Home சூடான செய்திகள் இப்படி புரிந்தால் பெண்களை இலகுவாக அப்பிட்டு போகலாமாம்

இப்படி புரிந்தால் பெண்களை இலகுவாக அப்பிட்டு போகலாமாம்

16

aankaleபெண்களிடம் நெருங்கி பழகுவதற்கும், அவர்கள் உங்களை பற்றி பேசுவதற்கும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்..?
நிச்சயம் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகள் பெண்களிடம் நெருங்கி பழகுவதற்கான நிலைக்கு எடுத்துச் செல்லும். மேலும் பெண்களுடன் வெளியே செல்ல, நீங்கள் அவர்களிடம் கெஞ்சுவது போய், உங்களுடன் வருவதற்கு அவர்கள் போட்டியிடும் நிலைமையும் வந்து விடும்.
என்ன பாய்ஸ்… ரெடியா…?
01.பேஷனான, பொருத்தமான ஆடை
சரியான ஆடைகளை தேர்வு செய்வதுடன், அவை தற்கால மார்டன் ஆடைகளாக இருக்குமாறு தேர்வு செய்யுங்கள். மேலும் தேர்வு செய்யும் ஆடைகளின் நிறம் முடி, கண்கள் மற்றும் சருமத்திற்கு பொருந்தக் கூடியதாக இருக்கட்டும்.

02. உடற்பயிற்சி செய்யுங்கள்
நல்ல அழகான தோற்றத்தோடு இருந்தால் தான் பெண்களைக் கவர முடியும்.ஆகவே உடலில் உள்ள திசுக்களுக்கு சக்தி கொடுக்கும் வகையில் உடற்பயிற்சி செய்து மெருகேற்றினால், பெண்களை கவர்ந்திழுக்கலாம்.
03. முடி விஷயத்தில் கவனிப்பு
ஸ்டைலான ஹேர் கட், அழகான ஒழுங்குபெற்ற நகம், ஷேவ்விங் செய்தல், முடியை திருத்தம் செய்தல் போன்றவை மிகவும் முக்கியம். காதுகளிலோ, மூக்கிலோ முடி இருந்தால், அவற்றை நீக்கி விடுவதில் கவனம் கொள்ளுங்கள்.
04. கவர்ந்திழுக்கும் வாசனை திரவியம்
மெல்லியதாக மனம் வீசும் படியாக பெர்பியூம் அடித்துக் கொள்ளுங்கள். அதுவும் நன்றாக குளித்து புத்துணர்வுடன் இருங்கள். எவ்வளவு மார்டனாக ஆடை உடுத்தினாலும், ஸ்டைலாக காட்சியளித்தாலும், உங்கள் மீது துர்நாற்றம் வீசினால் கண்டிப்பாக தனிமை தான் மிஞ்சும்.
05. நேராக நில்லுங்கள்
நேராக நின்றால் தான் தன்னம்பிக்கை தெரியும். ஆனால் கொஞ்சம் வளைந்தபடி நின்றால், தன்னம்பிக்கை குறைவும், பாதுகாப்பின்மையும் நன்கு வெளியே தெரியும். ஆகவே நேராக நிற்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது உங்களை நீங்களே ரசிக்கின்றீர்கள் என்று அர்த்தம். அதுவே பெண்கள் உங்கள் மீது ஈர்ப்பு கொள்வதற்கும் உதவும்.
06. கவர்ச்சியாக பேசுங்கள்
ரேடியோ மற்றும் செய்தி வாசிப்பவர்களை போன்று பேசுவதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக, ஒரு திரைப்படத்தில் காட்டப்படும் கவர்ச்சியான ஆண்களின் குரல் மாதிரியாக கொண்டு பேசுங்கள். இவ்வாறு பேசுவதால் பெண்களின் கவனம் உங்கள் பக்கம் திரும்பும் மற்றும் உற்று கவனிப்பார்கள். மேலும் அவர்களிடம் நீங்கள் பேசும் பொழுதும் உருகிப் போவார்கள்.
07. உணர்ச்சிவசப்படுதல் வேண்டாம்
உங்களிடம் பேசும் பெண் உணர்ச்சி வசப்பட்டு பேசினால், உங்கள் உணர்ச்சிகளை உடனே வெளிக்காட்டாமல் அமைதியாக இருங்கள். அவ்வாறு இருப்பது பெண்களை மிகவும் கவரும்.
08. சில பழக்கவழக்கங்கள்
பெண்களுக்காக கதவு திறந்து விடுதல், நன்றி கூறுவது, உங்களை ஜென்டில் மேனாக காண்பிக்கும்.
09. எது பிடிக்கும், எது பிடிக்காது
பெண்களுக்கு எது பிடிக்கின்றது, எது பிடிக்கவில்லை என்று கண்டுபிடிப்பதற்கு பல முயற்சிகளை செய்ய வேண்டியிருக்கும், செய்யவும் வேண்டும்.
10. தனிமையாக அழைத்து செல்லுங்கள்
ஒரு பெண்ணுக்கு உங்களை பிடித்திருக்கிறது என்று தெரிந்தால், நேரத்தை வீணாக்காமல் உடனே தனியாக எங்காவது அழைத்து செல்லுங்கள். ஏனென்றால் வாழ்க்கையை இயல்பாக எடுத்துக் கொள்ளும் அதே சமயம் உறுதியாகவும் இருக்கும் ஆண்களை பெண்களுக்கு எப்பொழுதும் பிடிக்கும்.
இவற்றை பின்பற்றினால் நீங்கள் ஒரு செமயான ஹாட் பாய்ஸ்..!