மிக மிக சுலபமாகத் தயாரிக்கத் தக்க உணவு வகை கேசரி. அதே சமயம் வயிறு நிரப்பி வயிற் றை ஹெவியாக உணர வைக்கா மல் லைட்டாக வைக்கும் உணவு சுவை மிக்க உணவு என்று பார் த்தால், அவல் கொண்டு தயாரிக்கும் உணவுகளா கவே இருக்கும். அவல் சேர்த்து சுவை மிகுந்த கேசரி செய்யலாம்.
வீட்டிற்கு வெளியே தங் கி சமைத்துக் கொண்டு கல்லூரி அல்லது அலுவலகம் செல்லும் அனைவராலும் மிகச் சுலபமாகச் செய்யத்தக்கது அவல் உணவுகள். கெட்டி அவல், மெல்லிய அவல், சிவப்பரிசி அவல் என்று பல்வேறு வகையான அவல்கள் தற்காலத்தில் சூப்பர் மார்க்கெட்டு களில் ரெடி மேடாக கிடைக்கின்றன. இவற்றால் செய்யப் படும் உணவுகள் வயிற்றை நிரப்பினாலும், வயிற்றையும் உடலையும் மந்தமில் லாமல் `லைட்’ டாக உணர வைக்கும்.
புராணத்தில் கிருஷ்ணருக்கு பிரியமானது அவல். அவலைக் கொண்டு கேசரி செய்வதானது பாகு பதம் பழக்க மில்லாதவ ர்களுக்கு கூட மிகவும் சுலபம்.
வாருங்கள் இம்முறை அருமை யான அவல் கேசரி செய்து சுவைப்போம்…
தேவையான பொருட்கள்
மெல்லிய அவல் – 1 கப்
பால் – 1 கப்
தண்ணீர் – 1/2 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
நெய் – 6 டேபிள் ஸ்பூன்
முந்திரி, திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* அடிகனமான வாணலியில் நெய் ஊற்றி, முந்திரி, திராட் சையை முதலில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வும்.
* பிறகு அதே வாணலியில் நெய்யில் அவலைப் போட்டு நன்கு வதக்கவும்.
* தொடர்ந்து சூடான பாலும், தண்ணீரும் கலந்து வதங்கும் அவல் கலவையில் ஊற்றவும்.
* அவல் வெந்தவுடன், சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்து இலேசான தீயில் நன்கு சேர்ந்தாற்போல் வரும் வரை கிளறி இறக்கவும்.
* வறுத்த முந்திரி, திராட்சை தூவி பரிமாறவும்.
குறிப்பு
* தேவையானால் கேசரி கலரை அவல் கேசரி செய்ய உப யோகிக்கலாம்.