Home சூடான செய்திகள் ஆண்களின் பாலியல் செயல்பாடு மற்றும் செயல்திறனை அதிகரிப்பதற்கான சில டிப்ஸ்…

ஆண்களின் பாலியல் செயல்பாடு மற்றும் செயல்திறனை அதிகரிப்பதற்கான சில டிப்ஸ்…

20

couples1-300x225தற்போதைய ஆண்கள் அதிகம் கவலைக் கொள்ளும் ஓர் விஷயம் தான், பாலியல் உறவில் பலவீனமாக இருப்பது. இதை நினைத்து பல ஆண்கள் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாவதுண்டு. தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்களால், ஆண்களின் பாலியல் செயல்திறன் பாதிப்பிற்குள்ளாகிறது. குறிப்பாக இன்றைய ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டால் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஒருவரின் பாலியல் செயல்திறன் பாதிக்கப்படுவதற்கு, உடலில் உள்ள வேறுசில பிரச்சனைகளும் காரணமாக இருக்கும். அதைக் கண்டறிந்து சரிசெய்து கொண்டால், உங்கள் துணையை முழுமையாக திருப்திப்படுத்தலாம். உங்கள் துணை உங்களுடனான உறவில் திருப்தி அடைந்தால், அந்த உறவு நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

சரி, இப்போது ஆண்களின் பாலியல் செயல்பாடு மற்றும் செயல்திறனை அதிகரிப்பதற்கான சில டிப்ஸ்களைப் பார்ப்போம்.

உடல் எடையைக் குறையுங்கள்
ஒருவர் தன் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாவிட்டால், அவரால் உறவில் சிறப்பாக செயல்பட முடியாமல் போகும். ஏனெனில் உடல் எடை அளவுக்கு அதிகமாக இருக்கும் போது, டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும். மேலும் ஆண்களுக்கு அடிவயிற்றில் அளவுக்கு அதிகமான கொழுப்பு இருந்தால், அது ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன், பெண் ஹார்மோனான ஈஸ்ரோஜெனாக மாற்றப்படும்.

இயற்கை உணவுகள்
இயற்கை உணவுகளான காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உட்கொண்டு வர வேண்டும். இதனால் அவைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், விந்தணுக்களின் தரத்தை அதிகரித்து, பாலியல் செயல்பாட்டினை அதிகரிக்கும். முக்கியமாக பதப்படுத்தப்பட் உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவைகளில் சத்துக்கள் ஏதுமின்றி, வெறும் கலோரிகள் ஏராளமாக உள்ளன. இவை உடல் பருமனை ஏற்படுத்தும்.

ஜங்க் உணவுகள் மற்றும் கொழுப்புமிக்க உணவுகள்
நாவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போதைய ஜங்க் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் இரத்த நாளங்களின் சுவர்களின் படிந்து, இனப்பெருக்க உறுப்புகளுக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாதவாறு தடையை ஏற்படுத்துகின்றன. இப்படி இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருந்தால், விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படக்கூடும். எனவே இந்த உணவுகளை அறவேத் தவிர்க்க வேண்டும்.

மன அழுத்தத்தைக் குறைக்கவும்
முதலில் எதற்கும் கவலைக் கொள்வதை ஆண்கள் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு செயலையும் சந்தோஷமாகவும், விரும்பியும் மேற்கொண்டால், மன அழுத்தம் என்பதற்கு இடமே இருக்காது. மன அழுத்தத்திற்கு ஒருவர் உள்ளானால், விறைப்புத்தன்மை பிரச்சனைகளை ஏற்படுவதோடு, பாலியல் செயல்திறனும் குறையும். எப்படியெனில், மன அழுத்தம் கொள்ளும் போது, இரத்த நாளங்கள் சுருங்கி, இனப்பெருக்க உறுப்புகளுக்கு வேண்டிய இரத்தம் கிடைக்காமல் போகும். இதன் காரணமாக, பாலியல் நாட்டம் குறைந்து, விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படும்.

சிகரெட் வேண்டாம்
புகைப்பிடித்தால் புற்றுநோய் மட்டுமின்றி, பாலியல் நாட்டமும் குறைந்து, உடலுறவில் ஈடுபடும் போது உங்கள் துணையை உங்களால் திருப்திப்படுத்த முடியாமல் போகும். எனவே முதலில் இப்பழக்கம் இருந்தால், உடனே அதை நிறுத்துங்கள்.

சரியான தூக்கம் இல்லாமை
ஆண்கள் தினமும் சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், அதனால் உடல் மிகுந்த சோர்வடைந்து, நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாகி, ஹார்மோன் சுரப்பில் இடையூறு ஏற்பட்டு, மெட்டபாலிசம் குறைந்து, உடல் பருமன் ஏற்படும். எனவே தினமும் 7 மணிநேர தூக்கத்தை ஆண்கள் மேற்கொள்வது அவசியம். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, பாலியல் ஆரோக்கியமும் மேம்படும்.

அன்றாட உடற்பயிற்சி
பாலியல் உறவில் சிறப்பாக செயல்பட நினைத்தால், தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். ஏனெனில் உடற்பயிற்சி செய்யும் போது, உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உடலின் ஆற்றல் தக்கவைக்கப்படும். மேலும் உடல் பருமனால், கொலஸ்ட்ரால் பிரச்சனைகள், இதய பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

அவ்வப்போது உறவு கொள்ளுங்கள்
ஆய்வுகளில் ஆண்களில் யார் அடிக்கடி தன் துணையுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ, அவர்களுக்கு பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படுவது குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.