இந்த உலகில் மனித இனம் அழியாமல் மிக நீண்ட காலம் வாழ முக்கியமானது கருவுறும் திறனாகும். இந்த கருவுறும் திறன் மட்டும் இல்லை என்றால் மனித இனம் வெகு விரைவில் அழிந்துவிடக்கூடும்.
ஆண்களின் விந்தணுக்களின் ஆரோக்கியம் படிப்படியாக குறைந்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த 40 ஆண்டுகளில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளை சார்ந்த ஆண்களின் விந்தணு ஆரோக்கியம் வெகுவாக குறைந்துள்ளதாம்.
ஆராய்ச்சி
இஸ்ரேலை சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் 50 நாடுகளை சேர்ந்த 43,000 ஆண்கள் கலந்து கொண்டனர். 1973 முதல் 2011 ஆம் ஆண்டுவரை உள்ள இவர்களது விந்தணுக்கள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
அவர்களது வயது, நாடு, வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆராய்ச்சி முடிவு இந்த ஆராய்ச்சியின் முடிவில் மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களது விந்தணுக்களின் திறன் முன்பை விட 50% குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் தென் அமெரிக்கா, ஆசிய மற்றும் ஆபிரிக்க ஆண்களது விந்தணுக்களின் திறனிலும் சற்று சரிவு காணப்பட்டது.
என்ன காரணம் விந்தணுக்களின் திறன் குறைவதற்கு சில ஆரோக்கிய குறைபாடுகள் காரணமாக இருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். காய்கறிகள் மற்றும் பழங்களை பயிர் செய்ய பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. தாய் கர்ப்பமாக இருக்கும் போது புகைப்பிடிப்பது தனது மகனின் விந்தணுக்களை பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் எடை மன அழுத்தம் மற்றும் அதிக உடல் எடையுடன் இருப்பது போன்ற காரணங்களும் விந்தணுக்களை பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை! இந்த ஆராய்ச்சியின் முடிவானது, தவறான வாழ்க்கை முறைகளை கடைபிடிப்பவர்கள், உடல் எடை, மன அழுத்தம் கொண்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்பது உண்மை.
தாய் நினைத்தால் முடியும் அதே சமயம், தாய் நினைத்தால் முடியாது எதுவும் இல்லை..! தனது குழந்தைக்கு சரியான அளவு மற்றும் சரியான காலம் தாய்ப்பால் கொடுப்பது, கர்ப்ப காலத்தில் புகை பிடிக்காமல் இருப்பது, சத்தான காய்கறிகளை உண்பது, சரியான உடற்பயிற்சி, உடல் எடை குறைப்பு மூலம் குழந்தையின் விந்தணுக்கள் எதிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்கும்.