Home ஆண்கள் அந்தரங்க உறவில் அதிக நேரம் ஈடுபட என்ன செய்யவேண்டும்?

அந்தரங்க உறவில் அதிக நேரம் ஈடுபட என்ன செய்யவேண்டும்?

52

tamil_couple_ro17.jpg_480_480_0_64000_0_1_0-300x200-615x377உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு, அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமி்டங்களாவது ஆக வேண்டும் என்பதைப் பார்த்தோம். அதற்கு முன்னதாகவே, பெண்ணின் பிறப்புறுப்புக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது செக்ஸ் குறைபாடுதான். இந்தவகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது.
விந்து விரைவில் வெளிப்படுதலை, தம்பதியர் நினைத்தாலே ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல் அவசியமாகும்.
முதலில், தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக மது போன்ற போதைப் பொருள்களைப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆணுறுப்பில் தடவும் ஒரு சில மருந்துகள், உறுப்பில் இருக்கும் உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்துவிடும். ஆரம்ப நாள்களில் இதனால் பயன் இருக்குமே தவிர, தொடர்ந்து பயன்படுத்தும் போது பல்வேறு சிக்கல்கள் தோன்றலாம். அதனால் இது போன்ற குறுக்குவழிகளைக் கைவிட வேண்டும்.
செக்ஸ் என்பது நான்கு நிலை என்பதைப் பார்த்தோம். உணர்வடைதல், செயல்படுத்தல், விந்து வெளியேற்றம், ரிலாக்ஸ் எனப்படும் நான்கு நிலைகளில், விந்து வெளியேற்றம் எனப்படும் மூன்றாம் நிலை செயல்படும் முன்னொரு வகையில் சொல்வதென்றால்,ஆண்-பெண் இருவரது ஆசைகளும் தீரும் முன் செக்ஸ் செயல்பாடுகள் நின்றுவிடுவதாகும் அதனால், இறுதிச் செயல்பாடான ரிலாக்ஸ் எனப்படுவதை இரண்டாவதான செக்ஸ் செயல்பாடுகளிலும் புகுத்தும் போது உறுப்பு எழுச்சி நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.
மனத்தை மிகவும் ரிலாக்ஸ்டாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப்போனால், மனத்தை செக்ஸில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுத்தினால் கூட நல்லது. அதாவது, தியானம் செய்வதுபோல் அல்லது மலை ஏறுவது, கிரிக்கெட் மேட்ச் ரசிப்பது போல் ஏதாவது ஒரு நிகழ்வை மனத்தில் நினைத்துக் கொண்டு செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகுந்த பயன் அளிக்கும்.
அடுத்ததாக, செக்ஸ் செயல்பாடுகளை ஆவேசமாக, ஆக்ரோஷமாக செயல்படுத்தாமல் மிக இயல்பாகவும், அவசரமில்லாமலும் மெதுவாக இயங்க வேண்டும். உடலைவிட மனசே செக்ஸ் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆவேச உணர்வைக் குறைக்கும்போதே, மனம் லேசாகிவிடுகிறது. இருவரும் நிதானமாக செக்ஸ் செயல்பாடுகளைத் தொடரும் போது நேரத்தை வேண்டும் அளவுக்கு நீட்டிக்க முடியும்.
ஆண்கள் விந்து முந்துதலைத் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிகைகளில் இறங்க முடியும். அதாவது, சுயஇன்பம் காணும் செயல் இதற்கு நல்ல முறையில் பலன் அளிக்கிறது. சுய இன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல், நிறுத்தி இடைவெளிவிட்டு நேரத்தை நீட்டிக்க வேண்டும்.
சாதாரணமாகவே ஆண்கள் சுய இன்பம் காணும்போது, அவசர அவசரமாகவே செயல்படுவார்கள். யாராவது பார்த்துவபிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது மனத்தில் உள்ள ஆசை தீர்ந்துபோவதற்குள் ஆசையைத் தீர்த்துவிடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள். இதுவே கலவியின் போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது. அதனால் முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்கப் பழக வேண்டும். உறுப்பு எழுந்து நிற்பதில் தொடங்கி, அது விந்து கக்கி வீழ்வதுவரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்துச் செயல்பட வேண்டும்.
விந்து வெளியாகும் நேரத்தில், செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்துபார்பது அவசியம். என்றாவது ஒருநாள் கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்ச்சிப்பது பயன் தராது. தினமும் அல்லது தினமும் இருமுறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தைக் கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும் போதுதான் நல்ல பலன் தரும்.
முதலில், வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு, எண்ணெய் அல்லது ஜெல்லி போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுய இன்பத்தில் ஈடுபட்டு, செயல்படும் நேரரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி, நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாகக் கண்டுகொண்ட பிறகு, பெண்களுடன் உறவு மேற்கொள்ளும் போதும் இதைப் பயன்படுத்தலாம். இடைவெளி விட்டு செயல்படுதல், விந்து வெளிப்படுதலைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வசிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
உடல் முழுவதும் இன்பம் இருக்கிறது என்பதை, ஆணும் பெண்ணும் அறிந்துக்கொள்ள வேண்டும். அதாவது, ஆண் உறுப்பில் மட்டும்தான் இன்பம் இருக்கிறது என்று அதை மட்டுமே உபயோகிப்பதைப் பெண் குறைத்துக்கொண்டு, உடலின் மற்ற பாகங்கள் மீது கவனம் செலுத்துவதும் மிகுந்த பலன் அளிப்பதாக இருக்கக்கூடும்.
மூச்சை நன்றாக உள் இழுத்தல் மிக முக்கியமான எளிதான வழியாகக் கருதப்படுகிறது. மிகவும் ஆழமாக மூச்சை இழுத்துவிடுவது ஒரு நல்ல பயிற்சியாகும். ஏனெனில் இறுதி நிலையான ரிலாக்ஸிக்கு சமமாக மூச்சுப் பயிற்சியைப் பயன்படுத்த முடியும்.
வெறுமனே செயல்பாடுகளில் ஈடுபடுவதைவிட, பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதும் செக்ஸ் நேரத்தைக் கூடுதலாக்குகிறது. ஏதாவது விஷயங்களைப் பேசுவது, கத்துவதன் மூலம் உடல் டென்ஷனைக் குறைத்துப்கொள்வது என்று உடலை எவ்வளவு தூரம் எளிமையாக வைத்துக் கொள்கிறோமோ, அவ்வளவு தூரம் நேரத்தைத் தள்ளிப் போட முடியம்.
ஆண் மேலே பெண் கீழே என்ற நிலையில் உறவுக்கொள்வது எளிதாகவும் இன்பமாகவும் இருக்கலாம். ஆனால், இது ஆண்களுக்கு ஏற்ற நிலை என்று சொல்ல முடியாது. இந்த நிலையில் எளிதாக விந்து வெளியேற வாய்ப்பு உண்டு. அதனால், பெண்ணை இயங்கச்செய்வது அதிகப் பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும். எவ்வகையான செயலையும் ஆண்கள் மேற்கொள்ளாமல் பெண்களை மட்டுமே இயங்குபொருளாக வைத்துக்கொண்டால், கூடுதல் நேரம் விறைப்பும்தன்மையுடன் ஆண்கள் இருக்க முடியும்.
ஆண்கள் தங்கள் உறுப்புகளை மட்டுமே செக்ஸ் செயல் பாடுகளுக்குப் பயன்படுவதை பிடுத்து, கை, நாக்கு, கால் போன்ற உறுப்புகளையும் பயன்படுத்த வேண்டும். இதனால், ஆண் ஊறுப்புக்குக் கலவி நேரத்தில் ஓய்வ கிடைக்கும். இந்த ஓய்வின் காரணமாக நேரத்தை நீட்டிக்க முடியும்.
விந்து வெளிவருவதுபோல் இருக்கும் நேரத்தில் உடல் உறுப்புக்கள் அமைத்தையும் சேர்த்து இறுக்கி வைத்துக் கொள்வது நல்ல முறையில் பயன்தருவதாக இருக்கும். அதாவது ஆசனவாய், அடிவயிறு என அனைத்தையும் மூச்சைப் பிடித்துக்கொண்டு இழுத்து வைத்தால் விந்து வெளிவருமு: நேரத்தைத் தாமதப்படுத்த முடியும்.
ஆணுக்கு விந்து வரப்போவதை அறியும் பெண், முதுகு அல்லது பின்புறத்தில் பலமாகத் தட்டுவது, வேறுசெயலுக்கு மாற்றுவது, வளிக்கும்படி கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போது விந்து வெளியேற்றம் தாமதமாகிறது.
ஆணின் விதைக் கொட்டைகளை விந்து வெளியேற இருக்கும் முன் கீழ்நோக்கி இழுக்கும்பட்சத்தில் நல்ல பலன் அளிப்பதாக இருக்கும்.
விந்து வெளிவர இருக்கும்போது ஆணுறுப்பை பெண் உறுப்பில் இருந்து வெளியே எடுத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் உள்செலுத்தி செயல்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது ரிலாக்ஸ் செய்து இந்தச் செயலில் ஈடுபடும்போது நீண்ட நேரம் செலாற்ற முடியும்.
பெண் உறுப்புக்குள் முழுமையாக உள்செலுத்தாமல், முதல் இரண்டு அங்குலம் அளவுக்கு மட்டும் ஆண் உறுப்பைச் செலுத்தி செயல்புரிவது போதுமான காலதாமதத்தை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்கள். ஆண்-பெண் இருவருக்கும் உறுப்புகளில் முதல் இரண்டு அங்குலம் அளவுகளில்தான் இன்பம் தரும் நரம்புகள் இருக்கின்றன என்பதால் அந்த அளவு மட்டுமே செயல்புரிவது போதுமானதாகும். போதுமான நேரம் இன்பம் அனுபவித்த பிறகு வேண்டுமானால் முழுமையாக உள்செலுத்தி இன்பம் காணலாம்.
இவை அனைத்தையும் விட, தன்னால் செக்ஸில் சிறந்த முறையில் ஈடுபட இயலும் என்ற தன்னம்பிக்கை ஆணுக்கு ஏற்பட வேண்டும். இன்று கூடுதலாக கொஞ்சநேரம் விந்து வருவதைத் தவிர்க்க முடியும் என்று உறுதியுடன் செயலில் இறங்க வேண்டும். ஆணின் செயலுக்குப் பெண் ஒத்துழைக்க வேண்டியது மிகவும் அவசியம். எந்தக் காரணம் கொண்டும் விந்து முந்துதலைக் கேலி செய்வது அல்லது திருப்தியின்மையை வெளிப்படையாகக் காட்டி அவமானப்படுத்துவது கூடாது. இது எளிதில் சரி செய்து இன்பம் தரக்கூடிய சாதாரண பிரச்சனை என்பதை இருவருமே அறிந்திருக்க வேண்டும்.