“நீளம்” என்பது ஆணின் லிங்கத்தை (குறியை) குறிப்பதாகும்.
“ஆழம்” என்பது பெண்ணின் யோனியைக் குறிப்பதாகும்.
லிங்கம் சிலருக்கு அதிக நீளமாகவும், சிலருக்கு சாதாரண நீளமாகவும், இன்னும் சிலருக்குச் சிறியதாகவும் காண ப்படும்.
யோனியானது சில பெண்களுக்கு ஆழமாகவும், சில பெண்களுக்கு ஆழமற்றதாகவும் காணப்படும்.
இந்த ஆழ – நீளத்தை விளக்க காமசூத்திர அறிஞர்கள் முயல், மான், எருது, குதிரை, யானை என்று மறைமுக உவமைகளோடு குறிப்பிடுகிறார்கள். அதற்கு காரணம் முயல், மான், எருது, குதிரை, யானை ஆகியவற்றை அனைவரும் அறிவதோடு, அவற்றின் தோற்றம், அமைப்பு, உறுப்புகள், செயல் யாவும் நன்றாகத் தெரியுமென்பதால் அவற்றை உவமைகளாக குறிப்பிடும்போது ரசனையாகவும், சுலபமாகவும் புரிந்து கொள்ளமுடியும் என்பதே.
தன்னுடைய லிங்கம் எத்தகையது என்பதை ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்வதில் எவ்விதக் கஷ்டமுமில்லை. அதேபோல யோனியின் தன்மையை ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொள்ள முடியும். மேலும், பெண்ணின் யோனியை ஆணும், ஆணின் குறியை பெண்ணும் தெரிந்து கொள்வதில் எந்தச் சிரமமும் இல்லை. தோற்றத்திலும் செயலிலும் தெரிந்து கொண்டுவிடலாம்.
உறுப்புகளின் வகைகள் (ஆண்)
முயல் வகை ஆண்குறி எல்லாவற்றிலும் சிறியது.
எருது வகை ஆண்குறி நடுத்தரமானது.
குதிரை வகை ஆண்குறி மிக நீளமானது.
உறுப்புகளின் வகைகள் (பெண்)
பெண் மான் வகைப் பெண்குறி மிகவும் ஆழம் குறைந்தது.
பெண் குதிரை வகைப் பெண்குறி நடுத்தர ஆழமுடையது
பெண் யானை வகைப் பெண்குறி மிகவும் ஆழ மானது.
யோனியின் ஆழத்துக்குத் தகுந்தவாறு அதன் சுற்றளவு அமைந்திருப்பினும் அது சுருங்கி விரியும் தன்மையுடையதென்பதால் சுற்றளவு மாறுபடக்கூடும். நீளத்துக்கும் குறைவான ஆழத்துக்கும் பொருந்தாது. குறைவான நீளத்துக்கும் அதிக ஆழத்துக்கும் பொருந்தாது. சரிசமமான ஆழத்துக்கும் சரிசமமான நீளத்துக்குமே பொரு ந்தும்.