Home ஆரோக்கியம் ஆண்களுக்கு தொப்பை வர என்ன காரணம் தெரியுமா?

ஆண்களுக்கு தொப்பை வர என்ன காரணம் தெரியுமா?

24

download (1)மகளிரை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் தொப்பை வருகிறது. தொப்பை வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
மகளிரை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் தொப்பை வருகிறது. தொப்பை வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் பீரும் ஒன்று. ஆண்கள்தான் பீரை அதிகம் குடிப்பார்கள். ஆண்களே உங்கள் தொப்பையைக் குறைக்க பல வழிகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஆண்களின் சில பழக்க வழக்கங்கள் தொப்பை வருவதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. இப்போது ஆண்களுக்கு தொப்பை வருவதற்கான காரணங்களை பார்க்கலாம்.
பீர் குடித்தால் உடல் பருமன் வருகிறது. அதிகமான ஆண்களுக்கு பீர் விருப்பமான பானமாகும். மற்றும் என்னதான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், இதனை அடிக்கடி குடித்தால் தொப்பை தான் வரும். ஏனென்றால் இதில் கலோரிகள் அதிகம் இருக்கிறது.. நீங்கள் தொப்பையை குறைக்க வேண்டுமா? முதலில் ஆல்கஹால் அதிகம் குடிக்கும் பழக்கத்தை நிறுத்துங்கள்.
ஆண்கள் நாற்காலியில் உட்கார்ந்தவாறே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். இதனால் சாப்பிடும் சாப்பாடு சரியாக ஜீரணம் ஆவதில்லை. இது கொழுப்புக்களாக மாறி உடலில் தங்கி உடல்பருமனை உருவாக்குகின்றன.
ஆண்களுக்கு தன்னுடைய உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளக் கூட நேரம் கிடைப்பதில்லை. அந்த அளவிற்கு பணிச்சுமை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ரெஸ்ட் எடுக்கவே டைம் இல்லாதபோது, உடற்பயிற்சி செய்ய எங்கு நேரம் இருக்கும்?
பணிச்சுமை அதிகமாக இருப்பதால் பல ஆண்கள் மனஅழுத்தத்தினால் துன்புறுகின்றனர். மன அழுத்தம் அதிகமானால் உடலில் ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது. பழக்க வழக்கங்களில் மாற்றம் உண்டாகின்றது. இதுவே உடல்பருமனுக்கு அதாவது தொப்பைக்கு வழி வகுக்கிறது.
அடிக்கடி பெண்கள் மட்டும்தான் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுகிறார்கள் என்று நினைக்க வேண்டாம். ஆண்கள் கூட இரகசியமாக நொறுக்குத் தீனியை சாப்பிடுகிறார்கள். இதனால் தான் ஆண்களுக்கு தொப்பை வருகிறது.
ஆண்கள்தான் டி.வி. பார்க்கும் பொழுது எதையாவது வாயில் போட்டு மென்று கொண்டே இருப்பார்கள். அதுவும் குறிப்பாக விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்தால் போதும் டி.வி. பார்த்துக் கொண்டே வடை, போண்டா, சிப்ஸ் என்று சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
பொதுவாக ஆண்கள்தான் நண்பர்களுடன் பார்ட்டிகளில் அதிகம் கலந்து கொள்வார்கள். மேலும் பார்ட்டி என்றாலே அன்றைக்கு அதிகமாக குடிப்பதோடு மட்டுமில்லாமல், அசைவ உணவுகளை வயிறு முட்ட சாப்பிடுகிறார்கள். இப்படி வாரம் ஒரு முறை பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள்.