Home உறவு-காதல் ஹலோ பாய்ஸ்! பொண்ணுங்க கிட்ட இந்த கேள்விய மட்டும் கேட்றாதீங்க…

ஹலோ பாய்ஸ்! பொண்ணுங்க கிட்ட இந்த கேள்விய மட்டும் கேட்றாதீங்க…

35

திருமணத்திற்கு பின்னர் அறிந்து கொண்டு மனம் கோணாமல் இருவரும் நடந்து கொள்ளலாம்.

ஆனால் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும்போது நீங்கள் கேட்டுக்கொள்ளும் கேள்விகள் சரியானதாக இருத்தல் வேண்டும்.

நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய கேள்வி இதுதான். நீ யாரையாவது இதற்கு முன்னர் காதலித்திருக்கிறாயா? இந்த கேள்வியை நீங்களாக முன்வந்து கேட்கக்கூடாது.

அப்படி கேட்கும்போது, ஆம் என்ற பதிலை உங்கள் மனைவி கூறிவிட்டால், அதனை தாங்கிகொள்ளும் மனோபக்குவம் உங்களிடம் இருக்க வேண்டும்.

அப்படி திருமணத்திற்கு முன்னர் உங்கள் மனைவி வேறு ஒருவரை காதலித்திருந்தால், அதனைப்பற்றி அறிந்திருந்தாலும், அதை மறந்துவிட்டு அவளுடன் சந்தோஷமாக வாழும் நிலைக்கு வரவேண்டும்.

ஆனால், இன்றைய காலத்தில் நூற்றில் 99 சதவீத ஆண்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

பல ஆண்கள் இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, தங்கள் நிம்மதியை தொலைத்து விடுவார்கள்.

உங்கள் மனைவி, தாமாக முன்வந்து தனது முந்தைய காதல் கதை பற்றி சொன்னால், அதனை பற்றி அதிகளவு சிந்தித்து மூளைக்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்.

இதனால் உங்கள் மணவாழ்க்கை பாதிக்கப்படும். கடந்த காலம் என்பது கடந்த காலமாகவே இருக்கட்டும்.

எதிர்காலத்தை பற்றி சிந்தித்து வாழ்க்கையில் வெற்றி நடைபோடுங்கள்.