தங்கள் உடல் அமைப்பு ஒரே அளவாக ஒல்லியாக இருந்தால்தான் ஆண்களை கவர முடியும் என பெரும்பாலான பெண்கள் நினைக்கின்றனர்.
இது தவறு. ஆம், வயிறு பகுதியைவிட இடுப்பு பகுதி சற்று பருமனாக உள்ள பெண்களைத்தான் பெரும்பாலான ஆண்களுக்கு பிடிக்கும் என ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
அமெரிக்க மருத்துவ உளவியல் நிபுணர் லவினியா ராட்ரிகெஸ் இது தொடர்பாக ஓர் ஆய்வை மேற்கொண்டார்.
அதன் விவரம்: பெண்களின் உடல் அமைப்பைப் பொருத்தவரை வளைவாக இருக்க வேண்டும் என பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர். அதாவது, வயிறு பகுதியைவிட இடுப்பு பகுதி சற்று பருமனாக இருக்க வேண்டுமாம். உதாரணமாக, வயிறு 70 செ.மீ. அளவும், இடுப்பு 100 செ.மீ. அளவும் இருக்கலாம். இந்த அளவில் சற்று ஏற்ற இறக்கம் இருந்தாலும் பரவாயில்லை. கண் பார்வை இல்லாத ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.
மேட் மென் என்ற தொலைக்காட்சித் தொடர் நடிகை கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ் போல உடல் அமைப்பு இருந்தால் ஆண்களை கவரலாம். கிறிஸ்டினாவில் உடல் அமைப்பு கவர்ச்சியாக இருப்பதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறியுள்ளனர்.