Home பெண்கள் அழகு குறிப்பு வீட்டிலேயே கண்ணிமை அடர்த்தி பெற சுலபமாக மஸ்காரா தயாரிப்பது எப்படி?

வீட்டிலேயே கண்ணிமை அடர்த்தி பெற சுலபமாக மஸ்காரா தயாரிப்பது எப்படி?

31

மஸ்காரா உங்கள் கண்களை அழகுபடுத்த தேவைப்படும் முக்கியமான பியூட்டி பொருளாகும். இது தான் உங்கள் கண்களை முகத்திலிருந்து தனியாக அழகாக காட்ட உதவுகிறது.

பொதுவாக எல்லா பெண்களும் மஸ்காரா பயன்படுத்தக் காரணம் கண்கள் அழகா பெரியதாகவும் மற்றும் பளபளப்பாக இருப்பதற்கும் ஆகும்.

ஆனால் நாம் மஸ்காரா பயன்படுத்துவதற்கு முன்னால் அதில் நிறைய கெமிக்கல் கலந்து இருக்கிறதா இல்லையா என்பதை பார்த்து பயன்படுத்த வேண்டும்.

மார்க்கெட்டில் கிடைக்கும் மஸ்காராவை காட்டிலும் நீங்கள் வீட்டில் தயாரித்து பயன்படுத்துவது சிறந்தது.
எனவே தான் உங்களுக்கு எளிய முறையில் வீட்டிலேயே மஸ்காரா எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்க போறோம்.

விட்டமின் ஈ ஆயில் மஸ்காரா
இந்த வீட்டில் தயாரிக்கும் மஸ்காரா உங்கள் கண்களை அழகாகவும் உங்கள் இமைகளை இயற்கையாகவே அடர்த்தியாகவும் ஆடம்பரமாகவும் காட்டும்.

செய்முறை
2 டேபிள் ஸ்பூன் செயலாக்கப்பட்ட கரித்தூளை எடுத்துக் கொண்டு அதில் 3-4 டேபிள் ஸ்பூன் விட்டமின் ஈ ஆயில் சேர்த்துக் கலக்க வேண்டும். இப்பொழுது 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் கலக்க வேண்டும். நன்றாக கலந்த கலவையை காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைக்க வேண்டும். 24 மணி நேரம் கழித்து இந்த மஸ்காராவை எப்பொழுதும் போல பயன்படுத்தலாம்.

பயன்கள்
விட்டமின் ஈ ஆயில் உங்கள் இமை முடிகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது மேலும் இமைகளை அடர்த்தியாக ஆடம்பரமாகவும் காட்டும். கற்றாழை ஜெல் உங்கள் இமைகளை ஈரப்பதத்துடன் எல்லா நேரமும் வைத்துக் கொள்ளும். செயலாக்கப்பட்ட கரித்தூள் உங்கள் இமைகளுக்கு தேவையான அடர்ந்த கருப்பு நிறத்தை கொடுக்க உதவுகிறது. இது மிகவும் எளிதான ரெசிபி இதை வீட்டிலேயே செய்து பலன் பெறலாம்.

களிமண் மஸ்காரா :

செய்முறை

4-5 டேபிள் ஸ்பூன் கருப்பு களிமண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் 1/2 டேபிள் ஸ்பூன் சிகப்பு களிமண்ணை சேர்த்து, 3-4 டேபிள் ஸ்பூன் கிளிசரின் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும். கிளிசரின் கிடைக்காவிட்டால் அதற்கு பதிலாக வெஜிடபிள் ஆயில் பயன்படுத்திக் கொள்ளலாம். நன்றாக கலந்த பிறகு 24 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு இதை மஸ்காரா டியூப்பில் அடைத்து எப்பொழுதும் போல் தினசரி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பயன்கள்
கருப்பு களிமண் உங்கள் இமைகளை எந்த விதத்திலும் பாதிக்காது. இது நீண்ட நேரம் மஸ்காரா அழியாமலும் கலையாமலும் இருக்க உதவுகிறது. சிவப்பு களிமண் உங்கள் இமைகளை அடர்த்தியாகவும் அழகாகவும் காட்ட உதவுகிறது. கிளிசரின் அல்லது வெஜிடபிள் ஆயில் உங்கள் இமைகளுக்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கிறது. சில பேர் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம் என்கின்றனர் ஆனால் தேங்காய் எண்ணெய் மஸ்காராவை எளிதாக உருக வைத்து விடும்.

கருப்பு கனிமத் தூள் மஸ்காரா

செய்முறை
இதற்கு கருப்பு கனிமத் தூள், கற்றாழை ஜெல், லாவண்டர் எண்ணெய் மற்றும் பெண்ட்டோனைட் களிமண் போன்றவை தேவைப்படுகிறது. இந்த பொருட்களை எல்லாம் சமமாக எடுத்து கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் கொஞ்சம் கற்றாழை ஜெல் சேர்த்தால் நல்ல கெட்டிப் பதம் கிடைக்கும். இதை ஒரு காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைக்க வேண்டும். பிறகு இதை தினமும் பயன்படுத்தலாம்.

பயன்கள்
லாவண்டர் ஆயில் உங்கள் இமை களில் ஏற்படும் தொற்றுகளை ஆற்றவும், கற்றாழை ஜெல் உங்கள் இமைகளுக்கு ஈரப்பதத்தையும் அளிக்கிறது. கருப்பு கனிமத் தூள் உங்கள் இமைகளை அடர்த்தியாகவும் அழகாகவும் மேலும் இமைகள் நன்றாக வளர்வதற்கும் உதவுகிறது. எனவே இதை நீங்கள் வீட்டில் எளிதாக செய்து விடலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை
இதை 2 மாதங்களுக்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது காலாவதியாகி விடும். எனவே 2 மாதங்களுக்கு ஒருமுறை மஸ்காராவை வீட்டில் தயாரித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதில் இயற்கையான பொருட்கள் பயன்படுத்துவதால் பாக்டீரியவால் கெட்டுப் போகாமல் இருக்க குளிர்ந்த மற்றும் வறண்ட இடத்தில் வைக்க வேண்டும். சூரியக்கதிர்கள் படாத இடத்தில் வைக்க வேண்டும். என்னங்க இந்த ரெசிபிகளை பயன்படுத்தி மஸ்காரா செய்து உங்கள் கண்களை கவர்ச்சிகரமாக ஆக்குவதோடு ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.