ஆண்களுக்கென்று தூக்கத்தில் விந்து வெளியேறுதல், விந்து நீர்த்துப்போதல், விறைப்பின்மை போன்ற பல அந்தரங்கப் பிரச்னைகள் இருக்கின்றன.
அப்படி ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளும் பின்வருமாறு
1. நீர் பிரிதலில் சிக்கல் – தாமரைப் பூவைப் பச்சையாகச் சிறிதளவு உண்டு வர தாராளமாய் நீர் பிரியும்.
2. மூத்திர எரிச்சல் – கரிசலாங்கண்ணி எனும் கீரையின் சாற்றை அளவுடன் குடித்து வரத் தீரும்.
3. விந்து வெளியேறல் – ஒரு குவளை பசும்பாலுடன் பேரிச்சம்பழங்கள் சிலவற்றைப் போட்டுச் சாப்பிட்டு வர குணமாகும்.
4. ஆண்மைக் குறைவு – இலுப்பைப் பூவை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை பெருகும்.
5. வெள்ளைபடுதல் – பழம்பாசி இலைகளைப் பசும்பாலில் விட்டு அரைத்துத் தொடர்ந்து இரண்டு வேளை காலையில் அளவாகப் பருகி வர நோய் விலகும்.