Home சூடான செய்திகள் ஆண்களை குஷிப்படுத்தும் “இல்லற” விஷயங்கள்

ஆண்களை குஷிப்படுத்தும் “இல்லற” விஷயங்கள்

35

280048443ஈட்டி, கம்பை பிடித்து சேற்றில் இறங்கி விவசாயம் செய்த காலத்தில் இருந்து, ஐ.டி. கம்பெனியில் கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்து வெப் டெவலப் செய்யும் வரை. ஆண்கள் எதிர்பார்ப்பது ஓர் நல்ல இல்லற வாழ்க்கை.

சண்டை, சச்சரவுகள் இல்லாமல், குற்றம், குறை கூறாமல். புரளி பேசாமல் ஓர் மனைவி அமைந்துவிட்டால் ஆண்களுக்கு வீடே சொர்க்கமாகிவிடும். (ஹலோ.., ஹலோ, ஒரு பேச்சுக்குதா… உடனே கற்பனைக்கு போயிட வேணாம்…)

இல்லற வாழ்க்கையில் உடலுறவை தாண்டிய ஓர் இன்பம் இருப்பதாக பரவலாக அனைவரும் கூறுவார். அது இந்த மாடர்ன் உலகில் ஆண்களுக்கு எவ்வாறு அமைகிறது, எவ்வாறு அமைந்தால் அவர்கள் குஷியாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்…

காலை எழுந்ததும் காபி, நியூஸ் பேப்பர்

ஒவ்வொரு ஆணும் காலை எழுந்தவுடன் தங்கள் மனைவியிடம் இருந்து எதிர்பார்ப்பது ஆசை முத்தங்களோ, இறுக்கிப்பிடித்து ஒரு கட்டிப்பிடி வைத்தியமோ கிடையாது. சுவையான காபி மற்றும் தமிழ் நாளிதழ். இது கிடைத்தாலே ஆண்கள் பெரும்பாலும் காலையில் குஷியாகிவிடுவார்கள்.

அலுவலகம் செல்லும் போது..

காலையில் அலுவலகம் செல்லும் போது சிரித்த முகமும், ஆசை முத்தமும் மட்டும் கிடைத்தாலே போதும். அன்றைய நாள் ஆண்களுக்கு மிக சிறப்பானதாக அமையும்.

மாமியார், மருமகள் சண்டை

உலக போர் ஓய்ந்து கூட எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இந்த மாமியார், மருமகள் சண்டைகள் எத்தனை யுகங்கள் கழிந்தால் ஓயுமோ.. யாருக்கு தெரியும். அப்படி சண்டைப் போட்டுக் கொண்டால் கூட, அது ஆண்களின் காதுகளுக்கு எட்டாத வரையில் தான் ஆண்களின் இன்பம் நிரந்தரம். இல்லையேல், பறந்திடும்!!!!

குறை சொல்லாத நாள்

ஐ.டி கம்பெனியில் பாஸிடம் கூட நற்பெயர் வாங்கிவிடலாம். ஆனால், கட்டிய மனைவியிடம் நற்பெயர் வாங்குவது மிகவும் கடினம். இதில், பக்கத்துக்கு வீட்டு ஆணை பற்றி அவரது மனைவி ஏதாவது குறைக் கூறினால், வாய் கூசாமல்,”எங்க வீட்டில மட்டும் என்ன? எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதரி தான் அக்கா…” என்று கூறிவிடுவார்கள்

மங்களகரமான மாலை

அலுவலக வேலை முடிந்து வீடு திரும்பும், போது முகம் கழுவி, பூ வைத்துக் கொண்டு, வாசலில் வந்து மனைவி வரவேற்ப்பது (கனவுல கூட நடக்காது..) தான் உச்சகட்ட இன்பம். அந்த முகத்தை கண்டால் அலுவலக மன அழுத்தங்கள் எல்லாம் மலையேறி போய்விடும்.

புரளி பேசுவது

பெண்களுக்கு புரளி பேசும் குணம், பிறவியிலேயே உட்செலுத்தப்பட்டது போல, யாரோ எங்கோ ஏதோ செய்தால் கூட இங்கு புலம்பி தள்ளுவார்கள்.

சீரியல் கில்லர்ஸ்

இல்லறத்தில் ஓர் ஆண் மிக மிக குஷியாக இருக்கிறான் என்றால், அந்த வீட்டு பெண்கள் சீரியல் பார்ப்பதில்லை என்று தான் அர்த்தம். இதில், ஐ.டி கம்பெனிகள் அதிகமானதால், ஆபீஸ் சூழலை வைத்தே, கொன்று எடுக்கும் சீரியல்களை எடுத்து தொல்லை செய்கிறது ஒரு கூட்டம்.

இன்பமான இரவு

எங்கு சுற்றி, எப்படி முடிந்தாலும்.. தாலி கட்டிய ஆணுக்கு, கட்டிலில் தான் அவனது சந்தோஷம் நிறைவடைகிறது. (ச்சே.. ச்சே… கச முசா எல்லா இல்லைங்க.. சில வீட்டுல பொண்டாட்டீஸ் பெட்ரூம்’ல கூட பொலம்பி தள்ளி சாவடிப்பாங்க, அத சொன்னேன்!!) படுக்கை அறையில் அமைதியான பொண்டாட்டி வாய்க்கப் பெற்றவனே, முழுமையாக குஷியாய் இருக்கும் ஆண் மகன்.