Home பெண்கள் உடல் கட்டுப்பாடு அழகான, வலிமையான கால்களுக்கான பயிற்சி

அழகான, வலிமையான கால்களுக்கான பயிற்சி

28

4635efb1-d6eb-4e08-8af5-cabbf2024141_S_secvpf1இந்த பயிற்சி குறிப்பாக பெண்களுக்கு நல்ல பலனை தரக்கூடியது. வீட்டில் இருக்கும் பெண்கள் நன்றாக சாப்பிட்டு, உறங்குவதால் அவர்களின் உடல் எடை விரைவில் அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக வயிறு, கால் தொடை பகுதிகளில் சதை அதிகரிக்கும்.

இவர்களுக்கு உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்ய விருப்பம் இருக்காது. இவர்களுக்கு என்று வீட்டில் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றுள் விரைவில் பலன்தரக்கூடிய பயிற்சி இது. இந்த பயிற்சி மனதை ஒருநிலைப்படுத்தவும் உதவுகிறது.

பயிற்சி செய்முறை :

முதலில் விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். பின்னர் மெதுவாக வலது காலை தரையில் ஊன்றி இடது காலை உடலின் பின்புறமாக கொண்டு சென்று நேராக நீட்டவும். அப்போது இடது கை இடது பக்கமாக உடலோடு ஒட்டி இருக்க வேண்டும். வலது கையை முன்புறமாக நேராக நீட்டவும்.

இப்போது உங்கள் உடல் நேர்கோட்டில் இருப்பதை போல் (படத்தில் உள்ளபடி) இருக்க வேண்டும். இவ்வாறு 15 விநாடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.

இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 15 முறையும் பின் எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 20 முதல் 25 முறையும் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்ய சற்று கடினமாக இருக்கும். பின்னர் செய்ய செய்ய சரியான முறையில் செய்ய முடியும்.