Home ஆண்கள் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏன் ஏற்படுகிறது?

ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏன் ஏற்படுகிறது?

25

Captureஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 – 25 வயதில் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். ஆண்மைக்கான சுரப்பிகள் சுரப்பதால், இயற்கையாக ஆண்கள் வலிமையாகவும், பலமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும்.

இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், இல்லையேல் ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர். காம இச்சை அதிகரிக்கும் இக் காலகட்டத்தில் அவர்கள் ஹாஸ்டலில் தங்கியிருப்பவராக இருந்தால், சில ஆண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு தமது விந்துவை வெளியேற்றும் செயல்களும் உள்ளது.

1 வது காரணமே பயம் தான். எங்கே இந்தப் பெண்ணோடு நான் உடலுறவில் ஈடுபட முடியுமா? என்று எப்போது ஒரு ஆண் மகன் நினைத்துவிடுகிறானோ அந்த நிமிடமே அவன் பாதி ஆண்மையை இழக்கிறான். குறிப்பாக இது இளமைப் பருவத்தில் பல ஆண்களுக்கு நடந்திருக்கும். தமது நண்பர்களோடு சிலவேளை சற்றும் எதிர்பார்க்காமல் அவர்கள் சிவப்பு விளக்கு ஏரியாவுக்குச் சென்றிருப்பார்கள். அங்குள்ள விலைமாதுவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு அவளுடன் படுக்கப்போனால், பயம் தொற்றிக்கொள்ளும். இதனால் ஆண் குறி சரியாக விறைப்படையாது. இதனை நினைத்தே, மேலும் கவலைப் பட, பின்னர் உடலுறவு கொள்ளமுடியாமல் ஏற்படும். பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு திரும்பி இருப்பார்கள். எனவே மனதில் பயம் இருக்கக்கூடாது.

2. அன்ரி பயோட்டிக்ஸ் மாத்திரைகள். மற்றும் பிற மாத்திரைகள். சிலர் சாதாரண தடிமன் காச்சல் வந்தாலே, ஆன்ரி பயோட்டிக்ஸ் எடுப்பார்கள். சாதாரண உடல் நலக்குறைவுக்கு கூட பெரிய வலியைப் போக்கும் மருந்துகளை எடுப்பார்கள். எனவே தேவையற்ற மருந்துகளைக் குறைப்பது நல்லது

3. மது, புகைப்பிடித்தல், போதைப் பொருட்கள் பாவித்தல், ஆண்மைக் குறைவுக்கு மூல காரணமாக உள்ளது. மதுப்பழக்கம் காரணமாக ஆணுறுப்பு சுருங்கும், இல்லையேல் விறைப்புத் தன்மை குறையும் என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.