Home ஜல்சா ஆண்களும் இனி பாலியல் பலாத்கார புகார் அளிக்கலாம்..!

ஆண்களும் இனி பாலியல் பலாத்கார புகார் அளிக்கலாம்..!

32

downloadபாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆண்களும் இனி புகார் அளிக்கலாம் என பல்கலைக் கழக மானிய குழு (யுஜிசி) வழிவகை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. .ஒரு பெண்ணின் மீது பாலியல்ரீதியாக நிகழ்த்தப்படும் தாக்குதலைக் குறிக்க பாலியல் துன்புறுத்தல் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறோம். பொதுவாக இந்த வார்த்தை பெண்களோடு மட்டுமே தொடர்பு படுத்தி பேசப்படுகிறது

அதனால் ஆண்களுக்கும் இவ்வாறான துன்புறுத்தல் நடக்காமல் இருக்கிறது என்று சொல்ல முடியாது. சில ஆண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ஆனால் பெரும்பாலும் ஆண்கள் மீதான பாலியல் சம்பவங்கள் வெளியே தெரியாமல் மறைக்கப்படுகிறது.அப்படியே வெளியே தெரிந்தாலும் அது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. எனவே பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டால், அது குறித்து புகார் அளிக்க பல்கலைக்கழக மானியக் குழு வழிவகை செய்துள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு (உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் பெண் ஊழியர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம்), மே 2016 படி, பாலியல் துன்புறுத்தல் என்பது இருபாலருக்கும் நடக்க வாய்ப்புள்ளது. பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவரால் சில ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆண்களும் இது குறித்து புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.

அதன்படி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் மாணவர்கள் புகார் அளிக்க ஏதுவாக அந்தந்த கல்லூரிகளில் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளாகும் மாணவர்கள், குற்றம் நடந்த 3 மாதங்களுக்குள் புகார் அளிக்க வேண்டும். (உடல்நலக் குறைவு போன்ற அசாதாரண சூழ்நிலைகளை தவிர) மற்ற காரணங்களால் பாதிக்கபடும் மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம் என கூறுகிறது யுஜிசி அறிவிப்பு.மேலும், அனைத்து புகார்களும் பரிசீலனை செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் அளிக்க முடியாத நிலையில், பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள், உறவினர்கள், உடன் படிக்கும் மாணவர்கள் அல்லது உளவியல் மருத்துவர்கள் புகார் அளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் இதனை அமல்படுத்தவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி தெரிவித்துள்ளது