Home சமையல் குறிப்புகள் அப்பக்கா செய்முறை!

அப்பக்கா செய்முறை!

29

தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – 2 கப்
புளித்த தயிர் – 2 கப்
கடலைப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் – ஒரு மூடி
மிளகாய் வற்றல் – 6
உப்பு – ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – 250 கிராம்
செய்முறை
புழுங்கல் அரிசியை களைந்து எடுத்து புளித்த தயிரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடலைப்பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும். புழுங்கல் அரிசியை ஊறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அதனுடன் ஊறிய கடலைப்பருப்பை சேர்த்து அரைத்து எடுக்கவும். அதே மிக்ஸியில் சிவப்பு மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி ஆகியவற்றை நைசாக அரைத்து எடுக்கவும்.
அரிசி, பருப்பு கலவையுடன் தேங்காய், மிளகாய் விழுதை சேர்த்து கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி போட்டு கலக்கவும். மாவு உருட்டி போடும் பக்குவத்தில் இருக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை எடுத்து தட்டிப் போடவும். சிவந்ததும் எண்ணெயை வடித்து எடுத்து வைக்கவும். சுவையான அப்பக்கா தயார். டீயுடன் பரிமாறவும்.