பெண்களுக்கு நோய்த்தொற்று, ஹார்மோன் குறைபாடு காரணமாக பெரிய தொல்லையைத் தரக்கூடிய மாதவிலக்கு கோளாறுகள், வெள்ளைப்படுதல் பிரச்னைகளுக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள் உள்ளன.
மாதவிலக்கு சமயங்களில் வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சைப் பழச்சாற்றைத் தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்று வலி நின்றுவிடும்.
உள்ளி, மிளகு, பேரீச்சம் பழம், மாவிலங்கப் பட்டை மூன்றையும் சம அளவு எடுத்து பசும்பால் சேர்த்து அரைத்து பாக்கு அளவு உருண்டையை ஒருவாரத்துக்குச் சாப்பிட்டால் மாதவிலக்கு சீராகும்.
சந்தனக்கட்டையை பன்னீர் சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து 100 மி.லி. பன்னீரில் கலந்து அதில் குல்கந்து சேர்த்து மூன்று சொட்டு சந்தன அத்தரையும் சேர்த்துக் கலக்கி ஒருவாரத்துக்குக் காலை மாலை இருவேளையும் சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்னை தீரும்.
புதினா இலைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஒழுங்கற்ற மாதவிலக்கு சீராகும்.
மாதவிலக்கு வருவதற்கு ஒருவாரத்துக்கு முன்பிருந்தே தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டால் மாதவிலக்கு தள்ளிப் போகும்.
குன்றிமணி இலையுடன் சம அளவு எள் மற்றும் வெல்லம் சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவுக்குச் சாப்பிட்டால் நீண்ட நாள் வயதுக்கு பெண் உடனே பருவம் அடைவாள்.
மாதவிலக்கின்போது ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் பச்சை வாழைக்காயைத் தோல்நீக்கி சிறுசிறு துண்டுகளாகக் கொடுத்தால் அதிக ரத்தப்போக்கு நின்று போகும்.
அதிக வயது ஆகியும் இன்னும் பூப்பெய்தாமல் இருக்கும் பெண்ணுக்கு செம்பருத்திப் பூவை நெய்யில் வறுத்துக் கொடுத்தால் விரைவில் பருவம் அடைவாள்.
செம்பருத்திப் பூ மொட்டுகளின் சாறு எடுத்து தினமும் காலை மாலை இருவேளையும் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்னை தீரும்.