Home சூடான செய்திகள் ‘அதுல’ ஜெயிக்கும் ஆணைத்தான் பெண்ணுக்கு பிடிக்குமாம்!

‘அதுல’ ஜெயிக்கும் ஆணைத்தான் பெண்ணுக்கு பிடிக்குமாம்!

19

21-sensual-parts-300பெண்ணைக் கவரும் அம்சங்கள் ஆணுக்கு இருக்க வேண்டும். அத்தகைய ஆண்கள்தான் எளிதில் பெண்களை எளிதில் ஜெயிக்க முடிகிறது. பண்டைய காலம் முதலே ஆண்களிடம் குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். அத்தகைய அம்சங்கள் உள்ள ஆண்களை மட்டுமே உறவிற்காக பெண்கள் தேர்தெடுக்கின்றனர். ஆணிடம் உள்ள எந்த அம்சங்கள் பெண்களுக்கு பிடிக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் படித்து பார்த்து உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்களேன்.

ஒளிபடைத்த கண்கள்

பாரதியார் பாடியது போல ஒளிபடைத்த கண்கள் இருக்க வேண்டுமாம். அத்தகைய காந்தக் கண்கள்தான் பெண்களை கவர்ந்து இழுக்கின்றன. “கண்ணாலே காதல் கவிதை சொன்னானே எனக்காக” என்று அந்த கண்களைப் பார்த்து பெண்கள் பாடுவார்கள். எதையும் தீர்க்கமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் உள்ள ஆண்களை பெண்கள் விரும்புகிறார்களாம்.

திரண்ட புஜங்கள்

உறுதியான, திரண்ட தோள்களை உடைய ஆண்களை பெண்களுக்குப் பிடிக்குமாம். அத்தகைய திடமான தோள்களை உடைய ஆண்களின் தோளில் ஊஞ்சலாடலாமா என்று கூட வெட்கத்துடன் கேட்பார்கள் பெண்கள்.

உறுதி கொண்ட நெஞ்சம்

நடிகர் கமலஹாசன் எண்பதுகளில் காதல் இளவரசனாக பெண்களின் மனதில் இடம் பிடிக்க காரணமே அவர் தான் நடிக்கும் திரைப்படத்தில் ஒரு சில சீன்களிலாவது சட்டையில்லாமல் நடித்து விடுவார். தன் அழகான நெஞ்சுப் பகுதியை கவர்ச்சியாக, காட்டுவதில் அப்படி ஒரு ஆர்வம் அவருக்கு. இப்பொழுது அந்த வேலையை சிக்ஸ் பேக் வைத்து சூர்யா, விஷால் போன்றவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்தி நடிகர்கள் சல்மான்கான், ஷாருக்கான் உள்ளிட்ட கான் நடிகர்களும், அவர்களுக்கு போட்டியாக ஹிருத்திக் ரோஷனும் இப்பொழுது சட்டையில்லாமல் நடிப்பது கூட பெண் ரசிகைகளை கவர்வதற்காகத்தான். அது போன்ற அழகான நெஞ்சினை உடைய ஆண்களை பெண்களுக்குப் பிடிக்குமாம். அதேசமயம் சுருள் சுருளாய் சின்னதாய் மார்பில் முடி முளைத்துள்ள ஆண்களையும் குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் ரசிக்கத்தான் செய்கின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.

செந்நிற நாக்கு

ஒருவரின் ஆரோக்கியத்தை நாக்கை நீட்டச்சொல்லி பார்த்து மருத்துவர் கண்டு பிடித்து விடுவார். அதேபோலத்தான் செந்நிற நாக்கினை உடைய ஆண்கள்தான் பெண்களுக்கு பிடிக்கிறதாம். ஏனெனில் தன்னை முத்தமிடவும், வருடவும் அந்த செந்நிற நாக்கினை உடைய ஆண்தான் சரியான சாய்ஸ் என்று நினைக்கின்றனர். அதேபோல் தாமரை மலர்போல் சிவந்த உள்ளங்கைகளும், உதடுகளும் உடைய ஆண்கள் என்றால் பெண்களுக்கு மிக விருப்பமாம்.

ஆளுமைத் திறன்

ஆண்களை அடிமைப்படுத்தத்தான் பெண்கள் நினைப்பார்கள் என்பதெல்லாம் சுத்த பொய். படுக்கை அறையில் தன்னை ஜெயிக்கும் ஆளுமைத்திறன் கொண்ட ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். உறவின் போது அளவில்லாத அன்புடன் மகிழ்விக்கும் ஆண்களைத்தான் பண்டைய காலம் தொட்டே பெண்கள் விரும்புகின்றனர். அத்தகைய ஆண்களின் மரபணுக்களை பரப்பவேண்டும் என்றுதான் ஒரு பெண் விரும்புவாள் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் சுத்தமான, அழகான உடலமைப்பு கொண்ட ஆண்களும் அதிக அளவில் பெண்களை கவர்கின்றனர்.