Home சூடான செய்திகள் ஆண்களுக்கு 37 வயதில் மகிழ்ச்சி! பெண்களுக்கு 30 வயதில் மலர்ச்சி!

ஆண்களுக்கு 37 வயதில் மகிழ்ச்சி! பெண்களுக்கு 30 வயதில் மலர்ச்சி!

31

download (1)பெரும்பாலான ஆண்கள் தங்களின் 37 வயதில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த வயதில்தான் நன்றாக செட்டில் ஆகி சந்தோசமாக இருக்கின்றனர் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆண்கள் ஆடை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் 2000 ஆண்கள் பங்கேற்றனர். அவர்களிடம் எந்த வயதில் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று கருத்து கேட்கப்பட்டது.

அதில் பெரும்பாலான ஆண்கள் 37 வயதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த வயதில்தான் சொல்லிக்கொள்ளும்படியான வேலை, அன்பான மனைவி அழகான குழந்தைகள் என செட்டில் ஆகியிருப்பார்கள். மிக நெருங்கிய நண்பர்களும் கிடைப்பது இந்த வயதில்தான். எனவே, 37 வயதில்தான் பெரும்பாலான ஆண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வுகள் அமையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். சொத்துக்கள் வாங்குவது இப்போதான்! வீடு, கார் போன்ற சொத்துகள் வாங்குவது, பட்டம், பதவியில் உயர்வு பெறுவது போன்றவையும் இந்த வயதில்தான் பெரும்பாலும் நிகழ்கிறது. எனவே, 37 வயதில்தான் ஆண்களுக்கு சந்தோஷமான தருணங்கள் அமைகின்றன என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அழகாவது 40 வயதில்! அதேபோல் ஆண்கள் அழகாக தெரிவது 40 வயதில் என்று மற்றொரு ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மனிதர்கள் எந்த வயதில் அழகாக காணப்படுகின்றனர் என்பது குறித்து சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் ஆண்கள் மற்றும் பெண்களிடம் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. அதில் பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மிக அழகாக தெரிகின்றனர் என்பது தெரியவந்தது. பெண்களை கவரும் ஆண்கள் 40 வயதில் தான் ஆண்கள் அழகான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது. 40 வயதுக்கு பிறகுதான் ஆடம்பரமான ஆடைகளை அணிவதில் ஆண்கள் விருப்பம் கொள்கின்றனர்.

மேலும் விருந்து விழாக்களில் பங்கேற்று ஒயின் மற்றும் மதுவகைகளில் நாட்டம் கொள்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 30ல் மலர்ச்சியாகும் பெண்கள் அதுபோன்று பெண்கள் தங்களது 30 வயதில் தான் அழகாக இருக்கின்றனர். அந்த வயதில் தான் மற்றவர்களை கவரும் உடைகளையும், வாசனை திரவியங்களையும் பயன்படுத்த தொடங்குகின்றனர். இந்த வயதில் குழந்தைகள் ஓரளவிற்கு வளர்ந்திருப்பார்கள் அந்த டென்சன் குறைந்து தங்களை அழகு படுத்திக்கொள்ளவதில் ஆர்வம் காட்டுவார்கள் பெண்கள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.