Home அந்தரங்கம் வாரத்திற்கு ஒருநாள் செக்ஸ் ஆரோக்கியமானது: ஆய்வில் தகவல்

வாரத்திற்கு ஒருநாள் செக்ஸ் ஆரோக்கியமானது: ஆய்வில் தகவல்

29

ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கை மனிதர்களின் வெற்றிக்கு ஊக்க சக்தியாக இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். செக்ஸ் புத்துணர்ச்சி தரும் மன அழுத்தம் போக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் ஆரோக்கியமான ரசாயனத்தை உற்பத்தி செய்யும்.எனவே வாரத்திற்கு ஒருமுறையாவது தம்பதியர் தாம்பத்ய உறவில் ஈடுபடவேண்டும் என்கின்றனர்.

செக்ஸ் மூலம் மனிதர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் காதலுடன் உங்களின் துணையை அழுத்தமாக சில நிமிடங்கள் கட்டிப் பிடித்துக்கொண்டிருந்தாலே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பு கட்டுப்படுகிறதாம். அதேசமயம், ஆக்ஸிடோசின் சுரப்பு அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பான இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 75 முதல் 85 வயதுடைய நபர்களும் பங்கேற்றனர். ஆய்வின் போது அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் வாரத்திற்கு ஒருமுறை தாம்பத்ய உறவில் ஈடுபடும் தம்பதிகள் ஆரோக்கியமாகவும், சுறுப்பாகவும் காணப்படுவதாக தெரிவித்தனர். அதேசமயம் உறவில் ஈடுபடாத தம்பதிகள் உடல் சோம்பலாக இருப்பதாக கூறியுள்ளனர்.

30 வயதில் உறவில் ஈடுபடும் தம்பதியரை விட 55 வயதில் உறவில் ஈடுபடும் தம்பதியர் உடல் ஆரோக்கியம் சீராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது தெரியவந்தது. வயதானாலும் இறுதி காலம் வரை ஆரோக்கியத்தைப் பொருத்து உறவில் ஈடுபடவே பெரும்பாலான தம்பதியர் விரும்புகின்றனர் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?