உடலுறவு கொள்வதில் இரண்டு முக்கிய நோக்கங்கள் உள்ளது.
அவை…
சிற்றின்ப விரக தாபத்தைத் தீர்த்துக்கொள்ள….
தங்களது இனத்தை விருத்தி செய்து கொள்ள…
இந்த இரண்டு விஷயங்களுமே, ஆண், பெண்ணின் உடல் நலத்தையும், விந்து, சுரோனித புஷ்டியையும் சார்ந்திருக்கின்றன.
மனிதனின் சுத்த ரத்தத்தினின்று சத்து வடிந்து விந்து உண்டாகிறது. ஒரு துளி விந்து உருவாக, 60 முதல் 70 துளி வரை ரத்தம் தேவைப்படுகிறது. விந்தானது கெட்டியாக இருந்தால் தான், உடலுறவுக்கு ஏற்றதாகக் கருதப்படும். அது நீர்த்துப்போன நிலையில் இருந்தால், உடலுறவுக்கு அந்த ஆண்மகன் தகுதியற்றவனாகிறான். அத்தகைய நீர்த்துப்போன விந்துவில்,. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அப்படிக்குறைவாக இருந்தாலும், அவற்றில் வீரியமுள்ள விந்தணுக்கள் மிகக் குறைவாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு விந்தணுக்களே இல்லாமல் போகலாம்.
இப்படி, விந்து, கெட்டித்து உண்டாகவும், நீர்த்துப்போகவும் காரணமாக இருப்பது நமது உணவுப்பழக்கம் தான். அதோடு உணவை செரித்து சக்தியாக மாற்றுகின்ற, உறுப்புகளின் பலத்தையும் தான் விந்;தின் தன்மை சார்ந்திருக்கிறது. பால், முட்டை, நெய், மாமிசம், பாலோடு, பாலாடைக்கட்டி, உளுந்து போன்றவை விந்தைக் கெட்டிப்படுத்தும் முக்கிய உணவுப்பொருட்களாகும்.
அதே சமயம், ஒருவன் என்னதான் புஷ்டியான, சத்தான ஆகாரத்தைச் சாப்பிட்டு வந்தாலும்., அவனது ஜீரண சக்தி பலவீனமாக இருக்கும் பட்சத்தில், உண்ணும் உணவு சரியான சத்துக்களாக மாறாது. கெட்டியான விந்தும் உருவாகாது. நல்ல ரத்தமும் ஊறாது. விந்து எவ்வளவுக்கு எவ்வளவு கெட்டியாக இருக்கிறதோ அந்த அளவிற்கு ஒரு ஆண்மகனுக்கு செக்ஸ் உறவில் நாட்டம் அதிகரிக்கும். அளவற்ற இன்பமும் உண்டாகும். அதே போல், அந்த விந்தில் இருந்து உருவாகும் குழந்தையும் பலசாலியாகவும், புத்திசாலியாகவும் விளங்கும்.
பெண்ணுக்கும் உடலுறவின் போது, ஆண் விந்தைப்போல, சுரோநிதம் என்ற ஒரு திரவம் சுரக்கும். பெண்ணுக்கு மாதவிடாய் வருவதும் அவளது ஆரோக்யத்தைக் குறிக்கிறது. அவளது மாதவிடாய் ரத்தமானது ரோஸ் நிறத்தில் இருந்தால், அவள் ஆரோக்யம் சரியாக இருப்பதாகவும், பெண்ணுறுப்பு எந்த நோயுமின்றி நன்றாக இருப்பதாகவும் கொள்ளலாம். அதே, மாதவிடாய் ரத்தம், மஞ்சளாகவோ, அல்லது கருஞ்சிவப்பாகவோ இருந்தால், அவளது ஆரோக்யம் பாதிக்கப்பட்டிருக்கிறது, பெண்ணுறுப்பும் நோய்த்தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது என்று அர்த்தம் கொள்ளலாம். எனவே, பெண்ணும் சத்தான ஆகாரம் உண்டு, நல்ல சிந்தனை, நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. அப்போது தான், மாதந்தோறும் உருவாகும் கருமுட்டை வீரியமிக்கதாக விளங்கும், நல்ல குழந்தையும் பிறக்கும்.