Home பெண்கள் அழகு குறிப்பு ஷேவிங் செய்தபிறகான பராமரிப்பு

ஷேவிங் செய்தபிறகான பராமரிப்பு

53

பெரும்பாலான ஆண்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை அகற்றி மென்மையான சருமத் தோற்றத்தைப் பெற அடிக்கடி ஷேவிங் செய்வார்கள். ஷேவிங் செய்வது முக சருமத்தில் உள்ள இறந்த செல்களின் அடுக்கை அகற்றவும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. இருப்பினும், ரேசர் பிளேடுகள் முகத்தின் சருமத்தில் தேய்ப்பதால் எரிச்சல் உண்டாகலாம். ஷேவிங் செய்த பிறகு நமது சருமம் எளிதில் பாதிப்படையும் வாய்ப்பு அதிகம்,

ஆஃப்டர் ஷேவ் என்பது என்ன? (What is an aftershave?)

ஆஃப்டர் ஷேவ் என்பது ஷேவிங் செய்த பிறகு சருமம் மென்மையாக்கவும் சருமத்தைப் பாதுகாக்கவும் முகத்தில் தேய்க்கப்படும் திரவம், லோஷன் அல்லது ஜெல் ஆகும்.

முகத்தில் ஷேவிங் செய்யும்போது சிறு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு அதனால் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க இவை பயன்படுகின்றன. அவை இந்தப் பலன்களைக் கொடுக்க இயல்புநீக்கப்பட்ட ஆல்கஹால் அல்லது இயற்கையான ஆன்டிசெப்டிக் பண்புள்ள மூலப்பொருள்கள் காரணமாக உள்ளன. இவை சருமத்தின் நுண்துளைகளை மூடுவதன்மூலம் திசுக்களை சுருங்கச் செய்யும் பொருள்களாகச் செயல்பட்டு எரிச்சலைத் தடுக்கின்றன.

இப்போது கிடைக்கும் ஆஃப்டர் ஷேவ் தயாரிப்புகளில் நோய்த்தொற்று நீக்கம் மட்டுமின்றி இன்னும் பல்வேறு நன்மைகளை அளிக்கும் பொருள்களும் உள்ளன.

இவற்றில் ஷேவிங் செய்த பிறகு சருமத்திற்கு ஈரப்பதமூட்டி மென்மையாக்கும் கண்டிஷனிங் செய்யும் பொருள்களும் இருக்கலாம். மாய்ஸ்டுரைஸர் ஈரப்பதத்தை சருமத்தில் தக்கவைத்து ஷேவிங் செய்த சருமத்தைப் பாதுகாக்கிறது. இவை, சுற்றுச்சூழலில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி சருமத்திற்கு அளிக்கின்ற குளிர்ச்சியூட்டும் பொருள்களாக (உதாரணமாக கிளிசரின் மற்றும் ஆல்ஃபா-ஹைட்ராக்சி அமிலம்) இருக்கலாம் சருமத்திளிருந்து ஈரப்பதம் வெளியேறுவதைத் தடுக்கும் லிப்பிடுகள் (லனோலின் போன்ற எண்ணெய்ப் பொருள்கள்) போன்றவையாக இருக்கலாம்.

வைட்டமின் A, C மற்றும் E போன்றவற்றைக் கொண்டுள்ள ஆன்டிஆக்சிடண்ட்டுகள் இருக்கலாம். அவை சுற்றுச்சூழலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன.

புரதங்களும் இனிப்பு பாதாம் அல்லது சப்பாத்திக்கள்ளி போன்றவற்றின் சாரங்களும் (இவை சருமத்திற்கு இதமாளித்து உராய்வு எரிச்சலைத் தீர்க்க உதவும்) இருக்கலாம்.

பெரும்பாலானவற்றில் நறுமணமளிக்கும் பொருள்கள் இருக்கும். பொதுவாக ஆஃப்டர் ஷேவ் வாங்கும்போது அதன் நறுமணத்தை வைத்தே பலரும் தேர்வு செய்கின்றனர். பல ஃபேஷன் பிராண்டுகளில் அவற்றின் பிரத்யேக நறுமணத்திற்காக அதிக விலையில் ஆஃப்டர் ஷேவ் தயாரிப்புகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இவற்றைப் பயன்படுத்துவதால் என்ன நன்மை? (What are the advantages of using an aftershave?)

சருமத்தின் மேலடுக்கான எப்பிடெர்மிசானது பாதுகாப்புக்கும் ஈரப்பதத்தைப் பராமரிப்பதற்கும் கெடுதல் ஏற்படுத்தும் எரிச்சலூட்டும் பொருள்கள் மற்றும் வேதிப்பொருள்கள் நுழைவதைத் தடுக்கவும் அதனை அடுத்துள்ள ஸ்ட்ரேட்டம் காரணியம் எனும் அடுக்கையும் அதன் லிப்பிடு அடுக்கையும் சார்ந்துள்ளது.

ஷேவிங் செய்யும்போது இந்த லிப்பிடு அடுக்கு பாதிக்கப்படுகிறது, சருமத்தின் உள் அடுக்குகளில் இருந்து நீர் வெளியேறி சருமத்தின் நீர்ச்சத்து இழக்கப்படுகிறது, இதன் காரணமாக எரிச்சல் ஏற்படுத்தும் பொருள்கள் மற்றும் சுற்றுச்சூழலில் இருந்து வரும் வேதிப்பொருள்கள் போன்றவற்றால் எரிச்சல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. சருமம் அழற்சியடைந்தால், அது எளிதில் பாதிக்கப்படுவதாகவும் எரிச்சல் அடைவதாகவும் மாறிவிடும்.

ஆஃப்டர் ஷேவ் பல வழிகளில் பலன் கொடுக்கிறது, அவற்றில் சில:

சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது (ஆன்டிசெப்டிக்)
ஷேவிங் செய்யும்போது இழக்கப்படும் நீர்ச்சத்தை ஈடுசெய்கிறது
சருமத்தின் எரிச்சலுக்கு ஆறுதலளிக்கிறது
வெளிப்புறமிருந்து வந்து பாதிப்பை ஏற்படுத்தும் எரிச்சலூட்டும் பொருள்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க ஒரு பாதுகாப்பு அடுக்கை ஏற்படுத்துகிறது.
நறுமணத்தை வழங்குகிறது
நல்ல ஆஃப்டர் ஷேவ், நீங்கள் ஷேவிங் செய்யும்போது இழக்கப்படும் நீர்ச்சத்தை மீட்டு நிரப்புகிறது. எரிச்சலை ஏற்படுத்தும் பொருள்களால் ஏற்படும் எரிச்சலில் இருந்து பாதுகாக்கும் ஓர் அடுக்கை ஏற்படுத்துகிறது.

ஒரு நல்ல ஆஃப்டர் ஷேவைத் தேர்ந்த்தெடுக்க கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் (Things to note while selecting a good aftershave):

ஆஃப்டர் ஷேவில் என்னென்ன பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று பார்க்கவும்:

ஆன்டிசெப்டிக் பண்புக்காக இயல்புநீக்கப்பட்ட ஆல்கஹால் சேர்க்கப்படாததாக இருக்க வேண்டும். ஏனெனில் அவை சருமத்தை அதிக வறட்சியாக்கலாம்.
குளிர்ச்சிப்படுத்தும் பொருளும் சருமத்திற்கு நீர்ச்சத்தை அளிக்கும் கிளிசரின் அல்லது சோடியம் ஹையாலூரோனேட் போன்றவை உள்ளதா என்று பார்க்கவும்.
தோலுக்கு ஆறுதலளிக்கும் பொருள்கள் உள்ளதா என்று பார்க்கவும், அவை சருமத்தின் ஈரப்பதத்தை மீட்டு தக்கவைக்கும், சுக்ரோஸ், காபின் போன்ற ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் பொருள்களை மீண்டும் உருவாக்கும்.
சிலவற்றில் வளர்ச்சிக் காரணிகள் மற்றும் வைட்டமின் C முதுமையை எதிர்க்கும் பொருள்களும் இருக்கும். இவை சருமம் சேதமடைவதைத் தடுக்கவும் உதவும்.
நல்ல ஆஃப்டர் ஷேவில் சருமத்தின் இயல்பை மீட்டமைக்கும் பொருள்களும் இருக்கும் (உதாரணமாக முறுமுறு பட்டர்)
உங்கள் ஆஃப்டர் ஷேவில் உள்ள பொருள்கள், ஷேவிங் செய்த பிறகு சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை வெகுவாகக் குறைக்கும்.

உங்கள் சருமத்தின் வகை எத்தகையது என்பதைப் பொறுத்து ஆஃப்டர் ஷேவ் தயாரிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், மாய்ஸ்சுரைஸரைக் கொண்டுள்ள ஷேவ் லோஷன் அல்லது பாம் உங்களுக்கு நல்லது. எண்ணெய்ப்பசை கொண்ட சருமமாக இருந்தால் எரிச்சல் கொண்ட கரைசலைக் கொண்டுள்ள ஆஃப்டர் ஷேவ் சிறந்தது. நீங்கள் இரண்டு வகையில் சேரும் சருமம் கொண்டவர் எனில், அதற்கென்று கிடைக்கும் ஆஃப்டர் ஷேவ் தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம்.

சிலருக்கு அதிக உணர்திறன் கொண்ட சருமம் இருக்கும், அவர்களுக்கு ஷேவிங் செய்தால் அல்லது சருமப் பராமரிப்புத் தயாரிப்புகளைப் பயன்படுத்தினால் எரிச்சல் ஏற்படலாம் அல்லது தோல் தடிப்புகள் ஏற்படலாம். அதுபோன்ற நபர்கள் அதிக உணர்திறன் கொண்ட சருமத்திற்கு எனப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

சிலருக்கு சருமம் மிகவும் அதிக உணர்திறன் கொண்டிருக்கும், அவர்களுக்கு ஆஃப்டர் ஷேவ் பயன்படுத்தினால் தோல் தடிப்புகள் அல்லது எரிச்சல் ஏற்படலாம். அவர்கள் ஷேவிங் செய்யும் இடைவெளியை அதிகரித்துக்கொள்ளலாம், அதாவது அடிக்கடி செய்யாமல் ஒரு சிலநாட்கள் கழித்து ஷேவிங் செய்துகொள்ளலாம். அல்லது அதிக மூலப்பொருள்களைக் கொண்டில்லாத ஆஃப்டர் ஷேவைப் பயன்படுத்தலாம். சிலருக்கு ஆஃப்டர் ஷேவில் உள்ள குறிப்பிட்ட சில பொருட்களுக்கு (உதாரணமாக ஹேசல்) ஒவ்வாமை ஏற்படலாம், அவர்கள் அந்தப் பொருள்களைக் கொண்டுள்ள தயாரிப்புகளைத் தவிர்க்க வேண்டும். ஷேவ் செய்த சருமத்தை மிருதுவாக்கவும் ஈரப்பதத்தையும் மீட்டளிக்கும் கூலிங் ஜெல் கிரீம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.