Home பெண்கள் உடல் கட்டுப்பாடு அழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்?

அழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்?

37

d_andrea_largeஇதெல்லாம் நீங்க எப்படி சுகுமார்ஜி… என்று கேட்கின்றீர்களா? அடிப்படையில் நான் ஓவியன். நான் நிறைய கண்டிருக்கிறேன்… என் ஓவிய பயிற்சிக்காக… பார்வையிலும், மனதிலும் எந்த காம உணர்வுமின்றி உங்களால் அதை காண இயலுமானால், நீங்கள் கூட ஓவியனாகலாம்…
வணங்கும் இறைவனுக்கே இந்த மார்பக படைப்பு, வடிவமாக இருப்பதை காணலாம். திருவண்ணாமலை இறைவியை உண்ணாமுலை அம்மன் என்றுகூட அழைத்து மகிழ்கின்றோம். சிற்பக்கலையில் இந்த மார்பு வடிவம் அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கும். சில அரசர்கள், தங்கள் மனைவியோடு!? முலை பற்றிய கையோடு கலந்திருக்கும் யானைத்தந்த வேலைப்பாடுகளில் தங்களை கண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். ஆதாரமிருக்கிறது.
இதை பார்த்த மாத்திரத்தில் ஒரு ஆண் உண்ர்ச்சிவப்படுவதில் இருக்கக்கூடிய ஒரு உண்மை, தன் தாயிடமிருந்து அதில் உணவுவைப் பெற்றதினாலேதான். ஒரு பெண், இந்த உணர்வுகளை பெறும் வயதில், தனக்கே அப்படி உருவாவதை உணரத் தொடங்கிவிடுகிறாள்… எனவே அவளுக்கு இதில் ஆர்வமிருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், அதை அந்த இளவயதுகளில் தனக்கிருப்பதை மறைக்கவே விரும்புகிறாள்… என்றாலும் கால மாற்றத்தில், இருப்பதை வெளிக்காட்டும் தன்மை இப்பொழுது இருப்பதாக நான் கருதுகிறேன். அதற்கு சில மம்மி மார்களும் துணை… உதாரணங்களையும் நான் காட்ட இயலும்.
இந்த முலை என்ற வார்த்தை இறைத்தன்மையோடு இணைந்திருந்தும், நாம் பயன்படுத்தவதும், அர்த்தப்படுத்திக்கொள்வதும் வேறுமாதிரியாகத்தான்.
ஒவ்வொரு தனி மனிதனும், சேர்ந்து, சேர்ந்துதான் இந்த சமூகமாக இருக்கிறோம் என்பதை நாம் உணர்வதில்லை. யார் என்ன சொன்னாலும், “நீ ரொம்ப ஒழுங்கா?” என்று கேட்கின்றனர். அதாவது இதன் முழு உள் அர்த்தமானது “நான் ஒழுங்கில்லை… அது போலவே நீயும் ஒழுங்கில்லை” என்பது தான். ஒவ்வொரு கேள்வியிலும் அதற்கான பதில் இருப்பதை எங்களைப்போன்ற தொடர்பியல் துறை அன்பர்கள் அறிந்து கொள்வார்கள். இதில் நான் கட்புல தொடர்பியல் (Visual Communication) துறையைச் சார்ந்தவன். என்னிடம் எதிராளி பேசவேண்டியதில்லை. எதிராளியின் சின்ன சின்ன அசைவுகள் மூலமாகவே அவன் சொல்ல விரும்புவதை, அவன் மன ஓட்டத்தை, இயல்பை நான் உணர்ந்து கொள்ளமுடியும்.
(நான், கட்புல தொடர்பியலில்,(Visual Communication)சிறப்பு விரிவுரையாளர், கல்லூரியில் அத்துறையில் பணி புரிந்திருக்கிறேன். அதோடு இப்பொழுதும் சில கல்லூரிகளுக்கு தலைமை விருந்தினராக “கணிணி, தொழில் நுட்பம்” குறித்து சொற்பொழிவும் தருகிறேன்… அழைத்தாலும் வருவேன்
வெளியே மறுப்பதும், உள்ளுக்குள் விரும்புவதுமான ரெட்டைதன்மைதான் இந்த உலகில் நாம் பெற்றுக்கொண்டிருக்கும் எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் ஆதாரம். உனக்குவேண்டுமென்பதை நீ மறுப்பாயானால், தகுதி உடைய இன்னொருவனுக்கு போய்ச்சேர்ந்துவிடும். பிறகு நீ அவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாய். மனதிற்குள் புகைந்து கொண்டிருப்பாய். பிறகு அதுவே பொறாமை, வெறி, பழி வாங்கும் நடவடிக்கைகளாக எதிராளிகள் மேல் நிகழ்ந்து கொண்டிருக்கும். அது உன் மனைவியானாலும், குழந்தைகளானாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்.
இந்த மார்பகம் குறித்து பேசுவதற்கு தகுந்த வயது காலத்தில் தயக்கம் வேண்டியதில்லை. சங்க இலக்கியங்களில் இது குறித்து சொல்லாத பாடல் இல்லை. திருவள்ளுவரும், இந்த பெண்ணின் அழகு மார்பு, ஒரு யானையின் முகத்தில் செய்யப்பட்டிருக்கும் ஆபரண அழகு போல இருப்பதாக சொல்லியிருக்கிறார்.
கேரள யானைகள்… ஆமாம்… யானைகள்தான் அய்யா… ஞாபகம் வந்திருக்க வேண்டுமே!?
கடாஅக் களிற்றின்மேல் கட்படாம்மாதர்
படாஅ முலைமேல் துகில்
இன்பத்துப்பாலில், களவியல், 109 ம் அதிகாரம், தகையணங்குறுத்தல், 1087வது குறள்.
என் மாணவர்களிடம், சிலநேரங்களில் கேட்டதுண்டு, “எத்தனை மாணவர்கள் திருவள்ளுவரின் இன்பத்துப்பால் படித்திருக்கிறீர்கள்?” என்று…
“அதை படிப்பதற்கெல்லாம் நேரமில்லை அய்யா”… (“எல்லாமே நேரடியாகவே வலையில் பார்த்துவிடுகிறோம் என்பதாக பதில் சொல்லுகிறார்கள்”).
திருவள்ளுவர் சொல்லாத காமமே இல்லை. இப்பொழுது இருப்பது காமமும் இல்லை. அவர் வைத்த தலைப்பு காமத்துப்பால்… ஆனால் அது அசிங்கமாக இருப்பதாக கருதி “இன்பத்துப்பால்” என்று திரித்து வைத்து விட்டனர். “காமம்” என்ற வார்த்தையை தமிழர்களான நாமே, நமக்கு அசிங்கமாக இருக்கிறது என்றால்… இனி போகப்போக அம்மா என்பதை வேறுமாதிரி மாற்றாமலிருந்தால் சரி.
நல்லது. இனி மார்பகங்கள் குறித்த ஆராய்ச்சிக்கு வரலாம்… கவர்ச்சியான மார்பகங்கள் பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் இருக்கிறது.
ஆங்கிலத்தில் இரண்டுக்குமே Breast தான். கூடுதலாக மரபுவழி வார்த்தையாக Boob என்கின்றனர். எனக்கென்னமோ ஓவியனாக இருப்பதால் அந்த இரண்டு “O” வும் அப்படித்தான் தெரிகின்றன. இதே Boob, தவறை குறிப்பிடும் சொல்லாகவும் இருக்கிறது, ஒருவரை திட்டுவதற்கும் உபயோகப்படுகிறது.
தமிழில் பார்த்தால்,“தனம், கொங்கை” இப்படி பல வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. அனேகமாக சங்க இலக்கியம் தமிழ் படிக்கும், படித்தவர்களுக்கே இன்னும் நிறைய தெரிந்திருக்கும்.
ஒரு ராசிப்படி, மார்பை குறிக்கும் ராசி… கடகம். ஒருவரின் லக்கனப்படி பார்த்தால் நாலாமிடம் குறிப்பிடலாம். சில ஆய்வுகள் ஏழாமிடமிடத்திலிருக்கும் கிரகங்கள் அடிப்படையிலும் சொல்லும்படி இருக்கிறது.
இந்த ஆய்வில் ஒரு ஜாதகர், தனக்கான மார்பையும், வரப்போகிற துணைக்கான மார்பையும் கூட அறிந்துகொள்ள இயலும்.
சோதிடவியல், இன்னமும், இருக்கிற மனிதர்களால் முழுதும் புரிந்துகொள்ள இயலாத அறிவியல். அதிலிருக்கக்கூடிய அற்புதங்கள் அறிய காலம் போதாது.
இனி…ஒரு ஜாதகத்தில் நாலாமிடத்தில்…
சூரியனிருந்தால் வசீகரமான மார்பை பெற்றவ(னாக) ளாக இருப்பார்.சந்திரனிருந்தால் மனதை கவரும் மார்பை பெற்றவ(னாக) ளாக இருப்பார்.சுக்கிரனிருந்தால் எதிராளியை மயக்கும் பெரிய மார்பை பெற்றவ(னாக) ளாக இருப்பார்.சனியிருந்தால் தளர்ந்த மார்பை பெற்றவ(னாக) ளாக இருப்பார்.புதனிருந்தால் அளவைவிட பெருத்தோ, சிறுத்தோ மார்பை பெற்றவ(னாக) ளாக இருப்பார்.குரு இருந்தால் அளவான, பரந்த மார்பை பெற்றவ(னாக) ளாக இருப்பார். செவ்வாய் இருந்தால் பரந்த மார்பும், வசீகரமில்லாத மார்பை பெற்றவ(னாக) ளாக இருப்பார்.ராகு, கேதுக்கள் இருந்தால் பெண்களுக்கு மிக தளர்வாகவும், ஆண்களுக்கு அவை இருப்பது போலவும் தோன்றும்.
அடுத்து… ஒரு ஆண் ஜாதகத்தில் ஏழாமிடத்தில்…
சூரியனிருந்தால் அவன் மனைவிக்கு நல்ல மார்பகமிருக்கும்.சந்திரனிருந்தால் மிக அழகான மார்பகமிருக்கும்.சுக்கிரனிருந்தால் அளவில் பெரிய மார்பகமிருக்கும்.புதனிருந்தால் வடிவமில்லாத மார்பகமிருக்கும்.சனியிருந்தால் வடிவில் குறுகிய தளர்ந்த மார்பகமிருக்கும்.குரு இருந்தால் அழகான மார்பகமிருக்கும்.செவ்வாய் இருந்தால் சராசரியான மார்பகமிருக்கும்.ராகு, கேதுக்கள் இருந்தால் மார்பகமே இல்லாததாக தோன்றும்.
இதுபோக உடல் நல குறைபாடுகள், நோய்த்தன்மையும் மார்பகங்களை பாதிக்கின்றன. குழந்தைப்பேறின் காலத்தில் அவை முழுவடிவை அடைகின்றன என்பது இயல்பு. இது ஒரு பொது விதிக்குள் அடங்குபவை. மார்பகங்கள் வளர்ச்சி குறை, நிறை குறித்து கவலை வேண்டியதில்லை. ஒரு நல்ல இல்லறத்திற்கு, மார்பகங்களின் துணை தேவையற்றதாகவே கருதலாம்.
எனவே இதற்காக வாழ்வை கசக்க!? வேண்டியதில்லை.
ஒரு ஜோக் ஒன்று உண்டு. விவாகரத்துக்கு முறையிட்ட ஒரு தம்பதியினரை நீதிபதி விசாரித்துக்கொண்டிருக்கிறார். அப்பொழுது கணவனும், மனைவியும் தன் கைகள் மூலமாகவும், வார்த்தைகளாகவும் இப்படி சொல்லிக்கொண்டிருகின்றனர்.