Home சமையல் குறிப்புகள் வெங்காய பக்கோடா செய்வது எப்படி

வெங்காய பக்கோடா செய்வது எப்படி

36

Captureதேவையான பொருட்கள் :

கடலை மாவு – 2௦௦ கிராம்
வெங்காயம் – 25௦ கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 5
நெய் – 5௦ கிராம்
சோம்பு – 1௦ கிராம்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை மெல்லிய அகன்ற துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* நெய்யை உருக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, உருக்கிய நெய், உப்பு ஆகியவற்றை கடலை மாவுடன் நீர் தெளித்து கையால் நன்றாக கலக்கவும். மாவு உதிரியாக இருக்க வேண்டும். தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது.

* ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காய கலவையை உதிரி உதிரியாக போடவும்.

* பொன்நிறமாக சிவந்து வரும் வரை வறுக்கவும். சூடாக பரிமாறவும்.

* சுவையான வெங்காய பக்கோடா ரெடி.