Home இரகசியகேள்வி-பதில் வெறும் உடலுறவு மட்டுமே இந்த தேகத்தின் நோக்கமில்லை!”

வெறும் உடலுறவு மட்டுமே இந்த தேகத்தின் நோக்கமில்லை!”

74

என்னுடைய 14வது வயது முதல் செக்ஸ் புத்தகம் படிப்பவள். என க்கு இப்போது வயது 28. “செக்ஸ்’ புத்தகம் படிப்பதன் விளைவோ என்னவோ, அடுத்த வீட்டு பெண்ணுடன் நெருங்கிய நட்பு வைத்துக் கொண்டேன். அவள் விருப்பத்துடன் உடல் தொடர்பும் வைத்துக் கொண்டேன்.
எனக்கு மூடு வரும் போது அவள் தராத காரணத்தாலும், என் மீது அன்பு காட்டாததாலும், நான் வேறு இரு பெண்களுடன், அவர்கள் விருப்பத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டேன்.
மொத்தம் ஐந்து பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டேன். இதி லிருந்து உங்களுக்கு புரியும் நான் எந்த அளவுக்கு, “அந்த’ உணர்ச்சி க்கு ஆளானவள் என்று.
என் தோழி, திருமணம் ஆகி, டில்லி சென்று விட்டாள். திருமணத்தி ற்கு முன் தினம் கூட உறவு வைத்துக் கொண்டோம். அவள் சென்ற பிறகு ஏனோ யாருடனும் நட்பு வைத்துக்கொள்ள தோன்றவில்லை.
சமீபத்தில் எனக்கு திருமணமாகியது. நான் இதுவரை எந்த ஆணை யும் நேசிக்கவில்லை; நேசிக்கவும் விரும்பவில்லை. தவறு நடந்து விடுமோ என்ற பயமே காரணம். நான், இரண்டு சகோதரி, ஒரு தம் பியுடன் பிறந்தவள்.
நான் விரும்பியது போல் என் கண வர் அமையவில்லை. செக்ஸில் அதிக நாட்டம் இல்லாதவர். திரும ணமான முதல் இரவு அன்று, “ஒரு வருடத்திற்கு பிறகு குழந்தை பெற் றுக் கொள்ளலாம். ஆனா ல், உறவு மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்…’ என்றேன். நல்ல சுபா வம்; என் மீது அன்பாக இருக்கிறார்.
சில நாட்களுக்கு பிறகுதான் புரிந்தது, அவர் என்னோடு சந்தோஷ மாக இருக்க முடியாது; உறவு கொள்ள முடியாது என்பது. என் மாமானாரிடம் மொபைல் போனில் பேசி, வரவழைத்தேன். மருத்து வ மனையில் பரிசோதனை செய்தோம். என் கணவருக்கு மருந்து, மாத்திரை கொடுத்தனர். அதையும் சாப்பிட்டார் என் கணவர். ஆனா லும், அவருக்கு என்னுடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. என் கணவரை வெறுக்க ஆரம்பித்தேன்.
என் வீட்டின் மாடியில் குடியிருக்கும் ஒரு அக்காவின் கணவர் மரி யாதை உள்ளவர். எங்களிடம் அன்பு உள்ளவர். என் கணவரின் வரு மானம் குறைவு. எங்களுக்கு தேவை உள்ள போதெல்லாம் உதவி புரிபவர். எனக்கு அவரிடம் மரியாதையே தவிர, ஆசை தோன்றவி ல்லை.
ஆனால், என் நிலையை அறிந்த அந்த அக்காவின் தங்கை கணவர் என்னை விரும்புவதாகச் சொல்லி, என்னைத் தொட முயற்சி செய்தார். என் கவலை யை மறக்க வேலைக்குச் சென்றேன். மொபைல் போனில் கூப்பிட்டு, வற்புறு த்த ஆரம்பித்தார். இதை நான் கணவரி டம் கூறி, வேலைக்குச் செல்வதை நிறு த்திவிட்டேன்.
நான், என் சகோதரியிடம் கூறி, இவரை பிரிய நினைத்தேன். ஆனா ல், தாலி கட்டிய புருஷன் என, “சென்டிமென்ட்’ பேசி, என்னை தடு த்து விட்டார். அவருக்கு மருத்துவசெலவு பார்க்கும் நிலையில் நாங்கள் இல்லை. என் பெற்றோரோ, “பிரிந்து வந்துவிடு. அஸ்தி வாரம் இல்லாத வாழ்க்கை வேண்டாம்…’ என்று கூறுகின்றனர்.
என் மூத்த சகோதரியின் குழந்தையை தத்து எடுத்து வளர்த்துக் கொள் என்கின்றனர். என் கணவரோ, “என்னை பிரிந்து போய் விடா தே… கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகி விடும்…’ என்கிறார்.
என் வீட்டிற்கு சென்று பெற்றோரை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. நான் இங்கு இருக்கவும் முடியாமல், என் வீட்டிற்கும் செல்ல முடி யாமல் உள்ளேன். என் கணவர் காலை 8:00 மணிக்கு வெளியே சென்றால், இரவு 10:00 மணிக்குதான் திரும்புவார்.
இந்த நிலைமையில் மாடியில் குடியிருப்பவர் அடிக்கடி வருகிறார். அவரைப் பார்க்க நேரி ட்டால் என்ன காரணமோ என்னையே கட்டு ப்படுத்த முடியாத அளவுக்கு கோபம் வருகிற து. அன்று முழுவதும் கோபமாகவே இருப்பே ன். இப்போது பொருட்களை எங்கு எங்கு வை த்துள்ளேன் என்ற ஞாபக மறதியும் ஏற்பட்டு உள்ளது.
வாழவும் பிடிக்காமல், சாகவும் பிடிக்காமல் இருக்கிறேன். சந்தோஷம் என்பதே இல்லா மல் பைத்தியம் பிடிக்கும் நிலை வந்து விடு மோ என பயமாக உள்ளது. பல நேரங்களில் என்னையே மறந்து தூங்கி விடுகிறேன்.
எனக்கு ஒரு வழி கூறுங்கள் சகோதரி.
அன்பு சகோதரி—
உன் கடிதம் படித்தேன். உம்… உனக்கு நான் என்ன எழுதுவது?
சின்ன வயசில் செய்த தவறுகளை மறந்து, ஒதுக்கி விடு. சகோதரி, நமது உடம்பு இருக்கிறதே, அது மிக மிக அற்புதமான படைப்பு. வெ றும் உடலுறவு மட்டுமே இந்த தேகத்தின் நோக்கமில்லை. சிறு வய தில் இயற்கையின் தூண்டுதலால் கண்ட புத்தகங்களை படித்திரு க்கலாம்.
இளமையில் மனசு தகாத, பொருந்தாத இனச் சேர்க்கையில் ஈடு பட்டிருக்கலாம். மனம் அடங்காத குதிரை… அதை அடக்கி ஓட்டுவதில்தான் நம் சாமர்த்தியம் இருக்கி றது. “சிறு வயதிலிருந்தே எனக்கு, செக்ஸ் உணர்வு அதிகம்’ என்று எழுதியிருக்கிறா ய்…
உன்னைப் பற்றி நீயே ஒரு தவறான அபிப் ராயம் கொண்டிருக்கிறாய் என எண்ணத் தோன்றுகிறது.
“நான் அப்படித்தான்’ என்று நீயே உனக்குள் ஒரு சாக்கடையை சிரு ஷ்டித்து, அதிலேயே நீந்தி சுகம் காண்பதாக நினைத்துக் கொண்டி ருக்கிறாய். உன்னைப்போல வருடக் கணக்கில் பெண்களுடனேயே உறவு வைத்துக் கொண்டவர்களுக்கு, முறையான தாம்பத்யமே பிடிக்காமல் போய்விடும். கணவர் என்ன இங்கிதமாக பழகினாலு ம் பிடிக்காது.
இப்போது அளவுக்கு மீறிய போக நினைப்பால் உன் மூளை மிகவும் களைப்படைந்திருக்கிறது. இந்த சமயத்தில் அனாவசிய எரிச்சலும், அயர்ச்சியும், மறதியும் ஏற்படுவது இயற்கைதான். உன் புலன்களை வழிப்படுத்த யோகா செய்… மனசை ஒருநிலைப்படுத்த தியானம் செய்.
முறையான தியானப் பயிற்சியும், யோகாசன மும் நிச்சயம் மனதை அமைதிப்படுத்தும். இதுவரையில் இழந்த சக்தியை மீட்டுத் தரும். உன் கணவரையும் உன்னுடன் பயிற்சி க்கு அழைத்துப்போ. அவர் காலையில் போ னால், இரவு, 10:00 மணிக்குத்தான் வருகிறார் என்கி றாயே… உன்னிடமிருந்து தப்பிக்க அவருக் கும் வேறு வழி தெரிய வில்லை என்றே நினைக்கிறேன்.
வேறு ஆண்கள் உன்னிடம் தவறாக நடந்து கொள்ள ஏன் முயற்சிக்கின்றனர் எனயோசி. உன் பலவீனம் தெரிய வந்ததால் தான்!
கணவருடன் வேறு இடத்திற்கு குடித்தனம் போ. உலகத்தில் செக்ஸ் தவிர, அற்புதமான பல விஷயங்கள் இருக்கிறது சகோதரி.
சின்னதாய் வீடு. சுற்றிலும், “பளிச்’ சென்று தோட்டம். அதில் உன் கையால் நட்டு, நீர் வார்த்து வளர்ந்த ரோஜாவும், மல்லிகையும், உன் காலைச் சுற்றி உன் பின்னாலேயே தாவிக்குதித்து ஓடி வரும் நாய்குட்டிகள், மிருதுவான இசை, ஊதுவத்தி வாசனை, குழந்தைக ளின் விளையாட்டு, நல்ல கருத்துள்ள புத்தகங்கள், வாசலில் புள்ளி க்கோலம், உள்ளே உன் கணவருக்காக நீ செய்யும் சமையல், இத் தனையோடு முறையோடு கூடிய அன்புப் பரிமாறல்தான் செக்ஸ்.
ஒரு பட்டின் மிருதுத்தன்மையுடன், சலசலத்தோடும் நீரோடைப்போ ல புனிதமான ஒன்று அது. நீ இந்தப் பாதையில் போய் பார்; இதன் சுகம் உன் ஆயுசுக்கும் இருக்கும்!