Home பாலியல் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கான சில டிப்ஸ்.

ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கான சில டிப்ஸ்.

14

download (2)அனைத்து ஆண்களுக்குமே ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே என்ற ஆசை இருக்கும். பல சூழ்நிலைகளில் அவர்களை அவர்களாகவே கவனத்திக் கொள்வார்கள். சிலர் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் உண்ணும் உணவின் மீது கவனம், சீரான முறையில் உடற்பயிற்சியில் ஈடுபடுதல், வாழ்வில் மன அழுத்தங்களை போக்குதல் போன்றவற்றில் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் தங்களின் பாலியல் ரீதியான ஆரோக்கியத்தையும் கூட பராமரிக்கலாம் என்பது பல ஆண்களுக்கும் தெரிவதில்லை. இதை தெரிந்து கொண்டால் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முன்பாகவே அவைகளை தவிர்க்கலாம்.

பாலியல் ரீதியான உடல்நலனைப் பற்றி ஆண்கள் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு 10 டிப்ஸைப் பற்றி பார்க்கலாமா?

01. ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.

தாங்கள் உண்ணும் உணவு படுக்கையில் தங்களின் செயலாற்றுகையை எந்த விதத்திலும் பாதிக்காது என்று தான் பல ஆண்கள் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அது பாதிக்கும். வளமையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைவான கொழுப்புகள் நிறைந்துள்ள ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதால், உங்களின் பாலியல் உடலமைப்பு சீராக செயல்படும். ஆகவே அளவுக்கு அதிகமாக காய்கறிகள் மற்றும் பழங்கள், மெலிதான இறைச்சி, முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்பை கொண்ட பாலை எடுத்துக் கொள்ளுங்கள்.

02. சீரான உடற்பயிற்சி.

உட்கார்ந்த இடத்திலேயே அசையாமல் இருக்கும் வாழ்வு முறையை வாழ்பவர்களுக்கு சீக்கிரமே பாலியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படும். எழுந்து சுறுசுறுப்பாக நடமாட ஆரம்பித்தால் பாலியல் ரீதியான ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, சீரான உடற்பயிற்சியை தொடங்க ஆரம்பியுங்கள். நடைப்பயிற்சி, சைக்கில் ஓட்டுதல், டென்னிஸ் அல்லது உங்களுக்கு பிடித்த வேறு ஏதேனும் உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம்.

03. புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உடைய ஆண்கள் பாலியல் செயல் பிறழ்ச்சிக்கு உள்ளாக அதிக வாய்ப்புகள் உள்ளது என பல மருத்துவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள். ஈ.டி. நோயால் அவதிப்படும் முக்கால்வாசி ஆண்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டவர்களே. புகைப்பிடிப்பதால் விந்தணுவின் எண்ணிக்கையும் தரமும் கூட குறையும். புகைப்பிடிப்பதால் ஆணுறுப்புக்கு இரத்தத்தை அனுப்பும் சிறிய தமனிகளை பாதிக்கப்படும். இதனால் விறைப்பை நீடிக்க வைப்பதில் சிரமம் ஏற்படும்.

04. மதுபானம் குடிப்பதை நிறுத்துங்கள்.

மதுபானம் குடிப்பதால் ஏற்படும் போதையால் உங்களுக்கு மகிழ்ச்சியும், குதூகலமும் உண்டாகும். ஆனால் அவைகளை அதிகமாக குடிக்கும் போது, ஈ.டி ஏற்படும் இடர்பாடு அதிகரிக்கிறது. மதுபானம் பருகுவதால் தடைகள் குறைந்து செக்ஸ் உணர்வு ஏற்படலாம். ஆனால் அது உங்கள் ஆண்மையை குறைத்து, விறைப்பு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். பல நேரங்களில் புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படும் தன்மையையும் பாதிக்கும்.

05. மன அழுத்தத்தை கையாள கற்றுக் கொள்ளுங்கள்.

மன அழுத்தம் இருந்தால் சோர்வு, வருத்தம், பதற்றம், நடுக்கம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இது மட்டுமல்லாது பாலியல் ரீதியான தொந்தரவுகளும் ஏற்படும். உங்கள் வாழ்க்கையை மன அழுத்தம் ஆளும் நிலை ஏற்பட்டால், வெகு விரைவிலேயே நீங்கள் உங்கள் மீதுள்ள கட்டுப்பாட்டை இழந்து விடுவீர்கள். அதனால் மன அழுத்தத்தை போக்கும் நுட்பங்களை கற்றுக் கொள்ளுங்கள், கோபத்தையும் சோகத்தையும் கையாளும் வழிகளை கண்டுபிடியுங்கள். இதனால் பாலியல் ரீதியான ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

06. லூப்ரிகண்ட்ஸ் பயன்படுத்துங்கள்.

ஆண்களுக்கு வயதாகும் போது தங்கள் ஆணுறுப்பில் உணரும் திறன் குறைந்து கொண்டே வரும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டு, உங்கள் ஆணுறுப்பு சுதந்திர இயக்கத்தை மேற்கொள்ள, சில லூப்ரிகண்ட்கள் உதவும். இதனால் அவர்களின் பாலியல் சுகமும் அதிகரிக்கும்.

07. சட்டவிரோத பொருட்களைத் தவிர்க்கவும்.

துரதிர்ஷ்டவசமாக, உச்ச நிலையை அடைய சில ஆண்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். அது அவர்களின் படுக்கை அனுபவத்தை மேம்படுத்தும் என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பல சூழ்நிலைகளில், அது எதிர்மறை தாக்கத்தை தான் ஏற்படுத்தும். ஈ.டி. (ED) பிரச்சனையை நீங்கள் தவிர்க்க வேண்டுமானால், சட்ட விரோத போதை பொருட்களை தவிர்க்கவும்.

08. நேர்மறையான மனப்பாங்கை பராமரிக்கவும்.

வாழ்க்கையில் நேர்மறையான மனப்பாங்கை கொண்ட ஆண்கள் பாலியல் ரீதியான பிரச்சனைகளையும் சுலபமாக சமாளித்து விடுவார்கள் என மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. அதனால் உங்கள் மனப்பாங்கை மாற்றிக் கொள்ளுங்கள். அதனால் கிடைக்கும் பயன்களை அறுவடை செய்திடுங்கள்.

09. உங்கள் மருத்துவரிடம் ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

ஆண்களுக்கு மருத்துவரிடம் செல்ல பிடிக்காது என்பது ஒன்றும் யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றும் இல்லை. ஆனால் பாலியல் ஆரோக்கியம் உட்பட, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கிய்யத்தை பராமரித்திட, வருடத்திற்கு ஒரு முறை உங்கள் உடலை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.