பொதுவாக ஆண்களுக்கு தங்களது ஆண்குறி பற்றி பல கேள்விகள் இருக்கும். ஆண் குறியின் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றியும் உங்களுக்கு சந்தேகம் இருக்கும். இதில் முக்கியமாக பலருக்கு ஏற்படும் சந்தேகம் என்னவென்றால், ஆண் குறியின் அளவு சுருங்குமா என்பது தான். நீங்கள் கூட ஒரு சில நேரங்களில் உங்களது ஆண்குறியின் அளவு சுருங்குமா என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டிருப்பீர்கள்.
நீங்கள் ஒருவேளை 50 வயதை சார்ந்தவராக இருந்தால் உங்களுக்கு கண்டிப்பாக இந்த சந்தேகம் வந்திருக்கும். உங்களுக்கு வயதாக வயதாக ஆண்குறியின் அளவு சுருங்குமே என்ற பயம் இருக்கும். இது எல்லாம் உண்மையா அல்லது பொய்யா என்று அறிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக இருக்கும். வயதானால் மட்டும் தான் ஆண் குறியின் அளவு சுருங்குமா?
அல்லது வேறு சில காரணங்களாலும் ஆண்குறியின் அளவு சுருங்குமா என்பது பற்றிய சந்தேகங்கள் உங்களுக்கு இருக்கலாம். இது எல்லாம் உண்மையா? இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது? உண்மையில் ஆண்குறியின் அளவு சுருங்குமா என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் இந்த பகுதியை முழுமையாக படியுங்கள். இந்த பகுதியில் எந்த காரணங்களால் எல்லாம் ஆணுறுப்பு சுருங்குகிறது, அதற்கான சிகிச்சை முறைகள் என்னென்ன, மருத்துவரிடம் எப்போது செல்ல வேண்டும் என்பது பற்றி விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
1. சுருங்குமா? உங்களது ஆண்குறி வயதாக வயதாக சுருங்காவிட்டாலும் கூட, உங்களது வாழ்க்கைமுறைகள் ஆண்குறியின் செயல் திறனை குறைத்துவிடும். நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தால், உங்களது டெஸ்டிரோன் உற்பத்தி குறைந்துவிடும்.
2. புகைப்பிடித்தல் புகைப்பிடித்தல் உங்களது இரத்த நாளங்களை பாதிப்படைய செய்கிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தையும் குறைக்கிறது. இது ஆணுறுப்பை வலிமையாக இருக்க விடாமல் தடுக்கிறது. பல ஆய்வுகள் டெஸ்டிரோனின் அளவு குறைவது என்பது விரைப்பு தன்மையை பாதிக்க கூடிய ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
3. ஆரோக்கிய பிரச்சனைகள் உங்களுக்கு சில ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தாலும் அது விறைப்பு தன்மையில் தாக்கத்தை உண்டாக்கும். உதாரணமாக நீங்கள் தைராய்டு அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், உங்களுக்கு விறைப்பு தன்மையில் பாதிப்பு ஏற்படலாம்.
4. அளவீடு உங்களது முந்தைய விறைப்பு தன்மையின் அளவையும், தற்போதைய விறைப்பு தன்மையின் அளவையும் அளவிட்டு பார்த்தால், விறைப்பு தன்மையில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதும், ஆண்குறியின் அளவு சுருங்கியுள்ளதையும் நீங்கள் உணர முடியும்.
5. மருத்துவரை அணுகவும் உங்களது ஆணுறுப்பானது, எப்போதும் போல விரைப்பு தன்மை அடைந்த நிலையில் கெட்டியாக இல்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
6. இதுவாகவும் இருக்கலாம் உங்களது விரைப்பு தன்மையானது சரியாக இல்லாமலும், கெட்டி தன்மை முன்பை போல இல்லை என்றாலும், உங்களுக்கு மன அழுத்தம், மன சுமை, மன கசப்பு, மன சோர்வு போன்ற மன ரீதியான ஆரோக்கிய குறைபாடோ அல்லது இருதய கோளறுகள் ஏதேனும் இருக்க வாய்ப்பு உள்ளது.
7. உடற்பயிற்சி கெட்டி தன்மை இல்லாத ஆணுறுப்பானது, உங்களது உடலுக்கு உடற்பயிற்சி தேவை என்பதையும், உங்களது உடலுக்கு இரத்த ஓட்டம் தேவை என்பதையும் உணர்த்தலாம். எனவே நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களது உடலுக்கு போதுமான அளவு இரத்த ஓட்டம் கிடைக்கிறது. மேலும் நீங்கள் சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலமாக உங்களது விறைப்பு தன்மையை மேம்படுத்த முடியும்.
8. மேலும் சில காரணங்கள் ஆணுறுப்பு சுருங்குவதற்கு, புரோஸ்டிரேட் புற்றுநோய், உடல் எடை அதிகரித்தல், வயது போன்றவை காரணமாக அமையும்.
9. வயது வயதாக வயதாக உங்களது ஆணுறுப்பில் உள்ள டெஸ்டிகல்ஸ் சிரியதாகிவிடும். மேலும், ஆணுறுப்பிற்கு செல்லும் இரத்த ஓட்டமானது குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.
10. புராஸ்ட்ரேட் அறுவை சிகிச்சை புராஸ்ட்ரேட் அறுவை சிகிச்சை செய்த 70 சதவீதம் ஆண்கள் தங்களது ஆணுறுப்பு சுருங்குவதை உணருகின்றனர். உங்களது ஆணுறுப்பானது புராஸ்ட்ரேட் அறுவை செய்தவர்களுக்கு பெரும்பாகும் அரை இஞ்ச் முதல் முக்கால் இஞ்ச் வரை ஆணுறுப்பு சுருங்குகிறதாம்.
11. ஊட்டச்சத்து உணவு நீங்கள் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். அனைத்து சத்துக்களும் உள்ளடங்கிய சரிவிகித உணவை உட்க்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
12. புகைப்பிடிப்பது உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அது இந்த புகைப்பிடிக்கும் பழக்கத்தால் பாதிப்படைய கூடும். எனவே நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டியது அவசியமாகிறது.
13. மருத்துவ சிகிச்சை ஆணுறுப்பு அறுவை சிகிச்சை செய்த பிறகு, அது சரியாக 6 முதல் 12 மாதங்கள் எடுத்துக்கொள்ளும். இது முழுமையாக சரியாகும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியது அவசியம். மேலும், மருத்துவர் உங்களுக்கு ஆணுறுப்பிற்கு இரத்த ஓட்டம் செல்ல, சில வயாகரா மற்றும் விரைப்பு தன்மையை அதிகரிக்கும் சில உணவுகள் மற்றும் மருந்துகளை பரிந்துரை செய்வார்.