Home சமையல் குறிப்புகள் வெங்காய காரச்சட்னி

வெங்காய காரச்சட்னி

19

4-350x250தேவையான பொருள்கள் :

பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
மிளகாய் வத்தல் – 4
கொத்தமல்லித்தழை – சிறிது
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.

* அடுப்பில் கடாயை வைத்து 1 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தலை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.

* அதே கடாயில் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.

* வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி சிறிது நேரம் ஆற விடவும்.

* ஆறிய பிறகு அதனுடன் வறுத்த மிளகாய் வத்தல், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

* சுவையான வெங்காய காரச்சட்னி ரெடி.

* இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

* விருப்பப்பட்டால் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளலாம்.