Home பெண்கள் உடல் கட்டுப்பாடு அனைவருக்கும் உடற்பயிற்சி ஏற்றதா?

அனைவருக்கும் உடற்பயிற்சி ஏற்றதா?

17

2b8296d5-8ea4-415f-abb9-3ffd72c0efd5_S_secvpfஜிம்முக்கு சென்று உடல் வருத்தும் அளவுக்கு உடற்பயிற்சி செய்தால் மட்டும் ஆரோக்கியம் கிடைக்காது. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் அதன் தன்மை பிறழாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொருவரும் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மேற்கொள்ளவேண்டிய உடற்பயிற்சிகள் குறித்து பிசியோதெரபிஸ்டிடம் ஆலோசனை பெற்ற பின்னரே பயிற்சியை செய்ய ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் தங்கள் உடலுக்கு ஏற்ற பயிற்சி எது என்பதை அறிந்து பின்பற்றி பயன்பெற முடியும்.

உங்களின் உடலை குண்டாக ஆக்க வேண்டுமா, ஒல்லியாக ஆக்க வேண்டுமா, கட்டுக்கோப்பான உடலை பெறவேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். அதன்பிறகு அந்த இலக்கை அடைவதற்கு தேவையான உடற்பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட் பரிந்துரை செய்வார்.

உடற்பயிற்சி மேற்கொள்ள துவங்கிய பிறகு ஒவ்வொரு மாதமும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பதிவு செய்ய வேண்டும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான உடற்பயிற்சி மேற்கொள்வது சாத்தியம் இல்லை.

குறிப்பாக முதுகு வலி போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், அறுவை சிகிக்சை செய்து கொண்டவர்கள் சில உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். உடல் நலக்கோளாறு, தலைவலி, உடல் வலி போன்ற ஏதாவது உடல் உபாதைகள் இருந்தால் அன்றைய தினம் உடற்பயிற்சி செய்யக்கூடாது.

தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். வயதிற்கு ஏற்ற படி பயிற்சி செய்வது விரைவில் நல்ல பலனை தரும்.