“ஆக்ஸிடோசின்” அப்படிங்கிற ஹார்மோனைத்தான் காதல் ஹார்மோன்னு சொல்றாங்க மருத்துவர்கள்.
இந்த ஹார்மோன் பொதுவா, மகப்பேறு காலங்களிலும்,உடலுறவு சமயங்களிலும் அதிகமா சுரக்குமாம்! அதுமட்டுமில்லாம “உடலுறவுக்கு” அடிப்படையே இந்த ஆக்ஸிடோசின்தானாம்!
காதல்னா உடனே அது ஒரு இனம்புரியாத உணர்வு, தெய்வீக உணர்வு அப்படின்னெல்லாம் சொல்லுவாங்க இல்லியா?
ஆனா, அடிப்படையில “காதல்” அப்படின்னா என்னன்னு (மருத்துவ ரீதியா) பார்த்தோமுன்னா, மனுஷனோட பொதுவான உணர்வுகளான, “அன்பு, நம்பிக்கை, பரிவு, தியாக உணர்வு”, இப்படி பல வகையான உணர்வுகளோட ஒரு அழகான கலவைதான் காதல் அப்படின்னு சொல்லலாம்!
மேல சொன்ன அத்தனை உணர்வுகளையும் கட்டுபடுத்தக் கூடிய ஹார்மோன்தான் இந்த ஆக்ஸிடோசின் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! அதனால தான் இந்த ஹார்மோனை காதல் ஹார்மோன்னு சொல்றாங்களோ?!
மேல குறிப்பிட்ட எல்லா நல்ல உணர்வுகளுக்கும் காரணமான அதே ஆக்ஸிடோசின்தான் தீய உணர்வுகளான “பொறாமை, வக்கிரம்” போன்றவற்றுக்கும் அடிப்படைன்னு சமீபத்துல கண்டுபுடிச்சி இருக்காங்க ஹைஃபா பல்கலைகழகத்தச் சேர்ந்த ஆய்வாளர்கள்!
இதுவரைக்கும், அன்பு மாதிரியான நல்ல உணர்வுகளுக்கு மட்டுமே அடிப்படைன்னு நெனச்ச ஆக்ஸிடோசின், வக்கிரம் மாதிரியான தீய உணர்வுகளுக்கும் காரணமா இருக்கிறது ஒரு பக்கம் அதிர்ச்சியா இருந்தாலும், “ஆட்டிசம்” போன்ற நோய்களுக்கான சிகிச்சையில இத பயன்படுத்தலாம்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்!