Home உறவு-காதல் ஆண்கள் உடலை மட்டும் தான் விரும்புகிறார்கள் என பெண்கள் அறியும் 10 அறிகுறிகள்!

ஆண்கள் உடலை மட்டும் தான் விரும்புகிறார்கள் என பெண்கள் அறியும் 10 அறிகுறிகள்!

30

images (4)தற்போதைய காலக்கட்டத்தில், காதல் எனும் வார்த்தைக்கு வேறு அர்த்தம் நிலவி வருகிறது. ஓரிரு நிமிடங்களில் பூக்கும் உறவு, ஒருசில மாதங்கள் கூட பலர் மத்தியில் நீடிப்பது இல்லை என்பது தான் நிதர்சனம். இன்றைய கல்லூரி காதல் கதைகள் பெரும்பாலும் இவ்வாறு தான் இருக்கின்றன. இவன் / இவள் தனது “ஆள்” என்று கூறிக்கொள்ள ஒரு நபர் தேவைப்படுகிறது.

இதுப்போன்ற மனதில் இறுக்கம் இல்லாத உறவுகளில் தான், உடல் ரீதியான இறுக்கங்கள் உடனே பற்றிக் கொள்கின்றன. இதற்காக அனைவரும் மோசம் என்று கூறிவிட முடியாது. சில பெண்கள் தங்களை தவறாக ஒரு ஆண் எண்ண நினைக்கும் போதே அவனை விட்டு தூர விலகிவிடுவாள்.

அவ்வாறு, ஓர் ஆண் தன்னுடன் உடல் ரீதியாக மட்டுமே பழக நினைக்கிறான் என்பதை இந்த அறிகுறிகளை வைத்து பெண்கள் அறிந்துக் கொள்கிறார்கள்…..

இரவு வெளியே அழைப்பது
மாலை வேளைக்கு பிறகு இரவு நேரங்களில் தங்களை வெளியிடங்களுக்கு அழைப்பதை வைத்து தான் ஒருவன் தங்களது உடலை மட்டுமே விரும்புகிறான் என பெண்கள் அறிந்துக் கொள்கிறார்களாம்.

மேலோட்டமான பார்வை
எவ்வவளவு முக்கியமாக பேசிக் கொண்டிருந்தாலும், தங்களை மேலோட்டமாக நோட்டம் விட்டுக்கொண்டு இருப்பதை பெண்கள் மிகவும் வெறுப்பது மட்டுமின்றி, இதை மோசமான செயலாக கருதுகிறார்கள்.

பேசுவதற்கு வெறுப்பது
சிலர் தங்களுடன் அதிகம் பேசுவதை விடுத்து, தீண்டுதலில் மட்டுமே குறியாக இருப்பதை வைத்தும் பெண்கள் ஆண் வெறும் உடல் ரீதியான உறவிற்காக தான் தங்களுடன் பழகுகிறான் என அறிந்துக் கொள்கிறார்கள்.

உடல் ரீதியாக புகழ்வது
இந்த உடை உன் உடலுக்கு கச்சிதமாக இருக்கிறது, இந்த உடை தான் உடலை அழகாக காட்டுகிறது என்று உடல் ரீதியாக புகழ்ந்து பேசுவது.

தன் இடத்திற்கு அழைப்பது
எங்கேனும் வெளியே செல்ல திட்டமிடும் போதெல்லாம், முதலில் தன் இடத்திற்கு அழைப்பது. இதை வைத்து பெண்கள் ஆரம்பக்கட்டத்திலேயே ஓர் ஆண் தன்னுடன் உடல் ரீதியாக பழக தான் விரும்புகிறான் என்று கண்டரிந்துவிடுவர்கள்.

வெளியே சொல்ல மறுப்பது
நண்பர்கள், வீட்டார், அலுவலக தோழர்கள் மத்தியில் தனது காதல் பற்றி வெளிப்படையாக கூற மறுக்கும் போது, ஆண்கள் மீது பெண்களுக்கு சந்தேகம் வலுக்கிறது.

நண்பர்களுடன் தவறாக பேசுதல்
தன்னை பற்றி தனது நண்பர்களுடன் தவறாக பேசுதல், கொச்சைப்படுத்தும் வகையில் உருவகம் செய்தல் போன்றவையும் அறிகுறிகளாக இருக்கின்றன.

கட்டாயப்படுத்தி அமர்த்துவது
நீங்கள் செல்ல வேண்டும் என்று கூறும் போதும் கூட, அதிக நேரம் ஒரே இடத்தில் இருக்க வைக்க முயற்சிப்பது.

மரியாதை தவறுதல்
மரியாதை தராமல் இருப்பது. தங்களை ஓர் அடிமை போல நடத்துவது போன்றவற்றை வைத்து ஓர் ஆண், தங்களை உடலுக்காக மட்டுமே பயன்படுத்த முயல்கிறான் என பெண்கள் அறிந்துக் கொள்கிறார்கள்.

விட்டு செல்தல்
உடலுறவுக்கு அழைக்கும் போது மறுப்பு தெரிவித்தல் அல்லது நிர்வாணமாக காண வற்புறுத்தும் போது மறுக்கும் பட்சத்தில் விட்டுவிட்டு போய்விடுவது ஒருவர் உடலுக்காக மட்டும் தான் விரும்புகிறார் என்று வெளிப்படையாக தெரிந்துவிடுகிறது.