ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்காது என்பார்கள். செக்ஸ் விஷயத்தில் நிறைய பேருக்கு இந்தப் பழமொழி பொருந்தும். எதிலும் நிதானமாக, பொறுமையாக முன்னேற மாட்டார்கள். மாறாக, அவசரம்தான், அதிரடிதான், கடைசியில் அலங்கோலம்தான்.
செக்ஸ் உறவுகளைப் பொறுத்தவரை ஆண்களுக்கு எப்பவுமே மூடுதான். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. அவர்களுக்கு மூடு இருக்கிறதா, இல்லையா என்பதை அறிந்து கொள்வதே ஒரு கலைதான். பெண்களைப் பொறுத்தவரை எப்போதுமே ஓப்பினாக இருப்பதில்லை. பெரும்பாலான பெண்கள் அப்படித்தான். சிலர் விதி விலக்காக இருப்பார்கள். எனவே பெண்களுக்கு மூடு இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டுதான் முன்னேற வேண்டும். அப்போதுதான் உறவு இனிக்கும்.
எப்போதெல்லாம் பெண்களை உறவுக்கு வற்புறுத்தக் கூடாது என்பதை முதலில் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. அதுபோன்ற சமயங்களில் அவாட் செய்து விட்டு மற்ற நேரங்களில் புகுந்து விளையாடலாம்.
கோபமா இருக்காங்களா…
பெண்கள் கோபமாக இருக்கும்போது கண்டிப்பாக உறவுக்கு வலியுறுத்தக் கூடாது. மாறாக அவர்களை ஆசுவாசப்படுத்துங்கள், ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள், அமைதிப்படுத்துங்கள். ஒரு வேளை செக்ஸ் உறவு அவருக்கு நி்ம்மதி, ரிலாக்ஸ் தரும் என்றால் அவருடைய அனுமதியுடன் உறவுக்கு முயலுங்கள். மன ஆறுதலை விட செக்ஸ் உறவு பெரிய திருப்தியைத் தந்து விடாது இதுபோன்ற சமயத்தில். எனவே கோபத்தைத் தணித்து அமைதியாக உதவுவதே இந்த சமயத்தில் ஒரு ஆணுடைய முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.
அப்செட்டா இருந்தாலும் வேண்டாம்
சில நேரங்களில் ஏதாவது ஒரு காரணத்தால் பெண்கள் அப்செட்டாக இருக்கலாம். மன வேதனையுடன் இருக்கலாம். சோர்வுடன் இருக்கலாம். அதுபோன்ற சமயத்திலும் உங்களது ஆறுதல்தான் நல்ல முதலுதவியாக இருக்கும். அணுசரணையாக பேசுங்கள், அருகில் அமர்ந்து முதுகைத் தடவிக் கொடுங்கள். அன்பாக முத்தம் கொடுங்கள். அரவணைத்துக் கொள்ளுங்கள். கைகளைப் பிடித்துக் கொள்ளுங்கள். அது போதும். மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
விளையாட்டு மூடில் இருந்தால்
நீங்களும் அவருடன் சேர்ந்து விளையாட கிளம்பி விடுங்கள். வேடிக்கையான விளையாட்டுக்களுக்கு மாறுங்கள். அவர் குதூகலிப்பதைப் பார்த்து நீங்கள் சந்தோஷப்படுங்கள். அவருக்குப் பிடித்தது போல விளையாடி அவரையும் குஷிப்படுத்துங்கள். அவருடைய சந்தோஷமே உங்களுடைய சந்தோஷம் என்பதை உணர வையுங்கள்.
அவர் ரிலாக்ஸாக இருக்க விரும்பும்போது…
அழகாக மசாஜ் செய்து விடலாம். செக்ஸியான மசாஜுக்கும் மாறலாம். டீ, காபி போட்டுக் கொடுத்து அன்பாக பேசுங்கள், அருகில் நெருக்கமாக அமர்ந்து கொள்ளுங்கள். மனம் வி்ட்டுப் பேசுங்கள். கன்னத்தைப் பிடித்து லேசாக கிள்ளி இதமாக பேசுங்கள். நெற்றி, கண்கள், கன்னம் ஆகியவற்றில் முத்தமிடுங்கள். இது சில சமயங்களில் சாப்ட்டான செக்ஸ் உறவுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பும் உண்டு. இருந்தாலும் கட்டாயப்படுத்துதல் கூடவே கூடாது, கவனம்.
சரி ரொமான்டிக் மூடில் இருந்தால்…
இதுதாங்க சரியான சமயம்… லைட்டாக ஆரம்பித்து புகுந்து விளையாட ஆரம்பியுங்கள். அவருக்குப் பிடித்தாற் போன்றவற்றை செய்து அவரை உற்சாகப்படுத்துங்கள், உறவுக்குள் இட்டுச் செல்லுங்கள். கை விரல்களில் ஆரம்பித்து எங்கெல்லாம் போக முடியுமோ அங்கெல்லாம் சென்று இறுதியில் இன்பத்தின் நுழைவாயிலை எட்டிப் பிடியுங்கள்.
இப்படி பெண்களின் மூடு அறிந்து முன்னேறும்போது கிடைக்கும் இன்பமே அலாதியானது…