Home சூடான செய்திகள் ஆண்களின் உடலில் வளரும் முடிகளை நீக்க சில வழிகள்!!!

ஆண்களின் உடலில் வளரும் முடிகளை நீக்க சில வழிகள்!!!

31

முடி என்பது அழகின் அம்சமாக அமைகி றது. ஆனால் அது ஒழுங் காக பராமரித்தா ல் மட்டுமே அழகு நிலைக்கும். அதனால் உடலில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒரு காலத்தில் உடம்பில் உள்ள முடியை பெண்கள் மட்டுமே நீக்கி கொண்டிருந்தன ர். அது ஆணாக இருப்பின், அவர் ஒரு நீச் சல் வீரர் அல்லது தடகள விளையாட்டா ளராக இருந்தால் மட்டுமே முடிகளை நீக்கி வந்தனர். மற்ற ஆண்கள் எல்லாம் செய்யவே மாட்டார்கள். ஆனால் தற் போது காலம் மாறி விட்டது.
இன்று பல ஆண்கள் பெண்களை போல் உடம்பில் உள்ள முடிகளை எடுத்து, வழுவழுப்பான முடிகள் அற்ற உடலை பெற ஆசைப்படுகி ன்றனர். ஆனால் அவைகளை முழுமையாக நீக்க அவர்கள் நினைப்பதி ல்லை. மாறாக முதுகு, மார்பு, கால்கள் மற்றும் கைகளில் உள்ள ரோமத்தின் நீளத்தை குறைக்க ஆசைப்படுகின்றனர்.
அதில் நீங்களும் ஒருவரா? உங்களுக்காக நாங்கள் ஒரு 6 வழிமு றைகளை பற்றி விள க்கியுள்ளோம். அவற்றைப் படித்து பின்பற் றுங்கள்.
வேக்சிங் அல்லது சுகரிங்
முடிகளை நீக்குதல் என்றால் பல பேருக்கு முதலில் மனதில் உதிப்பது வேக்சிங் தான். அதனுடன் சேர்ந்து நினைவுக்கு வருவது அதில் ஏற்பட போகும் வலியும் கூட. கண்டிப்பாக அது சுகமான அனுப வமாக இருக்காது, அதற்காக அது ஒன்றும் அவ்வளவு வேதனையையு ம் தராது. இருப்பினும். இது முடியை அதன் வேரிலிருந்து நீக்குவதால். இது சிறந்த வழி முறையாக திகழ்கிறது. அதற் கு முடியை எடுக்க விரும்பும் இடத்தில் சூடான மெழுகை ஊற்றி, அதன் மீது ஒரு துணியை போட்டு நன்றாக தேய்த்து எடு த்தால், கையோடு முடிகளையும் நீக்கி விடும். சுகரிங் என்பதும் வேக்சிங் போல த்தான். ஆனால் இதி ல் சர்க் கரை பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை, எலுமி ச்சை, தண்ணீர் மற்றும் சிட்ரிக் அமிலம் கொண்டு பேஸ்ட் தயார் செய்யப்படுகிறது. இந்த வழிமுறைகளை திரு ம்ப திரும்ப பின்பற்றினால், முடிகளின் அடர்த்தி குறைந்து வேர்களும் வலுவிழந்து போகும்.
ஷேவிங்
ஆண்களில் பெரும்பாலானோ ர் சீரான முறையில் ஷேவிங் செய்வ துண்டு அல்லது வாழ் க்கையில் ஒரு கட்டம் வரை அதனை செய்தி ருக்கலாம். உடலில் உள்ள முடியை நீக்க மிகவும் எளிய வழியாக ஷேவி ங் செய்வது இருக்கிறது. உடம்பில் உள்ள எந்த பகுதியாக இருந்தாலும் சரி, அங்குள்ள ரோமங்களின் மீது ஷேவிங் க்ரீமை தடவி, ரேசரை வை த்து முடிகளை நீக்கி விடலாம். கண்டிப்பாக முடிகளை நீக்கும் வழி முறைகளில் ஷேவிங்கிற்கு முக்கி ய பங்கு உள்ளது. ஆனால் ஷேவிங் செய்வதற்கு முன்பாக, ஷேவ் செய் ய வேண்டிய இடத்தை தண்ணீரில் நன்றாக நனைத்துக் கொள்ளவும். ஏனெனில் அது சரும துவாரங்க ளை திறக்க உதவும். மேலும் ஷேவ் செய்ய நல்ல தரமுள்ள ரேசர் மற்று ம் ஷேவிங் க்ரீமை பயன்படு த்துங்கள். முக்கியமாக, முடி எந்த திசை யில் வளர்கிறதோ, அந்த திசையை நோக்கி தான் ஷேவ் செய்ய வேண் டும்.
எலெக்ட்ரிக்கல் ட்ரிம்மிங்
மிகவும் நுட்பமான முறையில் உடலில் உள்ள முடிகளை பராமரிக்க எலெக்ட்ரிக் கல் ட்ரிம்மரை பயன்படுத்துங்கள். உட லில் உள்ள ரோமங்களை புதிதாக எடுக்க தொடங்கியவர்களுக்கு, இந்த முறை பெ ரிதும் கை கொடுக்கும். இது ரேசரைபோ ல் இல்லாமல், பாதுக்காப்பாகவும் எரிச் சலுமின்றி இருக்கும். மேலும் முடியின் நீளம் எந் தளவுக்கு இருக்க வேண்டும் என்பதை இதனை கொண்டு சுல பமாக கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இது கண்டிப்பா க வழுவழுப்பான சருமத்தை ஏற்படுத் தி கொடுக்காது. இது மென்மை யான தேகம் உடையவர்கள் பின்பற்ற வே ண்டிய சிறந்த வழிமுறை.
முடிகளை நீக்கும் க்ரீம்
முடிகளை நீக்கும் க்ரீம்களை டெபிலா டோரீஸ் என்றும் அழைக்க ப்படுகிறது. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான முடிகளை வலியில்லாமல் நீக்கும் வழிதான் இது. அதற்கு முடிகளை நீக்க வேண்டிய இடத்தில், இந்த க்ரீமை தடவி, 15-20 நிமிடங்கள் வரை தடவி, அதை அப்படியே விட்டு விட வேண்டும். இது முடியின் வேரில் உள்ள புரதத்தை நீக்கி, முடியை சுலப மாக நீக்கிவிடும். இருப்பினும் இவ்வ கை கிரீம்கள் சருமத்தில் கடுமையாக நடந்து கொள்ளும். மேலும் அடர்த்தி யான முடிகள் இருக்கும் இடத்தில், இது வேலை செய்யாது.
ஒரு அறிவுரை- இந்த க்ரீமை பயன்படு த்தும் முன், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று, அந்த க்ரீமுடன் வரு ம் துண்டு வெளியீட்டில் படித்து தெரிந் து கொள்ளுங்கள். பின் உடலில் ஒரு இடத்தில் கொஞ்சமாக தடவி, உங்களுக்கு இது ஒத்துக் கொள்கிறதா என்பதை பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.
லேசர் முறையில் முடி நீக்குதல்
லேசர் முறையில் முடியை நீக்கும் முறைக்கு. உணவு மற்றும் மரு ந்து நிர்வாக துறை ஒப்புதல் சான்று அளித்துள்ளது. இந்த முறைப் படி முடி நீக்கும் இடத்தில் லேசர் கதிர்கள் பாய்ச்சப்படும். இது மயிர் ப்புடைப்பை சூடாக்கி. அந்த இடத்தில் முடி வளர்வதை நிறுத்திவிடும். இந்த சிகிச்சையின் பலன், உங்கள் சரும நிறம் மற்றும் முடியின் நிறத்தை பொறுத்து மாறுபடும். அதனால் இந்த சிகிச்சைக்கு ஒத்து வருவீர்களா என்பதை முதலில்சோதனை செய்துகொள்ள வேண்டு ம். இந்த சிகிச்சை, முடிகளின் அடர்த்தி மற்றும் தரத்தை நிரந்தரமாக குறைப்பதால், இது விலை உயர்ந்த வழிமுறையாகும். மேலும் முடி நீக்கும் அனைத்து வழிமுறைகளுக்கும் இது தாயாக விளங்குகிறது. உடலில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் முடிகளை நீக்க வேண்டுமானால், லேசர் முறையை தேர் ந்தெடுக்கலாம். ஆனால் உடலில் சில பகுதிக ளில் மட்டும் முடியை நீக்க வேண்டுமானால், வேக்சிங் முறையே சிறந்தது.
எலெக்ட்ரோலிசிஸ்
இந்த முறைப்படி, ஒரு சிறிய மெலிதான ஊசியை கொண்டு, ஒவ்வொரு மயிர்த் தண்டிலும் நுழைத்து, ஒவ்வொரு மயிர் ப்பைக்கும் சிறிய அதிர்ச்சி அளிக்கப்படு ம். அதனால் முடி வளர உதவி செய்யும் அணுக்கள் அழிந்துவிடும். இந்த அணுக் கள் போய்விட்டால், இனி நிரந்தரமாக உங்களுக்கு அந்த இடத்தில் முடி வளராது. இதுவும் ஒரு நிரந்தர தீர் வாக அமையும். ஆனால் இதற்கு உத்தரவாதம் கி டையாது. மேலும் இதன் பலன் ஒவ்வொரு நபரை பொறுத்து மாறுபடும். நெற்றிப் பொட்டில் வளரும் ரோமம், கழுத்தின் பின் வளரும் ரோமம் மற்றும் இங்கும் அங்கும் வளர்ந்திருக்கும் முடிக ளை நீக்க, இந்த முறை சிறந்ததாகும். இது விலை உயர்ந்த முறை மட்டுமல் லாது, அதிக நேரத்தையும் எடுத்துக் கொள்ளும். அதற்கு காரணம் உடலில் உள்ள ஒட்டுமொ த்த முடியை நீக்க ஒரு வருடம்கூட ஆகலா ம்.
ஆகவே, எந்த வழிமுறை உங்களுக்கு தோ தாக அமையும் என்பதை நன்கு ஆராய்ந்து அத னை தேர்ந்தெடுங்கள்.