இந்தக் கொடுமையை எங்கு போய்ச் சொல்வது…? காதல் என்பது எவ்வளவு புனிதமோ அந்த அளவில் காதலர்களும் காதலுக்கு புனிதமாக நடந்து கொள்ளவேண்டும்..!ஆனால் ஒரு காதலன் செய்த துரோகத்தால் அந்த பால் மனது நடிகை ரொம்பவே மனம் வாடிப் போய் இருக்கிறார்..!அந்த பால் முக நடிகை சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு மகளாக நடித்துள்ளார். நல்ல படங்களின் கதாநாயகியும் கூட..!
தமிழ்படங்கள் சரியாக அமையாத காரணத்தால்..தெலுங்கு, கன்னடம் என்று கொஞ்சம் பிசியாகவே இருக்கிறார் பால் முக நடிகை…!இவருக்கு ஒரே ஒரு காதலன் மட்டுமே. இவர் இரண்டு படங்களை இயக்கி அது சரியாகப் போகாததால் நடிகையின் காதலனாக வேலை பார்த்து வருகிறார்.நடிகை தான் சூட்டிங் போகும் இசங்களுக்கு தனக்கு துணையாக அந்த காதலரையும் அழைத்துப் போவார்.ஆந்திராவில் படப்பிடிப்பு, ராஜா முந்திரியில்பெரிய ஸ்டார்ஹோட்டலில் இருவரும் தங்கினார்கள்.
அடுத்த நாள் சூட்டிங். அன்று காலை காதலர் குட்டி போட்ட பூனை போல அறைக்குள் நடந்துள்ளார்.அடிகடி பாத் ரூம் பக்கம் போய் வந்துள்ளார்…! நடிகை தூங்குகிறார் என்று நினைத்து விட்டார்..! ஆனால் நடிகை விழித்துக் கொண்டுதான் இருந்தார்.காதலன் செய்கைகள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கவே ..தூங்குவது போல பாவ்லா காட்டி படுத்திருந்தார்..! பின்பு எழுந்து குளித்து ரெடியாகி சூட்டிங் கிளம்பலாம் என்று பாத் ரூம் போனார் பால் முக நடிகை.உள்ளே காதலரின் சட்டை மற்றும் பேன்ட் தொங்கியது..! நடிகைக்கு புரியவில்லை..! துவைத்து அயர்ன் பண்ணிய சர்ட் ஏன் உள்ளே தொங்குகிறது…?
எடுத்தார்..சடைப் பையில் கனமான பேனா..! அந்தப் பேனாவில் கேமரா..! ஆடிப் போனார் நடிகை.ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு முறை தான் குளிக்கும் படம் நெட்டில் வந்து மானத்தை வாங்கியது..!அது அரைகுறை படம்..! இப்போது தெளிவாக எடுக்க திட்டமிட்டுள்ளான் காதலன்…! வெறியோடு வெளியே வந்தார் நடிகை…அடித்து விரட்டினார்…ஹோட்டல் ஹாலுக்கு ஓடினான் காதலன்.. விரட்டி..விரட்டி.அடித்தாள்..! கூட்டம் கூடியது..! “ஏண்டா நாயே ரெண்டு வருஷம் கூடவே வச்சு சோறு போட்டேனே.. எனக்கே துரோகம் பண்றியாடா..”என்று வெறி பிடித்தவர் போல கத்தினார்..!..அப்படியே உட்கார்ந்து அழத்துவங்கினார் நடிகை..!
போலீஸ் வந்து விட்டது…! காதலன் மீது புகார் கொடுத்தார்…! இப்போது அந்த நன்றி கெட்ட காதலன் கம்பி எண்ணுகிறான்..!
பாவம் நடிகை..!