான இல்லற வாழ்க்கையில் புரிதல், அன்பு எனும் உணர்வு மிகவும் முக்கியம். எனவே கணவன், மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள மறுக்கும்போது, தான் செய்வது தான் சரியாக இருக்க முடியும், தன்னுடைய கணவர் என்ன சொன்னாலும் அது உருப்படாது என்பது போன்ற நடவடிக்கைகள் ஆண்களை எரிச்சலடையச் செய்கின்றனவாம். அதனாலேயே பல சமயங்களில் ஆண்கள் மனைவியிடம் பொய் சொல்கிறார்களாம்.