இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் எதிர்கொள்கிற பிரச்னை தான் அல்சர்(குடல் புண்).
உணவு பாதையில் உள்ள உணவு குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவற்றில் ஏற்படும் திசுக்கள் சிதைவு மற்றும் பாதிப்பே குடல்புண் எனப்படும்.
குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும், நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.
கலப்பட உணவு, அசுத்த குடிநீர், மோசமான சுற்று சூழலாலும் ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobactor pylori) என்ற பாக்டீரியாவாலும் குடல் புண் ஏற்படுகிறது.
சாப்பிட வேண்டியவை
* சத்தான சரிவிகித உணவு, குறிப்பிட்ட நேரத்தில் உண்ண வேண்டும்.
* பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.
* பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.
* உடல் எடை குறைய, அல்சர், கொலஸ்ட்ரால் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, ரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு சிறந்த டானிக். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம்புல்தான்.
* கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்சர் இருப்பவர்களுக்கு இது நல்ல டானிக் ஆகும். பசியை தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
* மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது வல்லாரை. தினமும் 2 வேளை சிறிதளவு இலைகளை சாப்பிடலாம்.
* மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகள், புற்றுநோய், அல்சர், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் முதலியவற்றை கட்டுப்படுத்தலாம்.