சாதம் – 250 கிராம்,
ஆப்பிள், மாதுளம் பழம் – தலா ஒன்று,
திராட்சைப் பழம் – 100 கிராம்,
கேரட் துருவல் – ஒரு கப்,
புளிக்காத தயிர் – 2 கப்,
உப்பு – சிறிதளவு.
செய்முறை :
* திராட்சை, ஆப்பிளையும் பொடியாக நறுக்கவும்.
* மாதுளையை முத்துகளாக உதிர்த்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சாதத்தை போட்டு நன்றாக மசிக்கவும். பின்னர் அதனுடன் உப்பு, தயிர் சேர்த்து நறுக்கிய பழங்களையும், கேரட் துருவலையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
* இப்போது கலர்புல் ஃப்ரூட் தயிர் சாதம் ரெடி!
குறிப்பு: தயிர்சாதம் சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். புளிக்காத தயிரை தான் இந்த சாதத்திற்கு பயன்படுத்த வேண்டும்.