விந்தில் இரத்தத்தைப் பார்த்தால் அது எந்த மனிதனுக்கும் மிகவும் அச்சுறுத்தலான ஒரு விசயமாகத்தான் இருக்கும். விந்தில் இரத்தம் கலந்திருப்பது ஹேமடோஸ்பெர்மியா அல்லது ஹேமோஸ்பெர்மியா எனப்படுகிறது. விந்தானது இரத்தக்கறை படிந்த, இளஞ்சிவப்பு நிறத்தில் அல்லது பழுப்பு-சிவப்பு நிறத்தில் இருக்கலாம். இது எந்த வயதிலும் ஏற்படலாம், எனினும் இது 30 முதல் 40 வயதுள்ள ஆண்களுக்கு மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட புரோஸ்டேட் பெரிதான ஆண்களுக்கு பொதுவாக காணப்படுவதாகும்.
காரணங்கள் (Causes)
மருத்துவ இமேஜிங் மற்றும் ஆய்வுக்கூட சோதனை நுட்பங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, மருத்துவர்கள் 85% வரை ஹேமடோஸ்பெர்மியாவிற்கான காரணத்தைக் கண்டறிந்துவிடுகின்றனர்.
மிகவும் பொதுவான காரணங்கள் (கிட்டத்தட்ட 40%) நோய்த்தொற்று நிலைமைகள் தொடர்பானதாக இருக்கிறது. மற்றைய காரணங்களில் அழற்சி நிலைமைகள், புற்றுநோய் மற்றும் மருத்துவ நடைமுறைகள் ஆகியவை அடங்கும்.
A) நோய்த்தொற்றுகள் (Infections)
கிரான்-நேர்மறை மற்றும் கிராம்-எதிர்மறை சிறுநீர் தொற்று
பால்வினை நோய்த்தொற்றுகள் (எஸ்டிஐகள்) – பிறப்புறுப்பு ஹெர்பெஸ், மேக வெட்டை, கிளமீடியா மற்றும் ட்ரைக்கொமோனியாஸிஸ் உள்ளிட்டவை.
எக்கைனோக்கோக்கஸ் (அரிய)
மைக்கோநுண்ணுயிர் காசநோய் (அரிய)
சிஸ்டோசோமா (அரிய)
B) அழற்சி நிலைமைகள் (Inflammatory conditions)
விந்து பைகள் – விந்து பைகளில் (விந்தில் திரவத்தை உற்பத்தி செய்யும் சுரப்பிகள்) வீக்கம்
விரைமேல் நாளம் – விரைமேல் நாள வீக்கம்
புரோஸ்டேட் சுரப்பி – புரோஸ்டேட் சுரப்பி வீக்கம்
சிறுநீர்ப்பை வீக்கம் – சிற்றிடைவெளிக்குரிய சிறுநீர்ப்பை அழற்சி, இயோசினோபிலிக் சிறுநீர்ப்பை அழற்சி, வளர்ச்சியுறும் சிறுநீர்ப்பை அழற்சி.
C) மருத்துவ தலையீடுகள் (Medical interventions)
மூல நோய் மேலாண்மை ஊசிகள்
ஆண்குறி ஊசிகள்
புரோஸ்டேட் நடைமுறைகள் – புரோஸ்டேட் உடல் திசு ஆய்வு, கதிர்வீச்சு சிகிச்சை, குறும் சிகிச்சை, நுண்ணலை சிகிச்சை, புரோஸ்டேட் டிரான்சுரேத்ரல் வெட்டல்
சிறுநீர்க்குழாயில் உபகரணங்கள் பயன்படுத்தி சோதித்தல்
சிறுநீர்க்குழாயில் ஸ்டெண்டுகள் பயன்படுத்துதல்
D) நடத்தை (Behavioral)
அதிகப்படியான செக்ஸ் அல்லது சுயஇன்பம்
உடலுறவில் குறுக்கீடு
நாட்பட்ட பாலியல் தவிர்ப்பு
கரடுமுரடான உடலுறவு
E) புற்றுநோய் (Cancer)
சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய், புரோஸ்டேட், விந்து பைகள், விந்து தண்டு, விரை முனைப்பை மற்றும் விரைகள் முதலியவற்றில் ஏற்படும் தீங்கற்ற வீரியமிக்க கட்டிகள்.
F) பொது நோய்கள் (General diseases)
அமிலோய்டோசிஸ்
இரத்தம் வடிதல் சீர்கேடுகள்
நாள்பட்ட கல்லீரல் நோய்
கடுமையான கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தம்
எப்போது மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்? (When to consult a doctor?)
நீங்கள் விந்தில் இரத்தத்தை கவனிக்கும் போது, நீங்கள் சரியான ஆய்வு பெறுவதற்கு ஒரு மருத்துவரை பார்க்க வேண்டும். உங்கள் மருத்துவர் எத்தனை முறை விந்தில் இரத்தத்தை கவனித்தீர்கள், ஏதேனும் காயம் அல்லது கரடுமுரடான உடலுறவின் காரணமாக இது ஏற்பட்டதா மற்றும் தொற்று ஏற்படுவதற்கான குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றுகிறதா என்பன போன்ற கேள்விகள் கேட்பார். சில இரத்தப் பரிசோதனைகள் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்ள உங்களுக்கு அவர் ஆணையிடலாம்.
உங்கள் வயது 40 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்து வேறு எந்த அறிகுறிகளும் தோன்றவில்லை என்றால், இவ்வாறு ஏதேனும் ஒரு முறை அல்லது எப்போதேனும் ஏற்பட்டு சரியாகிவிட்டால் அல்லது உங்களுக்கு புரோஸ்டேட் சோதனை அல்லது வாசக்டமி செய்யப்பட்டவுடன் இவ்வாறு ஏற்பட்டால், நீங்கள் சிறப்பு மருத்துவர் ஆலோசனை பெறத் தேவையில்லை.
எனினும், உங்கள் வயது 40 ஆண்டுகளுக்கு மேல் இருந்து உங்களுக்கு உறுதியான அல்லது தொடர் அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது சில பரிசோதனைகளில் மிகவும் தீவிரமான அடிப்படை காரணம் இருக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டாலோ, உங்களது மருத்துவர் உங்களை மேலும் ஆய்வு செய்ய சிறுநீரக மருத்துவரை (சிறுநீரக அமைப்பின் நிலைகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர்) சந்திக்க பரிந்துரைப்பார். நீங்கள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் உங்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி திசு ஆய்வு மேற்கொள்ளவும் கேட்கப்படலாம்.
விந்தில் இரத்தம் ஏற்படுவதற்கு சிகிச்சை என்ன? (What is the treatment for blood in semen?)
விந்தில் இரத்தம் ஏற்படுவதன் அடிப்படை காரணத்தைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பல சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் சிகிச்சை ஏதும் தேவை இருக்காது. மேலும் இந்த பிரச்சினை தானாகவே சரியாகிவிடும். கண்டறியப்பட்ட காரணம் சார்ந்த குறிப்பிட்ட சிகிச்சைகள் பின்வருமாறு:
நுண்ணுயிர் கொல்லிகள்: நோய்த்தொற்று நிலைகளில் சிகிச்சை.
சில வகை வீக்கங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அழற்சி எதிர்ப்பு மருந்துகள்.
காயங்கள் மேலாண்மை: சிறு காயங்களுக்கு ஓய்வு மற்றும் கண்காணிப்புடன் சிகிச்சை தேவைப்படலாம். பெரிய காயங்களுக்கு இரத்தபோக்கை நிறுத்த தொடர்சிகிச்சைகள் அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
புற்றுநோய் அல்லது இரத்தப்போக்கு கோளாறு போன்ற தீவிரமான நிலைகளில், தகுந்த சிகிச்சைக்கு நீங்கள் சிறப்பு மருத்துவரை சந்திக்க பரிந்துரைக்கப்படுவீர்கள்.