Home சூடான செய்திகள் ஆசையா வர்றப்ப போரடிக்குதுன்னு சொல்லாதீங்க!

ஆசையா வர்றப்ப போரடிக்குதுன்னு சொல்லாதீங்க!

27

vlcsnap-2014-04-24-15h19m09s122இல்லற வாழ்க்கையில் தம்பதியர் இருவரும் தனியாக சந்திக்கும் ஒரே இடம் படுக்கையறைதான். அங்கேயும் அவசர கதியில் இயங்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இதனால் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் மனைவி ஏமாற்றமடைய நேரிடுகிறது. எனவே மனைவியை கவரும் வகையில் நடந்துகொள்ள ஆண்களுக்கு சில சங்கதிகளை தெரிவித்துள்ளனர் உளவியல் வல்லுநர்கள்.

சுத்தமா இருக்கணுங்க

படுக்கையறையில் சுத்தமும், சுகாதாரமும் கடைபிடிக்கவேண்டியது அவசியம், சிகரெட் வாசமோ, மது வாடையோ மூடை மாற்றிவிடும். அனைத்து பெண்களுமே சுத்தமான சுகந்தமான வாசனையையே படுக்கையறையில் எதிர்பார்க்கின்றனர். எனவே ஆண்களே உங்களின் சுத்தமும், சுகந்தமும்தான் பெண்களை கவரும்.

ரொமான்ஸ் அவசியம்

தாம்பத்ய உறவு என்பது இயந்திரத்தனமானது அல்ல. அது உணர்வுப் பூர்வமானது. ஏதோ கடமைக்கு செயல்படும் கணவர்களை பெண்கள் விரும்புவதில்லை. கொஞ்சம் காதல், கொஞ்சம் காமம் கலந்த கணவர்களையே மனைவிகள் விரும்புகின்றனர். படுக்கையறையில் உடல் ரீதியான தொடுகைகளை விட உள்ளரீதியான தொடுகை முதலில் அவசியம். அதைத்தான் பெண்களும் எதிர்பார்க்கின்றனர்.

வேலையிருக்கு

வேலை யாருக்குதான் இல்லை. படுக்கையறையில் ஆசையாய் உங்கள் துணை உங்களின் அருகில் வரும்போது வேலை பார்த்துக்கொண்டு இருக்காதீர்கள். அப்புறம் அலுவலகத்திற்கும், படுக்கையறைக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அப்புறம் அன்றைய அப்செட் ஒருமாதம் வரையும் நீடிக்கலாம்.

மென்மையான அணுகுமுறை

படுக்கையறையில் கடுமையான அணுகுமுறையை பின்பற்றுவதை எந்த பெண்ணுமே விரும்புவதில்லை. அநேகம் பெண்கள் புகார் தெரிவிப்பது இதைத்தான். நீங்கள் வேட்டைக்காரர் போல செயல்பட படுக்கையறை ஒன்றும் கானகம் அல்ல. அங்கே மென்மையான அணுகுமுறையை கடைபிடித்தால் இனிய கனவுகள் உற்பத்தியாகும். இல்லையெனில் வேட்டைகாரன் கையில் அகப்பட்ட மானைப் போலத்தான் பெண்கள் உணர்வார்கள்.

அப்பாடா முடிஞ்சது

உறவு முடிந்த உடனே எதோ கடமை முடிந்தது என்ற கணக்காக தம் அடிக்கவோ, தூங்கவோ போய்விடும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லையாம். அழகாய் ஒத்துழைத்த துணைவியின் நெற்றியில் மென்மையாய் ஒரு முத்தம். மார்பில் சாய்ந்து செல்லமாய் ஒரு உறக்கம். தலைகோதுவது போன்ற சின்ன சின்ன ஐட்டங்களை ரொமான்ஸ் நடவடிக்கைகளை கணவர் செய்யவேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனராம். இதெல்லாம் படுக்கையறையில் நிகழ்ந்தால் உங்கள் மனைவி உங்களின் மகுடிக்கு மயங்கிய துணைவியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை