Home ஆண்கள் விந்து விரைவாக வெளியேறுவதால் ஏதேனும் பிரச்னை உண்டாகுமா?…

விந்து விரைவாக வெளியேறுவதால் ஏதேனும் பிரச்னை உண்டாகுமா?…

92

உடலுறவில் பலருக்கும் பல்வேறு வகையான சந்தேகங்கள் இருக்கும். சிலருக்கு பல பிரச்சனைகள் ஏற்படும். சிலர் பிரச்சனைகளே இல்லாத ஒன்றை பிரச்சனை என நினைத்து கொள்வார்கள். உடலுறவில் ஆண்கள் சரியாக ஈடுபடவில்லை என்றால், அவர்கள் எதோ குறைபாடு இருப்பதாக வருத்தப்பட துவங்குவார்கள்.

உடலுறவின்போது விநது மிக விரைவாக வெளியேறுவது பெரிய பிரச்னை என்றும் அதனால் தன்னால் உறவில் தன் துணையை திருப்திப்படுத்த முடியாது என்றும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில், பத்தில் இரண்டு ஆணுக்கு உடலுறவில் ஈடுபடும் போது விந்து முந்துதல் ஏற்படுகிறது.

அதாவது முன்கூட்டியே விந்து வெளிபடுதல். இதனால் உடலுறவில் நிலைத்து ஈடுபட முடியாமல் போவதால், இதை பெரிய பிரச்சனையாக கருதுகிறார்கள். உடலுறவில் ஈடுபடும் போது விந்துதள்ளல் அல்லது முன்கூட்டியே விந்து வெளிப்படுதல் என்பது உடல்நலக் கோளாறு அல்ல. இது மனநிலை மாற்றத்தால் ஏற்படுவது.

பெரும்பாலான ஆண்கள் உடலுறவில் அதிக நேரம் நிலைத்திருக்கவே விரும்புவார்கள். இதற்காக பல ஆண்கள் உடலுறவில் நிலைத்து செயல்பட மருந்து மற்றும் மாத்திரை போன்றவற்றை சாப்பிடுகிறார்கள். இவை தலைவலி, சோர்வு போன்ற பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக, இதயம், சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மருந்து மாத்திரைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மனதில் ஏற்படும் மாற்றங்களும் இது போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும். முன்கூட்டியே விந்துதள்ளல் ஏற்படுவது என்பது மன அழுத்தம் அல்லது மனநிலை சீர்குலைந்து காணப்படுவதால் ஏற்படும் ஒன்று. உடலுறவில் ஈடுபடும் போது மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும். இது ஆண்மை சார்ந்த குறைபாடில்லை.

விந்துதள்ளல் உணர்ச்சி சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஒன்று. இதற்கு மருந்துகள் தேவையே இல்லை. இது மிகவும் சாதாரணமாக ஏற்படக் கூடிய ஒன்று தான்.

முன்கூட்டியே விந்து வெளிப்படுதல் என்பதை பிரச்சனையாக கருதுபவர்கள் அதற்கான உடற்பயிற்சிகளை செய்யலாம்.

பெரும்பாலும் ஆண்கள் மத்தியில் இது ஏற்படுவதற்கு காரணம், உடலுறவு பற்றிய அறியாமையே காரணமாகிறது. விந்து வெளிப்படுதல் என்பது ஆண்கள் மத்தியில் சாதாரண ஒன்றாகவே கருதப்படுகிறது.