Home பாலியல் ஆணிற்கு பால் உணர்ச்சி அதிகமா?

ஆணிற்கு பால் உணர்ச்சி அதிகமா?

24

Image-8பால் உணர்ச்சியென்பது – இயல்பான ஒரு விசயம். மனிதனுக்கு மனிதன் பால் உணர்ச்சியின் அளவு வேறுபாடு உடையதாகும். அதன் காலஅளவிலும், இந்த வயதுவரைதான் பால் உணர்ச்சி உச்சநிலையில் இருக்கும் என்ற தன் மையிலும் வேறுபாடு உண்டு.

பெண்ணோடு சேரும் தகுதியை ஓரு ஆண் அவனுடைய பதினாறாவது வய தில் பெறுகிறான். அப்போது தான் அவன் வளர்ச்சி அடைந்த ஒரு ஆணாக தன்னையே கருதி கொள்கிறான். ஆண் விந்துவை வெளியேற்றும் ஆற்றல் பெறுவதற்கு முன்பாகவே புணர்ச்சி செய்யும் ஆற்றலை பெற்று விடுகிறான்.
அதாவது விந்து ஏற்படுவதற்கு முன்பாகவே ஆண்மைக்கு வீரியம் ஏற்பட்டு விடுகிறது. பின்னர் முதிர்ந்தவனாக ஆகும்போது விந்து சுரக்க ஆரம்பிக்கி ன்றது.

அப்போதிலிருந்து ஆண்மை தன்மை விரைவாக வளர்ந்து கொண்டே செ ன்று அவனுடைய இருபத்தைந்தாவது வயதில் உச்ச நிலையை அடைகிறது. நாற்பதிலிருந்து ஐம்பதுவரை அதே உச்ச நிலையை ஆண் பெற்றிருப்பான். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்குகின்றது. அறுபதுக்கு மேலே ஆண்மைத் தன்மை குறைந்திருக்குமே தவிர முற்றிலுமாக இல்லாமல் போய் விடாது.. பால் உணர்ச்சி என்பது நமது மூளையில் பிறக்கின்றது. பால் உணர்ச்சி என்பது மிக சிக்கலான ஒன்று. சில சமயம் செக்ஸ் உணர்ச் சி மனதில் எழுகின்ற ஆசையினாலும், வெளியிலிருந்து வரும் கிளர்ச்சிகளா லும் உண்டாகலாம். இக் கிளர்ச்சி, தான் விரும்பிய பெண்ணின் நினைவால், அல்லது அப் பெண்ணை பார்த்ததால், அவளுடன் பக்கத்தில் இருப்பதால், ஆபாச ஓவியத்தை, படங்களை பார்ப்பதாலும் உண்டாகலாம்.

புணர்ச்சியில் ஆண் குறியின் எழுச்சியை கட்டுப்படுத்தும் நரம்பே முக்கிய மானது. இந்த நரம்பு முதுகுத் தண்டின் லம்பார் பகுதியில் அதாவது முதுகி ன் கீழ் பகுதியில் அமைந்திருக்கிறது. இவ்விடத்தில்தான் விந்துவை வெளியே ற்றும் பகுதியும் அமைந்துள்ளது. ஆணின் செக்ஸ் உறுப்பின் அமைப்பு எளிய முறையில் அமைந்ததில்லை.ஆணின் இனப் பெருக்க முறை பல ஒன்றுக் கொ ன்று இணைந்து வேலை செய்யக்கூடிய உறுப்புகளால் நடைபெறுகிறது .ஆண் மை முழு அளவில் இருக்க வேண்டுமானால் ஒவ்வொரு உறுப்பும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்க வேண்டும். ஆண்பிறப்புறுப்பு சுரப்பி களான விதைகளும், ஆண் குறியும் தான் வெளி யே தெரிபவையாகும். வெளியே தெரியும் உறுப்புகள் மட்டுமின்றி மேலும் சில உள் உறுப்புகளின் செயல்பாடும் இணைந்துதான் ஒரு ஆணை முழுமை யான ஆண்மை நிறைந்தவனாக ஆக்குகின்றன.

உடல் வலிமையுடன், திட காத்திர மாக இருக்கும் ஆணிற்குதான் செக்ஸ் உணர்ச்சி அதிவேகமாக இருக்குமென்பது மக்கள் நம்பிக்கையாக உள்ளது. இது தவறான நம்பிக்கையாகும். குத்துச்சண்டை வீரர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் பால் உணர்ச்சியானது மிக குறைவாக இருக்கும் என்பதுகூட நிரூபிக்கப்படாத நம்பிக்கைதான். ஆண்களின் பால் உணர்ச்சியை ஆராய்ந்த மருத்துவ அறிஞர்கள்- ஆண்களில் பலர் புணர்ச்சி நோய் தொடர்பு இல் லாத, வேறு வகை பாலியல் கோளாறுகளாலும், அலித் தன்மையாலும் துன்பு றுகின்றனர். இக் கோளாறுகள் உள்ளவர்களை மேலெழுந்த வாரியாக பார் த்தால் எந்த குறைபாடும் வெளிப்படையாக தெரியாது. எல்லோரையும் போ லவே நல முடன்தான் காட்சி அளிப்பார்கள்.

ஒரு ஆணின் உடம்பில் இருக்கும் வேறு சில உறுப்புகளின் பிரச்சினைக ளால்கூட செக்ஸ் உணர்ச்சி மாறுபடலாம். உள்ளத்தின் தன்மையாலும், பால் உணர்ச்சியின் தன்மை மாறக் கூடியதாகும். கற்பனை உலகில் உலவுபவர் களுக்கு பொதுவான மனிதர்களைவிட மிகவும் அதிகமான பால் உணர்ச்சி இருக்கும். ஆண்மைத் தன்மை ஆணிற்கு ஆண் வேறுபாடு கொண்டதாக இருக்கும்.

ஆணிற்கு பெண்களைவிட அதிகமாக செக்ஸ் உணர்ச்சி உண்டு என்றும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் தவறான நம்பிக்கையே. ஆணைப்போல பெண்களுக்கும் செக்ஸ் உணர்ச்சி என்பது பொதுவானதே. சூழ்நிலை, உடல்நிலை, மனநிலை, வயது, ஆர்வம் போன்றவற்றை பொருத்தே ஆணிற்கும் பெண்ணிற்கும் செக்ஸ் உணர்ச்சி அமைகின்றது.