ஆல்கஹால் ஆரோக்கியமானதே, அதிலும் அதனை அளவாக எடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அளவுக்கு அதிகமானால் தான் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் படியான பிரச்சனையை சந்திக்கக்கூடும்.
ஒயினின் மற்றொரு வகையான, வெள்ளை நிற ஒயினை அளவாக குடித்து வந்தாலும் ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
வெள்ளை நிற ஒயினில் கலோரிகள் அதிக அளவில் இருப்பதால், இதனை தொடர்ச்சியாக குடித்து வந்தால், உடல் பருமன் அதிகரிக்கும்.
அதிலும் ஒரு பெரிய டம்ளர் வெள்ளை ஒயினில் 300-380 கலோரிகள் நிறைந்துள்ளது. ஆகவே நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால், வெள்ளை ஒயினை தவிர்க்க வேண்டும்.
ஒரு கட்டத்தில் இந்த வெள்ளை நிற ஒயினுக்கு அடிமையான பின்னர், தினமும் அதனை குடிக்காமல் விட்டால், தலை பாரம், கை நடுக்கம் போன்றவை ஏற்பட ஆரம்பிக்கும்.
ஆகவே இதனை சாதாரணமாக குடிக்காமல், என்றாவது ஒருநாள் நடக்கும் பார்ட்டியில் சிறிது குடிக்கலாம்.
வெள்ளை ஒயின் சற்று அதிகமானால், அது உயர் இரத்த அழுத்தம், கணைய அழற்சி, கல்லீரல் இழைநார் வளர்ச்சி, பக்கவாதம் மற்றும் பலவகையான புற்றுநோய்கள் தாக்கும் வாய்ப்புள்ளது.
மேலும், மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. முக்கியமாக கர்ப்பமாக முயற்சிக்கும் போது, பெண்கள் வெள்ளை ஒயினைத் தவிர்க்க வேண்டும்.
ஆண்கள், வெள்ளை ஒயினை அதிகம் பருகினால் பாலுணர்ச்சி பாதிக்கப்படும்.
சமீபத்திய ஆய்வு ஒன்றில், வெள்ளை ஒயின் பெண்களுக்கு மன இறுக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது.