மனைவி அல்லது கணவன் அமைவது கணவனுக் கோ அல்லது மனைவிக் கோ இறைவன் கொடுத்த வரம். அது நன்றாக அமைவது அவரவர் தலையெழுத்தை பொறுத்து அமைகிறது. நாம் அனைவரு ம் மிகுந்த மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டாலும், அந்த பந்தத்துடன் சேர்ந்து பயணிக்கும்போது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதனால் அவர்கள் பிரிந்தும் கூட விடுகின்றனர்.
இந்த பிரச்சனைகளுக்கு சப்பை காரணங் களும் இருக்கலாம், ஏன் பெரிய பூகம்பமாக கூட இருக் கலாம். நாம் எதிர்பாராமல் இவை அனைத்தும் நடந்துவிடும். திருமண வாழ்வில் பிரச்சனைக ள் உள்ளதென்றால். அது சில அறிகுறிகள் மூல மாக நமக்கு காட்டிவிடும். பிரச்சனை ஏற்பட்டு, அது முறிந்தபின்னர்தான் அதை தடுத்திருக்க லாமே என்று யோசித்தாக வேண்டுமா? விவாக ரத்து என்பது ஒரு திருமண த்தின் சோகமான முடிவாகும்.
இந்த விவாகரத்து அவர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கி குழப்பங்களை உண்டு பண்ணு ம். யாராக இருந்தாலும் அதை விரும்புவ தில்லை. ஆகவே பொக்கிஷமான இந்த உறவை அழிக்கும் பிரச்சனைகளான அறி குறிகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள். அவற்றைப் படித்து, இத்தகைய அறிகுறி கள் உங்களுக்குள் இருந்தால், அதனை நீக்கி விட்டு, வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங் கள்.
பழைய விஷயத்தைக் கிண்டுவது, பட்டப் பெயர் வைத்து கூப்பிடுவது, வசைபாடுவ து, மாமனார் மாமியாரை பற்றி குறை கூறுவது என இவை அனைத்தும் இருவ ருக்கும் நடக்கும்
இருவருமே சண்டை போடுவதற்கு சப் பை காரணங்களை தேர்ந்தெடுப்பார்கள். இதன் விளைவு, ஒருவரை ஒருவர் தவிர்க்க வீட்டிற்கு வர பிடிக்காமல் போகும். சின்ன குறை கூட பெரிய சண்டையாக மாறலாம். இதற்கு தீர்வே இல்லை என்று பல பேர் தவறாக நினைக் கின்றனர்.
நீங்கள் சொல்லும் விளக்கத்திற்கு லாஜிக் இருக்காது. நீங்கள் சொல்வது தான் சரி என்ற ஈகோ வந்து விடும்.
இனி இருவருக்கும் மத்தியில் ஆரோக் கியமான போட்டி இருக்காது. உங்களு க்கு அனுபவமோ, அறிவோ இல்லாத விஷயத்தில் உங்கள் துணையின் உதவியோ அறிவுரையோ இனி கிடைக்காது. உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இனி அவர் இருக்கமாட் டார்.
நீங்கள் ஒத்துக்கப்பட்டு கவனிப்பாரின்றி கிட ந்தால், உங்களுக்கு அந்த வீட்டின் உறுப்பின ர் என்ற எண்ணம் போய் ஒரு வெளியாள் என் ற எண்ணம் குடியேறிவிடும். அந்த குடும்பத் தின் ஒருவராக உங்களை உங்களால் எண்ண வே முடியாது. இனி அது நம்குடும்பம் அல்ல என்று தோ ன்றத் தொடங்கும். இது மிகவும் ஆபத்தான எண்ணம்.
திருமணத்திற்கு பின் கள்ளத் தொடர்பு வைத் துக் கொள்வது, குடும்ப வாழ்க்கையை சீரழி த்துவிடும். அது ஒரு மன்னிக்க முடியாத குற் றமாகும். மேலும் இது உங்கள் திருமண வா ழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்.
இருவரில் ஒருவருக்கு உடலுறவில் ஈடுபா டு இல்லாமல் போனால், வாழ்க்கை சந்தோ சம் இல்லாமல் போகும். திருமண வாழ்க்கை சுமூக மாக போக செக்ஸ் கூட ஒரு முக்கிய காரணமாகும்.
இரண்டு பேரில் ஒருவர் பிரச்சனையை விட்டு தப்பியோடும் குணாதிச யத்தோடு இருந்தால், பிரச்சனை பெரிசாகிதான்போ கும். இது கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந் து, விஸ்வரூபம் எடுத்து தாண்டவமாடி, உங்கள் உறவை உடைத்து விடும்.
காதல் மொழி அல்லது பூங்கொத்து என்று கூட அவசியம் இல்லை, ‘நீ எப்படி இருக்கிறாய்’ என்று கேட்காமல் இரு ந்தால்கூட, பிரச்சனை தொடங்கி விடும். உங்களுக்கு இடையே அமை தி அதிகரித்து கொண்டே போனால், உங்கள் உறவும் நின்று விடும்.
Home உறவு-காதல் அழகான திருமண வாழ்க்கைக்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கும் ‘சில’ சமாச்சாரங்கள்