Home பெண்கள் அழகு குறிப்பு ஆண்களே! ஷேவிங் செய்த பின் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படாமலிருக்க சில டிப்ஸ்…

ஆண்களே! ஷேவிங் செய்த பின் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படாமலிருக்க சில டிப்ஸ்…

31

14-1450080287-3-heightஆண்களை தங்கள் முகத்தை அழகாக வெளிப்படுத்த செய்யும் ஓர் செயல் தான் ஷேவிங் செய்வது. ஆனால் அப்படி ஷேவிங் செய்யும் ஆண்களுக்கு, ஷேவிங் செய்த பின்னர் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படக்கூடும். இதற்கு காரணம், அவர்களுக்கு சரியான முறையில் ஷேவிங் செய்ய தெரியவில்லை என்று தான் கூற வேண்டும். ஷேவிங் க்ரீம் தீர்ந்துவிட்டதா? கவலையவிடுங்க…
ஆம், ஷேவிங் செய்வதற்கு ஒருசில வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி வந்தால், ஷேவிங் மூலம் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பைத் தடுக்கலாம். இங்கு ஷேவிங் செய்த பின்னர் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படாமலிருக்க ஒருசில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, அதன்படி ஷேவிங் செய்து வந்தால், நிச்சயம் அப்பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். உங்களுக்கு இருப்பது எந்த வகையான சருமம் என்று தெரியாதா…? ஷேவிங் செய்த பின் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படாமலிருக்க சில டிப்ஸ்…

குளுமைப்படுத்தவும்
ஷேவிங் செய்யும் முன், முதலில் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சூடான நீரில் கழுவுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் சுடுநீரில் கழுவினால், சருமம் அதிக வறட்சிக்கு உள்ளாகி, அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் சுடுநீரினால் சருமத்திற்கு அருகில் உள்ள சிறு இரத்த நாளங்கள் உடைய வாய்ப்புள்ளது.

10 நிமிடம் அமரவும்

காலையில் தூங்கி எழுந்ததும், மற்ற வேளைகளை விட இத்தருணத்தில் முகம் சற்று வீங்கி இருக்கும். எனவே தூங்கி எழுந்ததும் உடனேயே ஷேவிங் செய்வதைத் தவிர்த்து, 10 நிமிடம் கழித்து ஷேவிங் செய்யுங்கள்

விடுமுறை தேவை

வாரத்திற்கு ஒருநாளாவது ஷேவிங் செய்யாமல் இருங்கள். இதனால் முகச் சருமத்திற்கு சற்று ஓய்வு கிடைக்கும். இல்லாவிட்டால், சரும செல்களுக்கு ஓய்வு கிடைக்காமல், முகம் பொலிவிழந்து காணப்படும். மேலும் மென்மையிழந்தும் இருக்கும்.

ஷேவிங் ஜெல் தடவும் முறை

ஷேவிங் ஜெல் அல்லது க்ரீமை கைவிரலால் தடவி, வட்ட வடிவில் தேய்த்து விட வேண்டும். ஏனெனில் கன்னத்தில் வளரும் முடியானது ஒவ்வொரு திசையில் வளர்வதால், வட்ட வடிவில் தேய்த்து விடும் போது, அனைத்து பகுதியிலும் க்ரீம் பரவி, கன்னங்களில் உள்ள முடி எளிதில் வெளியே வருவதற்கு ஏற்றவாறு வழி செய்யும்.

மென்மையாக ஷேவ் செய்யவும்

பல ஆண்களும் சற்று அழுத்தி ஷேவிங் செய்தால், முடி முழுமையாக வெளியே வந்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் தற்போதைய மார்டன் ரேசர்கள் லேசான அழுத்தத்தைக் கொடுத்தாலே, முடி முழுவதும் வெளியேறக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லை. அழுத்தம் குறைவாகக் கொடுப்பதால், எரிச்சலும், அரிப்புக்களும் குறையும்.

சுடுநீர் குளியல்

தாடியை இன்னும் சௌகரியமாக எடுக்க வேண்டுமானால், சுடுநீர் குளியலை மேற்கொண்ட பின் இறுதியில் எடுக்கலாம். இதனால் மயிர்கால்கள் தளர்ந்து மென்மையாக இருக்கும். இப்போது எடுப்பதன் மூலம் தாடியை மிகவும் சுலபமாக நீக்கலாம்.

எதிர் திசையில் ஷேவிங் வேண்டாம்

சில ஆண்கள் முடி வளரும் திசைக்கு எதிர்திசையை நோக்கி ஷேவிங் செய்தால், முடி முழுமையாக வெளியேறும் என்று நினைக்கின்றனர். ஆனால் அப்படி செய்தால், சருமத்தில் வெட்டுக்காயங்களுடன், எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படக்கூடும். எனவே எப்போதுமே முடி வளரும் திசையை நோக்கியே ஷேவிங் செய்யுங்கள்.

ஷேவிங் ஆயில்

சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் ஷேவிங் லோஷன் பயன்படுத்தினால், அதனால் மேலும் அரிப்புக்களையும், எரிச்சல்களையும் ஏற்படுத்தும். எனவே ஷேவிங் லோசன் பயன்படுத்துவதற்கு பதிலாக கடைகளில் விற்கப்படும் ஷேவிங் ஆயிலைப் பயன்படுத்தலாம். இதனால் சரும வறட்சியும் தடுக்கப்படும், எரிச்சல் மற்றும் அரிப்பும் வராமல் இருக்கும்.

கற்றாழை

அடிக்கடி ஷேவிங் செய்து வரும் ஆண்களின் முகச்சருமம் மிகவும் சென்சிடிவ்வாக இருப்பதோடு, வறட்சியடையவும் செய்யும். எனவே ஷேவிங் செய்த பின்னர் இறுதியில் கற்றாழை ஜெல்லைக் கொண்டு கன்னங்களில் மசாஜ் செய்யுங்கள்.

ஆஃப்டர் ஷேவ்

ஷேவிங் செய்து முடித்த பின் பயன்படுத்தும் ஆஃப்டர் ஷேவ் லோசனில் ஆல்கஹால் இருப்பதால், அது சருமத்தை வறட்சியடைச் செய்வதோடு, எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும். எனவே ஆஃப்டர் ஷேவ் பயன்படுத்துவதற்கு பதிலாக, ஆஃப்டர் ஷேவ் பாம் அல்லது மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துங்கள்.

மழுங்கிய பிளேடு வேண்டாம்

ஒரே பிளேடை பல நாட்களாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். ஒரு வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் பிளேடை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், அது உங்கள் முகத்தை பதம் பார்த்துவிடும்.