Home சூடான செய்திகள் அந்த இடத்தில் அதை செய்வதற்கு முன்பு பெண்கள் இதனை செய்யுங்கள்!

அந்த இடத்தில் அதை செய்வதற்கு முன்பு பெண்கள் இதனை செய்யுங்கள்!

33

imagesஇன்பத்தைத் தரும் உடலுறவில் ஈடுபடும் முன் பெண்கள் ஒருசில செயல்களைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் உறவில் ஈடுபடும் போது குதூகலம் அடைய முடியும்.

தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்
உடலுறவின் மூலம் ஒருவர் அடையும் இன்பத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. அப்படிப்பட்ட இன்பத்தைத் தரும் உடலுறவில் ஈடுபடும் முன் பெண்கள் ஒருசில செயல்களைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் உறவில் ஈடுபடும் போது குதூகலம் அடைய முடியும்.

முத்தம் கொடுக்க துணை அருகில் வரும் போது வாய் துர்நாற்றத்துடன் இருந்தால், பின் அது மனநிலையை மாற்றி, உலை வைத்துவிடும். எனவே மறவாமல் உடலுறவில் ஈடுபடும் முன் பற்களைத் துலக்க வேண்டும்.

படுக்கையில் துணையுடன் கொஞ்சி விளையாட ஆரம்பிக்கும் முன், உங்கள் மீது வியர்வை நாற்றம் வீசினால், அது மனநிலையையே மாற்றிவிடும். இதனைத் தவிர்க்க நல்ல நறுமணம்மிக்க சோப்பைப் பயன்படுத்தி தேய்த்து குளிக்க வேண்டியது அவசியம்.

உடலுறவில் ஈடுபடும் போது சிறுநீர்ப்பை நிரம்பிய நிலையில் இருந்தால், பின் துணையுடன் கொஞ்சி விளையாட ஆரம்பிக்கும் போது, சிறுநீர் கழிக்கத் தோன்றி, அது இருவரது மனநிலையையும் கெடுத்துவிடும். எனவே தவறாமல் உடலுறவில் ஈடுபடும் முன் சிறுநீர் கழித்துவிடுங்கள்.

முக்கியமாக தோற்றத்தை மேன்மேலும் கவர்ச்சியாக வெளிக்காட்டும் வகையிலான உள்ளாடைகளை அணிய வேண்டியது அவசியம். வெளித்தோற்றம் கவர்ச்சியாக இருந்தால், அதுவே படுக்கையில் குதூகலத்துடன் இருக்க வழிவகை செய்யும்.

நல்ல நறுமணமிக்க இதமான பெர்ஃப்யூம்களைப் பயன்படுத்துங்கள். உங்கள் மீது நல்ல நறுமணம் வீசினாலே போதும், அதுவே தானாக மனநிலையை மேன்மேலும் அதிகரித்து, உறவில் சிறப்பாக செயல்பட உதவும்.

குறிப்பாக உடலுறவில் ஈடுபடும் முன் மொபைலை அணைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால், முக்கியமான தருணத்தில் தேவையில்லாத போன்கால்கள் வந்து, உங்களின் மனநிலையை சிதைத்துவிடும்.

பெண்கள் அன்றையதினம் வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டிருந்தால் அதை நினைத்துக்கொண்டு இருந்தால் படுக்கையில் அறையில் உங்கள் மனநிலையை மட்டுமல்ல உங்கள் துணையின் மனநிலையையும் கெடுத்து விடும். எனவே எந்த பிரச்சனையை பற்றியும் யோசிக்காதீங்க.

மேற்கூறிய விஷயங்கள் பெண்களுக்கு மட்டுமின்றி, இவற்றுள் சில ஆண்களுக்கும் பொருந்தும். எனவே உங்கள் பாலியல் வாழ்க்கை சிறப்பாக அமைய நினைத்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ளதை தவறாமல் பின்பற்றுங்கள்.