Home பெண்கள் அந்த இடத்தில் அலர்ஜி உண்டானால் என்ன செய்ய வேண்டும்?…

அந்த இடத்தில் அலர்ஜி உண்டானால் என்ன செய்ய வேண்டும்?…

24

ஆணின் உடற்கூறுக்கும் பெண்ணின் உடற்கூறுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. குறிப்பாக பிறப்புறுப்புகள் சார்ந்த பிரச்னைகள் பெண்களுக்கு அதிகமாக வரக்கூடும்.

அதற்கு அந்த உறுப்புகளின் அமைப்பும் ஒரு காரணம். அதேபோல் ஹார்மோன் சுரப்பினால் உண்டாகும் பிரச்னைகளும் அதிகம். அவ்வாறு பெண்களுக்கு மட்டுமே உண்டாகிற சில நோய்த் தொற்றுகள் என்னென்ன?… அவற்றை இயற்கையான முறையில் எவ்வாறு சரிசெய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.

வெள்ளைப்படுதல் – அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வந்தால் நிற்கும்.

பிறப்புறுப்பில் அலர்ஜி மற்றும் புண் – வெந்நீரில் சுத்தமாக அந்தப் பகுதியைத் துடைத்துவிட்டு மாசிக்காயை அரைத்துத் தடவிவர விரைவிலேயே புண் ஆறும். இந்த காய் அல்லது அதனுடைய பொடி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

சீரற்ற மாதவிலக்கு – நெல்லிக்காயைப் பச்சையாக தினமும் 2 வீதம் சாப்பிட்டு வர மாதவிலக்கு சுழற்சி சீராகும்.

மாதவிலக்கு கால வயிற்றுவலி – முருங்கை இலைச்சாறை வெறும் வயிற்றில் குடித்து வர வலி குறையும்

உடல் நாற்றம் – ஆவாரம்பூ மற்றும் இலையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர உடல் துர்நாற்றம் நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.

திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகள்

கர்ப்பகால வாந்தி – நெல்லிக்காயை சாப்பிட வாந்தி குறையும்

பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் – வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து தினமும் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கும்.

பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு – சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.

தாய்ப்பால் பற்றாக்குறை – பேய் அத்திபழம் என்று கடைகளில் கிடைக்கும். அதை தினமும் சாப்பிட்டு வர தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.