உடலுறவு என்பது ஆரோக்கியமான வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது. இது உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்ததாக உள்ளது. உடலுறவு என்பது இருவரது மனமும் ஒத்துப்போனால் மட்டுமே நடக்க வேண்டும். இது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முதல்படியாகும். ஆனால் ஒரு சில காலகட்டங்களில் உடலுறவு கொள்ளாமல் இருப்பது என்பது அவசியம், குறிப்பாக பெண்களின் மாதவிடாய் காலம் என்பது அவர்களுக்கு வலி மிகுந்ததாக இருக்கும், அது மட்டும் இல்லாமல் இந்த காலத்தில் உடலுறவு கொள்வது அவ்வளவு சுத்தமானதாக இருக்காது. மேலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள், குழந்தை பிறந்த பிறகு எல்லாம் உடலுறவு கொள்ள கூடாது. அதுபோல ஆண்களும் அதிகமாக காய்ச்சல் உள்ள நேரங்களில் உடலுறவு கொள்வது என்பது கூடாது.
காய்ச்சல் ஆண் காய்ச்சலின் போது உடல் பலவீனமாகி விடுகிறான். இதனால் உடலுறவில் ஈடுபட முடியாத ஒரு நிலை உருவாகிறது. இது போன்ற சூழ்நிலைகளின் போது அவரை கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபட செய்யக் கூடாது. இது முற்றிலும் தவறான ஒன்றாகும். காய்ச்சல் அதிகமாக இருக்கின்ற சூழ்நிலையின் போது அந்த ஆணை தேவையான அளவு ஓய்வு எடுக்க சொல்ல வேண்டியது அவசியமாகும்
குழந்தைக்கான பிளான் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் என்றால், காய்ச்சல் இருக்கும் சமயத்தில் உடலுறவு கொள்ள வேண்டாம். அதுவும் ஆணுக்கு மிக அதிகமாக காய்ச்சல் இருக்கும் சூழ்நிலை இருந்தால், அப்போது நீங்கள் அப்போது நீங்கள் குழந்தைக்கான ஏற்பாட்டை தள்ளிப்போட வேண்டியது அவசியமாகும்
முழு பலன் நீங்கள் ஏன் காய்ச்சலுடன் இருக்கும் நேரத்தில் குழந்தைக்கான முடிவை தள்ளிப்போட வேண்டும் என்றால், காய்ச்சலின் போது உடலுறவு கொண்டால், அந்த அளவுக்கு முழு பலன் கிடைக்காது.
உடல் வெப்பநிலை காய்ச்சலின் போது உடலின் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும். அந்த நிலையில் இது விந்தணுக்களின் திறனை தற்சமயம் மட்டும் பாதிக்கும். அதுவே நீண்ட உங்களது கணவர் மிக நீண்ட நாட்களாக காய்ச்சலினால் அவதிப்பட்டு வந்தால் அது அவரது உடலின் வெப்பத்தை அதிகரித்து அவரது விந்தணுக்களின் செயல் திறனை பாதிக்கும். இது இரண்டு, மூன்று மாதங்களுக்கு விந்தணுக்களின் திறனை சற்று குறைவாக வைத்திருக்கும்
நச்சுக்கள் நீக்கம் எனவே உங்களது கணவர் மிக அதிமான காய்ச்சலில் நன்றாக பாதிக்கப்பட்டிருந்தால், அவரது உடலில் உள்ள நச்சுகளை நீக்க வேண்டியது அவசியம். இதனால் மீண்டும் ஆரோக்கியமான உயிரணுக்கள் உற்பத்தியாகும்.
பூண்டு பூண்டு இதயத்திற்கு நல்லது என அறியப்பட்டாலும், அது நச்சுப் பண்பை நீக்கும் உணவாகவும் செயல்படுகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள நச்சுயிர் எதிர்ப்பி, பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்களே. பூண்டில் அல்லிசின் என்ற ரசாயனம் உள்ளது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தி நச்சு பொருட்களுக்கு எதிராக போரிடும். கொஞ்சம் பூண்டை நசுக்கி, உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
க்ரீன் டீ உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கு உள்ள சிறந்த வழிகளில் மற்றொன்று – உங்கள் உணவில் க்ரீன் டீயை சேர்த்துக் கொள்வது. இது உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும். க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், உங்கள் கல்லீரலை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உட்பட அனைத்து நோய்களில் இருந்து பாதுகாக்கவும் இது உதவிடும்.
இஞ்சி கொழுப்பு நிறைந்துள்ள உணவுகள் மற்றும் மதுபானத்தை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா? இது உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கும். குமட்டலில் இருந்து நிவாரணம், செரிமான அமைப்பில் மேம்பாடு, வயிற்று பொருமல் மற்றும் வாய்வை குறைக்க இஞ்சியை பயன்படுத்துங்கள். இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவிடும். ஆகவே நீங்கள் குடிக்கும் ஜூஸ்களில் நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது சீரான முறையில் இஞ்சி டீ குடியுங்கள்.
எலுமிச்சை நச்சுப் பண்பை நீக்கும் புகழ் பெற்ற மற்றும் சிறப்பான உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது எலுமிச்சை. எலுமிச்சையில் வைட்டமின் சி என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் அடங்கியுள்ளதால், அது உங்கள் சருமத்திற்கு பல மாயங்களை நிகழ்த்தும். அதேப்போல் இயக்க உறுப்புகளை உருவாக்கும் நோய்களுக்கு எதிராக போராடும். எலுமிச்சையால் உங்கள் உடலில் அல்கலைன் தாக்கமும் ஏற்படும். இதனால் உங்கள் உடலின் அமிலகாரச் சமன்பாடு மீட்கப்படும். இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு மேம்படும். கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கப்பட்ட வெந்நீரை குடித்து உங்கள் நாளை தொடங்குங்கள். இதனால் உங்கள் உடலில் இருந்து நச்சுப்பொருட்கள் வெளியேறி உடல் சுத்தமாகும். நச்சுப் பண்பை நீக்கும் புகழ் பெற்ற மற்றும் சிறப்பான உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது எலுமிச்சை. எலுமிச்சையில் வைட்டமின் சி என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் அடங்கியுள்ளதால், அது உங்கள் சருமத்திற்கு பல மாயங்களை நிகழ்த்தும். அதேப்போல் இயக்க உறுப்புகளை உருவாக்கும் நோய்களுக்கு எதிராக போராடும். எலுமிச்சையால் உங்கள் உடலில் அல்கலைன் தாக்கமும் ஏற்படும். இதனால் உங்கள் உடலின் அமிலகாரச் சமன்பாடு மீட்கப்படும். இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு மேம்படும். கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கப்பட்ட வெந்நீரை குடித்து உங்கள் நாளை தொடங்குங்கள். இதனால் உங்கள் உடலில் இருந்து நச்சுப்பொருட்கள் வெளியேறி உடல் சுத்தமாகும்.
பீட்ரூட் பீட்ரூட்டில் மெக்னீசியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது பலவித உடல்நல பயன்களை அளிக்கிறது. இந்த சூப்பர் உணவு கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. பீட்ரூட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ உண்ணலாம். பீட்ரூட்டை ஜூஸ் போட்டும் கூட குடிக்கலாம்.
சூடான நீர் ஆண்கள் கண்டிப்பாக சூடான நீரில் குளிக்க கூடாது. இது ஆண்களின் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை குறைக்கும். இதுவே குளிர்ந்த நீரில் அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது.
இறுக்கமான உள்ளாடைகள் இறுக்கமான உள்ளாடைகளை அணிவது என்பது உடலில் உருவாகும் வெப்பம் வெளியேற தடையாக உள்ளது. இதனால், வெப்பம் உள்ளேயே இருந்து உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் விந்தணுக்களின் திறன் குறைகிறது.
போன் செல்போன்கள் வெப்பம் மற்றும் கதிர்வீச்சுகளை உமிழும் என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான். நீங்கள் உங்களது பேண்ட் பாக்கெட்டில் செல்போனை வைப்பது விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு கெடு விளைவிக்கும் ஒன்றாக அமையும்.
தீய பழக்கங்கள் உங்களுக்கு புகையிலை, சிகரெட் பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் இருந்தால், அதனை கைவிட வேண்டியது அவசியம். அது உங்களது விந்தணுக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.