பெரும்பாலான ஆண்கள் முக அலங்காரத்தில் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை. அவர்களைப் பொருத்தவரையில் முக அழகு என்பது கிளீன் ஷேவ் தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
சருமத்தில் தேவையில்லாமல் முடி வளர்வதைத் தடுக்க வேண்டும். ஆண்களின் முகத்துக்கும் பெண்களின் சருமத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. பொதுவாக பெண்களின் சருமம் சற்று மென்மையானதாகவும் ஆண்களின் சருமம் சற்று கடினமானதாகவும் இருக்கும்.
அதனால் பெண்கள் பயன்படுத்துகிற அழகுக்குறிப்புகளை விட ஆண்கள் பயன்படுத்த வேண்டிய மாஸ்க்குகளில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும். அதனால் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் பொருட்களைத் தவிர்த்துவிட்டு, வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
பற்களைப் பளிச்சென பாதுகாத்தல் அவசியம். கிளீன் ஷேவ் மற்றும் வெண்மையான முத்துப் போன்ற பற்கள் கொண்ட ஆண்களைப் பெண்களுக்கு மிக அதிகமாகப் பிடிக்கும்.
சற்று கடினமான ஸ்கின்னாக இருந்தாலும் அதிலுள்ள கருமையைப் போக்கி, பளபளப்பாக்கச் செய்ய இதை ட்ரை பண்ணுங்க…
சருமத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறினாலே போதும்.
ஒரு கப் தண்ணீரை நன்கு கொதித்து அதில் ஒரு ஸ்பூன் கிரீன் டீயைப் போட்டு கொதிக்க வைத்து குளிர வையுங்கள்.
அதனுடன் நன்கு கனிந்த தக்காளியைப் பேஸ்ட் செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இத்தோடு சிறிது அரிசி மாவும் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இது சருமத்துக்கு நல்ல ஸ்கிரப்பாக பயன்படும்.
அடுத்ததாக, அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறினைச் சேர்த்து நல்ல பதத்தில் மாஸ்க்கை ரெடி செய்து கொள்ள வேண்டும்.
இந்த மாஸ்க்கை முகத்தில் தடவும் முன் 5 நிமிடத்துக்கு ஆவி பிடிக்க வேண்டும். இது சருமத் துளைகளை விரிவடையச் செய்யும்.
அதன்பின் மாஸ்க்கை அப்ளை செய்து, 20 நிமிடங்கள் வரை உலரவிட்டு, பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தைக் கழுவவும்.
இப்படி வாரத்துக்கு இரண்டு முறை இதை செய்து பாருங்கள். பிறகு பெண்கள் மத்தியில் நீங்களும் அரவிந்த்சாமி தான்.
பெண்களும் இதைப் பயன்படுத்தலாம். ஆண்களின் சருமம் சற்று கடினத் தன்மையுடன் இருக்குமாதலால் இது அவர்களுக்கே உரிய மாஸ்க்காக இருக்கும்.